http://thatstamil.oneindia.in/news/2008/04/03/tn-swc-presidents-advise-to-house-wives.html
நெல்லை: கணவன் அடித்தால திருப்பி அடியுங்கள், உடல் ரீதியான வன்முறைக்கு இடம் கொடுக்காதீர்கள் என்று குடும்பத் தலைவிகளுக்கு மாநில மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் கூறினார்.
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் நெல்லை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி இணைந்து குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் குறித்த கருத்தரங்கை நடத்தியது.
கல்லூரி வாளகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரகாஷ் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், பொருளாதார வன்முறை, பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். கணவன் மனைவியை அடிப்பது இயல்பானது என்றும் அன்பின் வெளிப்பாடு என்றும் கூறப்படுகிறது.
ஜாதி, சமயம், கடவுளின் பெயரால் பெண்களுக்கு சம உரிமை மறுக்கப்படுகிறது. ஆண்களுக்கு உரிய அத்தனை உரிமைகளையும் பெண்களுக்கும் வழங்க வேண்டும்.
அல்வாவும், பூவும் கொடுத்து பெண்களை சமாதானம் செய்து விடலாம் என்பது போன்ற காட்சிகள் திரைப்படங்களில் சித்தரிக்கப்படுகிறது.
போலி சாமியார்களை நம்பி பெண்கள் ஏமாந்து விடுகின்றனர். பெண் பிள்ளைகளுக்கு தைரியம் மற்றும் தன்னம்பிக்கையை ஊட்ட வேண்டும்.
குட்ட குட்ட குனிவதை தவிர்த்து எதிர்த்து நில்லுங்கள். கணவன் அடித்தால் திருப்பி அடியுங்கள். உடல் ரீதியான வன்முறைக்கு இடம் கொடுக்காதீர்கள். குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் என்றார் அவர். (ஆமாம். முழுத் தீர்வு கண்டு விடலாம்! ஏனென்றால் அந்தச் சட்டத்தின் மூலம் மனைவிமார்களுக்கு வன்முறையில் ஈடுபட முழு உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. எவ்வளவு கொடிய வன்முறையை மனைவிமார்கள் அவர்களுடைய கணவன் மற்றும் அவர்தம் பெற்றோர் மீது செய்தாலும் குடும்ப வன்முறைச் சட்டத்தின் அடிப்படையில் அவர்கள் மேல் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஏனெனில் வன்முறை என்பதை ஆண் தான் செய்வான். மனைவி ஒருவித வன்முறையும் செய்யமாட்டாள். இப்படித்தான் Prevention of Domestic Violence Act- ல் வறையறுக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த ஆண்குலத்தையும் காயடித்து வெத்து வெட்டாக ஆக்கி விடலாம்! வாழ்க பெண் விடுதலை. ஒழிக ஆணினம்!)
===========================
கணவன் அடித்தால் திருப்பி அடியுங்கள்- மகளிர் ஆணைய தலைவர் அட்வைஸ்
குறிச்சொற்கள் 498a, anti-male, biased laws, dv act, maintenance, அராஜகம், ஆண்பாவம், பொய் வழக்கு, வன்முறை
Subscribe to:
Post Comments (Atom)
6 மறுமொழிகள்:
ஏம்மா ராமாத்தா உனக்கு இந்த வேள ஏற்கனவே டவுரிகேச தப்பா பயன்படுத்தி பல குடும்பம் தாலிஅறுந்து தெருவுல நிக்குது இதுல நி வேற ஏன் அலப்பறைய கிளப்புற...
நீ பாட்டுக்கு சட்டம் இருக்கு திட்டம் இருக்குன்னு சொல்லிட்டு போயிடுவ அப்புறம் நாங்களும் உன்ன மாதிரி ஆளுங்க பேச்சகெட்டுகிட்டு பொய்கேசு போடுவோம்... அவனுவ என்னாடானா தொல்ல ஒளிஞ்சா போதும் நான் ஜெயில்ல போயி கிடந்தாலும் கிடக்குறேன்..போலிசுக்கு போன பொம்பளயோட வாழமாட்டென்னு சொல்லுரானுவோ..
போம்மா போ உன் புருசன் அடிச்சா திருப்பி அடி இல்லாட்டி டவுரி கேசு போட்டு உள்ள போடு ஏதாவது திரிய கொளித்திபோட்டு போயிடாத ஆத்தா...
தெரியத்தனமா பொய்கேசு போட்டு இதுக்கு செலவு செஞ்ச காசுல உண்மையிலேயே வரதட்சணை கொடுத்தாலே ஒரு நாலஞ்சி லட்சம் தேறும்.. உள்ளதும் போச்சிடா நொள்ளக்கண்ணன் கதையாவிட்டது என் கத...
இப்படிக்கு 498ஏ பொய்கேசு போட்டு நொந்து போனவள்...
ஐயோ என்ன இந்த அம்மா இப்படி போட்டு அடிக்கிறாங்க?
//கணவன் அடித்தால் திருப்பி அடியுங்கள். உடல் ரீதியான வன்முறைக்கு இடம் கொடுக்காதீர்கள். குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் என்றார் அவர். //
பொறுப்பான பதவியிலிருக்கும் இவர் அடித்தால் திருப்பி அடியுங்கள் என்று சொல்வது சட்டத்தை எல்லோரும் கையில் எடுத்துக் கொள்ளலாம் என்று அர்த்தமாகிறது. பிறகு போலிசும், நீதிமன்றங்களும் @#$%^@#-க் கொண்டுதான் இருக்கவேண்டும். அவர்களுக்கு வேலையே இல்லாமல் போய் விடும். பொம்பளை கையில பெரிய பொறுப்புகளையும்,பாதுகாப்பான சட்டங்களையும் கொடுத்தால் எப்படி கையாள்வார்கள் என்பதற்கு முழு உதாரணம் காட்டிவிட்டார் பெண்கள் நல வாரியத் தலைவி. தலைவி எவ்வழியோ "தொண்டிகளும்" அவ்வழியில்தான் போய் சீரழிவார்கள்.
//ஜாதி, சமயம், கடவுளின் பெயரால் பெண்களுக்கு சம உரிமை மறுக்கப்படுகிறது. ஆண்களுக்கு உரிய அத்தனை உரிமைகளையும் பெண்களுக்கும் வழங்க வேண்டும்.//
உரிமை அளவுக்கு அதிகமாக கொடுக்கப்பட்டு விட்டதால் தான் எப்படி பயன்படுத்துவதென்று தெரியாமல் தங்களையே அழித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். அதற்கு நல்ல உதாரணம் இப்போது மாமியார்கள் சங்கம் பெண்ணுரிமைக்குள்ளேயே தங்களுக்கு மற்றொரு உரிமையை தேடிக்கொண்டிருக்கிறார்கள். இதை விட கேவலம் வேறென்ன இருக்கப் போகிறது இந்த பெண்கள் நல வாரியத்திற்கு?
recent news
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=137524&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=
அதேநேரத்தில், நடிகைகளின் படங்களை ஆபாசமாகப் போட்டு பெண்ணினத்தையே வெறும் போகப்பொருளாகக் காட்ட முயலும்போதெல்லாம் பாயாத பெண்கள் வன்கொடுமைக்கு எதிரான சட்டம், சம்பந்தப்பட்ட செய்திக்காகப் பயன்படுத்தப்பட்டிருப்பது விசித்திரமாக இருக்கிறது. நடிகைகள் தங்களது ஒழுக்கத்தைப் பற்றிய விமர்சனத்துக்காக அந்தப் பத்திரிகையின்மீது தனித்தனியாக அவதூறு வழக்குப் போடலாமே தவிர, பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் எப்படி, ஏன், எதற்காக இந்தப் பிரச்னையில் கையாளப்பட்டிருக்கிறது என்பது புதிராக இருக்கிறது
இந்த வீடியோ இந்தியாவுல தமிழ்நாட்டுல நடக்குற மாதிரிதான் இருக்கு அவன் என்னதான் தப்பு செஞ்சிருந்தாலும ஒரு ஆண்போலிஸ் அவனை அடித்திருக்கலாம். இந்த பெண்ணுக்கு போலிஸ் என்கிறதுதான் பாதுகாப்பே தவிர இந்த பெணணின் வீரம் கிடையாது. இவர் போலீசாக மட்டும் இல்லையென்றால் இந்த பெண்ணின் நிலையை நினைத்துப்பாருங்கள் இவனிடத்தில்
உங்கள் கருத்தைத் தெரிவிக்க