மனைவியின் கள்ளக்காதலுக்கு கணவன் பணம் கொடுக்கவேண்டும்!

கள்ளக்காதல் விவகாரங்கள் பொங்கிப் பெருகி வரும் இன்னாட்களில் ஒவ்வொரு நாளும் பல புது ரக கள்ளக்காதல் லீலைகளும் வன்முறைகளும், கொலைகளும் வெளி வருகின்றன. இனிமேல் பத்திரிக்கைகள் திருமண விளம்பரங்கள் போடும் அளவிற்கு கள்ளக்காதல் ஜோடி கேட்டு விளம்பரங்கள் வெளிவரும் நாள் சீக்கிறமே வரலாம். அதற்குள் கள்ளக்காதல் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு, அதற்கு கணவனையே காரணமாக ஆக்கி, கள்ளக்காதல் இயக்கத் தலைவராக ஆச்சி (இல்லை, 'மறச்சி' - சரி ஏதோ ஒண்ணு!) மனோரமா நியமிக்கப்படும் நிலை வரலாம்.

இப்போதே தேசிய பெண்கள் ஆணையத்தில் (National Commission for Women) ஒரு மனைவி கள்ளக்காதலில் குழந்தைகள் பெற்றால் அந்தக் குழந்தைக்கும் சோரம் போன மனைவிக்கும் சேர்த்து அவளுடைய கணவன் தான் படியளக்கவேண்டும் என்று சட்டமியற்றும்படி கேட்டிருக்கிறார்கள். அதன் சுட்டி இதோ!

NCW wants maintenance even for adulterous wives and illegitimate children.

இப்போது ஒரு "கள்ளக்காதல் கத்திக் குத்து"க் கதையைப் படியுங்கள்:

மோகனூர் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலிக்கு கத்திகுத்து. கூலி தொழிலாளி கைது

மோகனூர், அக்.12- 2009 தினத்தந்தி

மோகனூர் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலியை கத்தியால் குத்தியதாக கூலி தொழிலாளியை மோகனூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள பரளி கிராமம் மல்லுமாச்சம் பட்டியை சேர்ந்தவர் தங்க வேல் (வயது 50). கூலி தொழிலாளி. இவருக்கு அடுத்த வீட்டில் வசிப்பவர் சித்ரா(25). இவரது கணவர் லட்சுமணன்(37).

இந்த நிலையில் தங்கவேலுவின் மனைவி இறந்து விட்டதாக தெரிகிறது. அவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இதை தொடர்ந்து பக்கத்து வீட்டை சேர்ந்த சித்ராவுடன் தங்கவேலுக்கு பழக்கம் ஏற்பட்டது . அது நாளடைவில் கள்ளகாதலாக மாறியது.

கள்ளக்காதலனுடன் ஓட்டம்

இதை அறிந்த லட்சுமணன் மனைவியை கண்டித்தார். இதனால் கணவர் மீது வெறுப்பு அடைந்த சித்ரா தங்கவேலுவை கூட்டி கொண்டு தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் தங்கவேலுவும், சித்ராவும் பரமத்தி வேலூர் அருகே உள்ள ஒரு கோழிப்பண்ணையில் வேலை செய்து வருவது லட்சுமணனுக்கு தெரியவந்தது.

குடும்பம் நடத்த அழைப்பு

இதை தொடர்ந்து லட்சுமணன் தனது உறவினர்களுடன் சித்ரா வேலைபார்க்கும் கோழிப்பண்ணைக்கு சென்று தனது மனைவியை குடும்பம் நடத்தவரும்படி அழைத்ததாக தெரிகிறது.

அதைத்தொடர்ந்து சித்ரா குடும்பம் நடத்த சம்மதித்ததால் அவரை மல்லுமாச்சம்பட்டிக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்தார்.

சித்ராவை தூக்கி சென்றார்

இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்கு வந்த தங்கவேல் சித்ராவை மறக்க முடியவில்லை என்றும் அவரை உல்லாசமாக இருக்கலாம் வா என அழைத்ததாக தெரிகிறது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதை தொடர்ந்து தண்ணீர் குழாயில் சித்ரா தண்ணீர் பிடித்து கொண்டு இருந்த போது அவரை அலாக்காக தங்கவேல் தனது வீட்டிற்கு தூக்கி சென்று அங்கு வைத்து அவரை ஆசைக்கு இணங்குமாறு அழைத்ததாக தெரிகிறது.

கத்திகுத்து

அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே தங்கவேல் தான் வைத்து இருந்த கத்தியை எடுத்து எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது என கூறி சித்ராவை உடலில் பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து உடனடியாக அவரை நாமக்கலில் உள்ள அரசு ஆஸ் பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

கூலி தொழிலாளி கைது

இதை தொடர்ந்து சித்ரா இது குறித்து மோகனூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கவேலுவை கைது செய்து அவரிடம் மேற் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

4 மறுமொழிகள்:

')) said...

இதொ இன்னொரு செய்தி தினமலரில்...

கோவை பெண் இன்ஜினியருக்கு சீனாவில் நடந்த கொடுமை: கணவர் சித்திரவதை செய்ததாக புகார்

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=13372

')) said...

25 வயது பெண்ணிற்கு 50 வயது கள்ளக்காதலன் தேவைப்படுகிறது பாருங்கள்!

கள்ளக்காதலுக்கு வயது உச்சவரம்பு வேண்டும் என்று மனோரமா அடுத்த போராட்டத்தை தொடங்குவாரோ!

')) said...

//காசு வாங்கிக்கிட்டு விபச்சாரம் பண்ணினாத்தானே போலீஸ் பிடிக்கும்.( அரசியல்வாதிகள் ஆதரவில்லாதவர்களை) ஆனா, அதையே வித்தியாசமா பண்ணினா..

ஒரு பணக்காரரை திருமணம் செய்து கொள்வது. அவரிடம் இருக்கும் காசு கரைந்தவுடன் இன்னொரு பணக்காரனைக் கல்யாணம் செய்வது. இப்படியே இட்லி, வடை, தோசை, பிட்ஸா, கிண்டெக்கின்னு ருசிக்கு ருசி... பணத்துக்கு பணம்... ஆனா, சமுதாயத்தில இவங்கதான் புரட்சிப் பெண்மணிகள். //


ஒய்விருக்கும் பொழுது இந்த வலைபூ பக்கத்திற்கு சென்று பார்வையிடவும்...

http://nerpumalar.blogspot.com/2009/10/blog-post_12.html#comment-form

')) said...

கள்ளகாதல் படுத்தும் பாடு