தோண்டித் துருவி விசாரிக்காமல் திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்காதீர்கள்

ஏனெனில் இப்போதெல்லாம் பல பிஞ்சிலேயே பழுத்து விடுகின்றன. பள்ளி செல்லும் நாட்களிலேயே காமக் களியாட்டங்கள் கோலாகலமாக நடக்கின்றன. இவைகளுக்குப் பெயர் காதலாம். இத்தகைய கலாசாரச் சீரழிவை சினிமாவும் ஊடகங்களும் திட்டம் போட்டுப் பரப்பி வருகின்றன. ஸ்கூல் யூனிஃபார்மிலேயே நடக்கும் கண்றாவிகளை ஊருக்கு ஒதுப்புறமான இடங்களிலும், வள்ளுவர் கோட்டம் போன்ற பொது அரங்குகளிலும், பார்க்குகளிலும் தினமும் பார்க்க முடிகிறது.

தங்கள் குழந்தைகளின் எண்ண ஓட்டங்களையும் செக்ஸ் சார்ந்த நடவடிக்கைகளையும் பற்றி பெற்றோர்களுக்கு அறவே தெரியாது. அவர்கள் ஒரு கற்பனை உலகில் இருப்பார்கள். ஆகையால் அவர்கள் கொடுக்கும் உருவகத்தை வைத்துக் கொண்டு முடிவெடுக்காதீர்கள். "ரோஜா" படத்தில் வருவதுபோல் வெகு சிலர்தான் தகுந்த நேரத்தில் வெளியில் சொல்வார்கள். பல பெண்கள் கல்யாணம் ஒரு பக்கம், கள்ளக்காதல் ஒரு பக்கம் என்று இருந்து விடலாம் என்று திட்டமிட்டு கமுக்கமாக இருப்பார்கள். இன்னும் சில கேசுகளில் பெற்றோருக்கு இத்தகைய பொருந்தாக் காதல்கள் தெரியவந்தபின் கூட கல்யாணம் ஆகிவிட்டால் சரியாகப் போய்விடும் என்று முடிவெடுத்து, மொத்தத்தையும் மறைத்து ஒரு ஆண்மகனைப் பலிகடா ஆக்குவார்கள்.

ஆகையால் ஆண்களும் அவர்களுடைய பெற்றோர்களும் திருமணம் பற்றிய முக்கிய முடிவெடுக்குமுன் உஷாராக நன்கு தீவிரமாக விசாரித்தபின் முடிவெடுக்க வேண்டும். ஜோசியக்காரர்களை நம்பாதீர்கள். ஜோசியம், ஜாதகம் என்பதெல்லாம் வெறும் புரட்டு. அதை வைத்து மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்துகிறது ஒரு கும்பல். அவர்களால் சீரழிந்த குடும்பங்கள் ஏராளம்.

இனி இந்தக் காதல் காவியத்தைப் படியுங்கள்:-

நாளை திருமணம் நடைபெற இருந்த இளம்பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம்.

2 மாதமாக தாலியை மறைத்து வைத்து பெற்றோருடன் வசித்தார்

கோபிசெட்டிபாளையம், அக். 31 - 2009 - தினத்தந்தி

நாளை திருமணம் நடைபெற இருந்த இளம்பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம் அடைந்தார். இவர் 2 மாதங்களாக தாலியை மறைத்து வைத்து பெற்றோருடன் வசித்து வந்து உள்ளார்.

இளம்பெண்

கோபியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். அவருடைய மகள் லட்சுமி (27) (பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது) 10-ம் வகுப்பு வரை படித்து உள்ள இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார்.

லட்சுமிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த அவருடைய பெற்றோர், பல்வேறு இடங்களில் மாப்பிள்ளை தேடினார்கள்.

அப்போது பவானியைச் சேர்ந்த குமார் என்பவருக்கும், லட்சுமிக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு, கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. லட்சுமி-குமாரின் திருமணம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகளை லட்சுமியின் பெற்றோர்கள் தீவிரமாக செய்து வந்தனர். உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு அழைப்பிதழும் கொடுக்கப்பட்டு வந்தது.

மாயம்

இந்த நிலையில் வேலைக்கு சென்ற லட்சுமி கடந்த 26-ந் தேதி இரவு வீட்டிற்கு வரவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்க வில்லை.

எனவே லட்சுமியின் பெற்றோர் இது குறித்து கோபி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் லட்சுமியை தேடி வந்தனர். லட்சுமி வீட்டை விட்டு திடீரென்று மாயமான தகவல் மாப்பிள்ளையின் வீட்டாருக்கு கிடைத்ததால், அவர்கள் திருமணத்தை நிறுத்தி விட்டனர்.

காதலனுடன் தஞ்சம்

இந்த நிலையில் லட்சுமி நேற்று மாலை கோபி போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது அவருடன் வந்தவரை, தான் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினார். இது தொடர்பாக லட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணை குறித்து போலீசார் கூறும் போது,

லட்சுமி வேலை செய்து வரும் பனியன் கம்பெனியில் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவரும், லட்சுமியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்து உள்ளனர்.

இந்த நிலையில் லட்சுமிக்கு, அவருடைய பெற்றோர்கள் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கியதால், லட்சுமியும், முத்துப்பாண்டியும் கடந்த ஆகஸ்டு 25-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். மேலும் அவர்கள் தாங்கள் திருமணம் செய்து கொண்டதை வக்கீலின் மூலம் திருமண ஒப்பந்தம் செய்து உள்ளனர்.

தாலி மறைப்பு

லட்சுமி, தான் காதல் திருமணம் செய்து கொண்டது, பெற்றோருக்கு தெரியக் கூடாது என்பதற்காக வீட்டிற்கு வரும் போது தாலியை கழற்றி மறைத்து வைத்து உள்ளார். இதனால், அவருடைய காதல் திருமணம் பெற்றோருக்கு தெரியவில்லை என்று போலீசார் கூறினர்.

மகள் திருமணம் செய்தது கூட தெரியாமல், அவளுக்கு மாப்பிள்ளை தேடி நிச்சயம் செய்த பெற்றோர், மாயமான மகள் போலீஸ் நிலையத்திற்கு வந்து இருப்பது குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது லட்சுமி பெற்றோரை பார்க்காமல் முகத்தை திருப்பி வைத்து கொண்டார். இதை பார்த்த அவருடைய பெற்றோர்கள், "உன்னை நம்பி கல்யாண ஏற்பாடு செய்தோம். இப்படி தலை குனிய வைத்து விட்டாயே!" என்று கூறி கதறி அழுதனர்.

காதலனுடன் சென்றார்

காதல் திருமணம் செய்து கொண்ட லட்சுமி தன்னுடைய காதல் கணவன் முத்துப்பாண்டியுடன் வாழப் போவதாக உறுதிப்பட தெரிவித்ததால், போலீசார் முத்துப்பாண்டியுடன் லட்சுமியை அனுப்பி வைத்தனர். (சரி, நிச்சயதார்த்தம் செய்த ஆண் மற்றும் அவனுடைய பெற்றோர் அடைந்த அவமானத்திற்கும், மனச் சஞ்சலத்திற்கும் யார் பதில் சொல்வது? இதையே அந்த ஆண் செய்திருந்தால் அவனைக் கைது செய்திருப்பார்கள்!)

5 மறுமொழிகள்:

')) said...

//இன்னும் சில கேசுகளில் பெற்றோருக்கு இத்தகைய பொருந்தாக் காதல்கள் தெரியவந்தபின் கூட கல்யாணம் ஆகிவிட்டால் சரியாகப் போய்விடும் என்று முடிவெடுத்து, மொத்தத்தையும் மறைத்து ஒரு ஆண்மகனைப் பலிகடா ஆக்குவார்கள்.//

ஆமாம் இதுபோல் நடப்பது தான் பெருங்கொடுமை... செங்கல்பட்டில் தொழில்அதிபர் ஒருவரோரு ஒடிப்போக இருந்தவரை.. 498ஏ மனைவியின் தாயர் என் காலில் விழந்து கதறி நானும் பெரிய முதல்மரியாதை சிவாஜியைபோல் தலையாட்டி தற்பொழுது 498ஏ வரதட்சணை வழக்கில் மாட்டி முழிக்கின்றேன்... அழுதுபுலம்புவது துதிபாடுவது எதையும் நம்பமால் திர விசாரித்து திருமணம் செய்வது சாலச்சிறந்தது... இல்லாவிடில் என்னைப்போல் 498ஏ புற்றுநோயில் அவதிபடிவேண்டியதுதான்...

')) said...

//சரி, நிச்சயதார்த்தம் செய்த ஆண் மற்றும் அவனுடைய பெற்றோர் அடைந்த அவமானத்திற்கும், மனச் சஞ்சலத்திற்கும் யார் பதில் சொல்வது? இதையே அந்த ஆண் செய்திருந்தால் அவனைக் கைது செய்திருப்பார்கள்!//

ஒரு பதிலும் கிடையாது... ஆனால் இவர்கள் இதுபோல் ஒடுகாளிக்கூட்டத்தில் மாட்டாமல் திருமணத்திற்கு முன்பெ தப்பிதற்கு பெரும்புண்ணியம் செய்திருக்கவேண்டும் இல்லவிடில் எங்களைப்போல் 498ஏ புற்றுநோய்தாக்கி சிறைசென்று மனஉலைச்சலில் நொந்து சாக வேண்டியதுதான்...

')) said...

இதோ ஒரு கணவனை கொன்ற அபலை பேராசிரியர் வாக்குமுலம் (பாவம் அந்த கணவனுக்கொ சனிமுலம்)... கடைசியல் ஒரு உயிர் பிரிந்ததுதான் மிச்சம்.
படித்துப்பாருங்கள் இந்த சம்பவத்தை

http://thatstamil.oneindia.in/news/2009/10/31/tn-college-lecutrer-kills-her-hubby-for-refusing.html

Anonymous said...

ஆண்பாவம் (நிச்சயதார்த்தம் செய்த ஆண்) பொலாதது என்று இந்த சமுதயம் தெரிந்து கோளும்வரை இது நீடிக்கும்!!!!

')) said...

இதனால் தான் எனக்கும் திருமணம் என்றாலே பயமாக இருக்கிறது,,,,
இதை சொன்னா பெரியே பத்தினி மாதிரி பேசுவாங்க,,,,,