எ‎ன்னே ஒரு அமர காதல் காவியம்!

வயதுக்கு வந்த இரண்டு பெண் குழந்தைகளின் தாய் இந்த 40 வயது முதிய தாய்க்குலம். இவருக்கு (ஒரு மரியாதை வேண்டாம்!) தன் கணவருடனுடனும் இரண்டு பெண் குழந்தைகளுடன் சேர்ந்து வாழும்போதே, ஒரு 20 வயது இளைஞனின் கலவிச் சுகம் தேவைப்பட்டது. இதை “கள்ளக்காதல்” என்றோ “கள்ள உறவு” என்றோ அழைக்கக் கூடாதாம்! பின்னே எப்படி அழைப்பது? தொடுப்பு என்கலாமா? அந்தக் காலமாக இருந்தால் “அவிசாரி” என்று சொல்லிவிடுவார்கள். இப்போது அதுபோல் சொன்னால் பெண்ணியவாதிகள் கோபப்படுவார்கள். எந்த எழவோ, போங்கள்!

லைலா - மஜ்னு, அம்பிகாபதி - அமராவதி போன்ற அமரக் காதல் காவியங்களின் வரிசையின் முன்னணியில் வைத்துப் போற்றப்படத்தக்க இந்த தெய்வீகக் காதல் கதையை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்!

உசிலம்பட்டி அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்தது பெண் சாவு; வாலிபர் கவலைக்கிடம்.

எழுமலை, நவ.27 - 2009. செய்தி - தினத்தந்தி

உசிலம்பட்டி அருகே 40 வயது பெண், 21 வயது ஆண் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்தனர். இதில் (கள்ளக்)காதலி (!) மரணமடைந்தார். காதலன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கோவை மில்லில் காதல்

மதுரை மாவட்டம் எழுமலை அருகே உள்ள டி.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சின்னன் மகன் திருமலை(வயது 21). இவர் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்தார். அதே மில்லில் அந்த பகுதியை சேர்ந்த செல்வராஜ் மனைவி விஜயாவும் (40) வேலை பார்த்தார்.

செல்வராஜ்-விஜயா தம்பதிக்கு பிளஸ்-2, 9-ம் வகுப்பு படிக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் திருமலைக்கும், விஜயாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.

இவர்களின் தொடர்பு தெரிய வந்ததும், செல்வராஜ் தனது மனைவியை கண்டித்தார். இருப்பினும் அவர் கேட்கவில்லை. திருமலையுடன் உள்ள தொடர்பை துண்டிக்கவில்லை. இதனால் அங்கு பிரச்சினை அதிகரித்தது.

இதையடுத்து, திருமலையும், விஜயாவும் கோவையில் இருந்து கிருஷ்ணாபுரம் வந்தனர். இங்கு வசிக்க திட்டமிட்டனர். ஆனால் இங்கும் குடும்பத்தினரும், உறவினர்களும் அவர்களை ஏற்க மறுத்தனர். அவர்களது காதல் பற்றி சுற்றுப்பகுதியினர் கேலியாக பேசினர். (அதுபோல் பேசலாமா? என்னடா உலகம் இது!)

விஷம் குடித்தனர்

இதனால் கள்ளக்காதல் ஜோடி மனம் உடைந்தது. மீண்டும் கோவைக்கும் செல்ல முடியாது. இங்கும் வாழ முடியாது. இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்த காதல்ஜோடி இறுதியில் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தது.

அதன்படி நேற்று அருகே உள்ள மொட்டமலைக்கு திருமலையும் விஜயாவும் சென்றனர். அங்கு விஷம் குடித்துவிட்டு மயங்கிக் கிடந்தனர்.

நேற்று காலை அப்பகுதிக்கு சென்றவர்கள் இதைப்பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் இருவரும் மீட்கப்பட்டு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி விஜயா உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் திருமலை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து எம்.கல்லுப்பட்டி போலீசில் கணவர் செல்வராஜ் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரவிச்சந்தர், சப்-இன்ஸ்பெக்டர் ரமாராணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=529873&disdate=11/27/2009&advt=2

1 மறுமொழி:

')) said...

இதற்கெல்லாம் காரணம் அந்த கணவர் தான். மனைவியை வெளியே விடாமல் மூன்று வேளையும் சோறுபோட்டு வீட்டில் ஒரு டிவி பெட்டியையும் வாங்கிவைத்து தினமும் வரும் சீரியல்களை பார்க்கவைத்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா?