சென்னை : தினமலர் - நவம்பர் 20,2009
"புகார் மேல் புகார் கொடுத்து இஷ்டம் போல் ஆட்டிப் படைக்கும் பெண்களிடமிருந்து விடுபட, தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்' என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு ஆண் கள் பாதுகாப்பு சங்கம், சென்னையில் ஆர்ப்பாட் டம் நடத்தியது. நாடு முழுவதும் ஆண்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் தங்களின் கோரிக் கைகளை வலியுறுத்தி, சென்னை மெமோரியல் ஹால் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
சங்கத்தின் மாநில தலைவர் அருள் துமிலன் தலைமை வகித்தார். "பெண்கள் கொடுக்கும் போலியான வரதட்சணை புகார்களின் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது; வரதட்சணைக் கொடுமையில் சிக்கும் அரசு ஊழியர் களை பணி நீக்கம் செய்யக் கூடாது; கள்ளக்காதல் கொலைகளைத் தடுக்க இந்திய தண்டனைச் சட்டம் 497ல் திருத்தம் செய்து, ஆண், பெண் இருவருக்கும் தண்டனை வழங்க வேண்டும். புகார் மேல் புகார்களைக் கொடுத்து இஷ்டம் போல் ஆட்டி வைக்கும் பெண்களிடமிருந்து விடுபட, தேசிய ஆண்கள் ஆணையத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்; இந்திய கலாசாரத் திற்கும், குடும்ப அமைப்புகளுக்கும் எதிராக 2005ல் கொண்டு வரப்பட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்' என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், ஏராளமான ஆண்கள் பங்கேற்றனர்.
சங்கத்தின் தலைவர் அருள் துமிலன் பேசுகையில், "சமூகத்தில் ஆண்களுக்கு பெண்களால் ஏற்படும் கொடுமைகள் அதிகம். ஆண்கள் வெளியில் சொல்வதில்லை. சொன்னாலும் நிவாரணம் கிடைப்பதில்லை. பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு சங்கத் தின் மூலம் சட்ட உதவியும், பாதுகாப்பும் தருகிறோம். ஆண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் சங்கம் தொடர்ந்து ஈடுபடும். தேசிய ஆண்கள் ஆணையம் அமைய வேண்டியதன் அவசியத்தை மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்' என்றார்.
பொய்ப் புகார் கொடுத்து ஆட்டிப் படைக்கும் பெண்கள் : விடுபட தேசிய ஆண்கள் ஆணையம் தேவை
குறிச்சொற்கள் 125, 498a, aimwa, anti-male, biased laws, commission for men, men's day, ஆண்கள் தினம், பொய் வழக்கு
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
உங்கள் கருத்தைத் தெரிவிக்க