என்னை 'டார்ச்சர்' செய்யும் பெண்ணை என்ன செய்வது?

ஹலோ தோழியே ..! (தினமலர் 2-11-2009)

என்னை 'டார்ச்சர்' செய்யும் பெண்ணை என்ன செய்வது?

பெண்கள் தான் ஆண்களால் பாதிக்கப்படுகின்றனர் என்று சொல்வது தவறு; ஆண்கள் பலரும், பெண்களால் பாதிக்கப்படுகின்றனர் என்ற அர்த்தத்தில், பாதிக்கப்பட்ட வாசகர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். இனி அவர்...

எனக்கு திருமணமாகி எட்டு மாதமாகிறது. நான் எம்.ஏ., எம்.பில்., முடித்துள்ளேன். பெண் பார்க்கும் போது, அவளது வெள்ளை நிறத்தில் மயங்கிய நான், மற்றவற்றை பற்றி விசாரிக்கத் தவறிவிட்டேன். பெண் டிகிரி படித்திருப்பதாக கூறினர். எனக்கு அப்பா, அம்மா கிடையாது. அதனால், என்னை எதைப் பற்றியும் யோசிக்க விடாமல் அவசர அவசரமாக தேதியை குறித்து திருமணம் செய்து வைத்தனர்.

முதலிரவிலேயே எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவள் கன்னித்தன்மையோடு இல்லை. விசாரித்த போது, அவள் ஏற்கனவே திருமணமானவள் என்பது தெரியவந்தது. எட்டாவது மட்டுமே படித்து இருக்கிறாள். அவர்களது கிராமத்திலேயே ஒருவனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இவள் அவனை, "டார்ச்சர்' செய்து, அவனை பைத்தியக்காரனாக்கிவிட்டு ஓடி வந்துவிட்டாளாம். இதைப்பற்றி, திருமணத்துக்கு முன் யாரும் என்னிடம் எதுவும் கூறவில்லை.

இருந்தும், தாலி கட்டிய பாவத்திற்காக அவளோடு வாழ்ந்தேன். ஆனால், தற்போது, என்னையும், "டார்ச்சர்' செய்கிறாள். இவளைப் போன்ற பெண்களுடன், எந்த ஆணாலும் வாழமுடியாது. ஒவ்வொரு நாளும் நரக வேதனையாக உள்ளது. இனியும் இவளுடன் சேர்ந்து வாழமுடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

இப்படிப்பட்ட பெண்களும் இருக்கத்தானே செய்கின்றனர்? பின், ஏன் இந்த சமூகம் எதற்கெடுத்தாலும் ஆண்களையே குறை சொல்கிறது? இவளை நான் விவாகரத்து செய்வது முறைதானே? இதில் தவறொன்றும் இல்லையே! வழிகாட்டுங்கள் தோழிகளே' என்று, பெயர் வெளியிட விரும்பாத வாசகர் ஒருவர் கடிதம் எழுதியிருக்கிறார்.

என்ன தோழியே... இந்த வாசகருக்கு வழிகாட்ட விருப்பமா? எடுங்கள் பேனாவை! எழுதுங்கள் எங்களுக்கு...

ஹலோ தோழியே, தினமலர், 219, அண்ணா சாலை சென்னை 600 002.

3 மறுமொழிகள்:

')) said...

பார்ட்டி நகையோடு எஸ்கேப்! ஆனா போலீஸ்டெசன் போன வரதட்சணை கேட்டு விரட்டிவிட்டான்னு கேசு போட்டு உள்ள புடிச்சி போட்டுடுவாங்க!

தினமலரில் வெளியான செய்தியை படித்து பாருங்கள்.

http://www.dinamalar.com/district_main.asp?ncat=Chennai#252795

2.திருமணமான இரண்டு மாதத்தில் நகைகளுடன் இளம்பெண் மாயம்

')) said...

ஐயோ தலைவா! இது என்னோட கதை மாதிரி இருக்கு!

நானும் இதுபோல வெள்ளைத்தொல பாத்து ஏமாந்து போனேன்... பொண்ணு BBA படிச்சிருக்குன்னு சொன்னாங்க ஆனா கொய்யால 10வது கூட தாண்டல... செங்கல்பட்டில் உள்ள ஒரு "தொழில் அதிபருடன்" காதலுக்கு மரியாதை செய்ய இருந்தவரை என் காலில் விழுந்து கதறி அவசரஅவரசமா கல்யாணம் பண்ணி முனே மாசத்துல அவசரஅவசரமா டவுரி கேசு போட்டு எல்லரையும் உள்ள புடிச்சி போட்டதுதான் மிச்சம்...

வைகைப்புயல் வடிவேலு ஒரு திரைப்படத்தில் சொல்வது போல்.. "SAME BLOOD"

')) said...

இதொ கள்ளக்காதலில் ஒரு பெண் காவலர் கொலை... ஒழுக்கமற்ற உறவுகளினால் உயிர்பலி.

படித்துப்பாருங்கள் இந்த கன்றாவிக்கூத்தை (தினமலரில் வெளியான செய்தி)

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=5526

மற்றும் அந்த செய்திக்கு அருமையான பின்னுட்டம் மிட்ட ஒரு சகோதரியின் கருத்து!

இந்த பெண், முதல் கணவரை விவாகரத்து செய்துள்ளார் (கொடுத்து வைத்தவன்!). காதலித்து (?) திருமணம் செய்த இரண்டாவது கணவருக்கும் துரோகம் இழைத்துள்ளார். ஆயுள்தண்டனை கைதியுடன் கள்ளத்தொடர்பு கொண்டிருந்தது மட்டுமன்றி, அவரைப்பற்றி அரசுக்கும் தகவல் தராமல், தான் வகிக்கும் சட்டத்தைக் காக்க வேண்டிய ''காவல்துறை''க்கும் துரோகம் இழைத்துள்ளார். மற்றொரு பெண்ணின் கணவரைக் கைக்குள் வைத்திருந்ததனால், அப்பெண்ணிற்கும் துரோகம் இழைத்துள்ளார். எனவே இவருக்கு சரியான தண்டனையே கிடைத்துள்ளது. ஆனால், இவரை காதலித்து மணந்த இரண்டாவது கணவரும், அவரது குழந்தையும்தான் பரிதாபத்துக்குரியவர்கள்.