கணவனைக் கொல்ல மனைவிக்கு சட்டப்படி உரிமை தேவை

கனவனை மனைவி கொன்றால் அது குற்றமல்ல என்னும் சட்டத்திருத்தம் உடனடியாக கொண்டுவரப்பட வேண்டும். இதற்காக அனைத்து பெண்ணியவாத அமைப்புக்களும் கட்டாயம் பாடுபடவேண்டும். தற்போதுள்ள சட்டங்களின் அடிப்படையில் திருமணமான ஏழு ஆண்டு காலத்தில் மனைவி இறந்தால் அது கணவன் மற்றும் அவனது பெற்றோர் செய்த கொடுமையால்தான் என்று அனுமானிக்கபட்டு, ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. யாரேனும் அது வரதட்சணை போன்ற கொடுமையால்தான் நிகழ்ந்தது என்று சந்தேகப்பட்டாலும் படாவிட்டாலும், முன்தீர்மானம் செய்து கொண்டு அவர்களைத் தண்டிக்க வேண்டும் (presumptive Section 113B of the Evidence Act) என்பது சட்டம்.

தவிர குடும்ப வன்முறைக் குற்றங்களிலிருந்து மனைவிக்கு முழுவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிரது. D.V.Act என்னும் குடும்ப வன்முறைச் சட்டத்தின் கட்டமைப்பின்படி கணவன் முகத்தைத் திருப்பிக் கொண்டாலோ, கேள்விக்கு பதில் கூறாமல் இருந்தாலோ, மனைவியின் எந்த ஒரு தேவைக்கும் - அது உபயோகமற்ற டம்பாசாரித் தேவையாயிருந்தால் கூட - பணம் கொடுக்க மறுத்தாலோ அது குடும்ப வன்முறையாகக் கருதப்பட்டு கணவன் தண்டிக்கப்படுவான். ஆனால் மனைவி கணவனை அடித்தாலும், வெட்டினாலும், கெட்ட வார்த்தை கொண்டு திட்டினாலும், உணவிட மறுத்தாலும், பிறரோடு ஒப்பிட்டு தன்மானத்தை இழக்கும் வகையில் மனம் புண்படுத்தினாலும், கணவன் எதிரிலேயே இன்னொருவனுடன் செக்ஸ் உறவு கொண்டாலும் அந்த மனைவி என்னும் புனித பிம்பத்தின்மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க சட்டத்தில் இடமே கிடையாது! ஏனெனில் ஆணென்பவன் பிறவியிலேயே ஒரு கிரிமினல். வன்முறை என்பதை அவன் தான் செய்வான்; பெண்ணுக்கு செக்ஸ் ஆசையே கிடையாது; வெறிபிடித்தலைபவன் ஆணே. பெண் ஒரு அபலை. மெல்லியலாள். ஒரு பாவமும் அறியாதவள். அவள் கொலை செய்தால் கூட அவளைக் கொலை செய்யத் தூண்டியவர்கள் மிதுதான் குற்றம். இதுதான் இத்தகைய ஒருதலைச் சார்புச் சட்டங்களை இயற்றியவர்கள் மற்றும், அதற்கு ஒருபடி மேலேயே போய் தீர்ப்பளிப்பவர்கள் ஆகியோர் மனத்தில் பதிந்துள்ள கருத்தியல்.

ஆனால் இது போதாது. மனைவியின் பலவகைப்பட்ட (variety) செக்ஸ் தேடலுக்காக கள்ளக்காதல் அவசியம் தேவையாய் இருக்கிறது. ஒரே புருஷனுடன் எத்தனை நாள் இருப்பது. அதனால் அந்த புதுமைப் பெண்ணுக்கு மாற்று சுகம் கிட்ட வைக்கும் கடமை கணவனுக்கு உண்டு என்பதை இந்த சமுதாயம் இன்னும் அங்கீகரிக்காமல் இருப்பதே ஒரு ஆணாதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடு.

மேலும் அப்படி கள்ளக்காதலில் ஒரு மனைவி ஈடுபடும்போது அவளுடைய முட்டாள் கணவன் அதை எதிர்த்தால் அவனைத் தீர்த்துக் கட்ட வேண்டியிருக்கிறது. அதனால் இப்போதுள்ள ஆணாதிக்க சட்டங்களின் அடிப்படையில் கணவனை மனைவி கொல்வது குற்றமாகக் கருதப்படுகிறது. அதனால் மனைவிக்கு குற்றவாளி என்னும் பட்டம் சூட்டப்படுகிறது. இது அபாண்டம். இதை எதிர்த்து பெண்ணிய அமைப்புக்கள் கட்டாயம் போராட வேண்டும். தற்போது ஆச்சி மனோரமா அம்மையார்தான் இதைக் கையிலெடுத்துப் போராடத் துணிந்திருக்கிறார்கள் அதற்காக தற்கால முழு விடுதலை பெற்ற இளம் பெண்கள் பலர் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

மேலும் தமிழக பெண்கள் வாரியத் தலைவர் ராமாத்தாள் அவர்களும் மணமான பெண்கள் இன்னொருவனோடு உறவு வைத்துக் கொள்வதை "கள்ளக்காதல்" என்று அழைக்கக் கூடாது என்று கூறியிருக்கிறார். இது மிகவும் சமூக முக்கியத்துவம் வாய்ந்த கூற்று. இத்தகைய அணுகுமுறை பெண்களின் விடுதலைக்கும் பெண்கள் முன்னேற்றத்திற்கும் வெகுவாகப் பயனளிக்கும் என்பது திண்ணம்.

ஆகையால் சீக்கிரமே கண்வனைக் கொல்ல மனைவிக்கு முழு சுதந்திரம் அளிக்கும் சட்டம் இயற்றப்படும் என்று எதிர்பார்த்து, கணவனை மண்ணெண்ணை ஊற்றிக் கொன்ற வீராங்கனையைப் பற்றியும், கோழைத்தனமாக தற்கொலை செய்து கொண்ட ஒரு கணவன் பற்றிய செய்தியையும் இங்கு இடுகிறேன்.

அவர்களின் சாவுக்கு மனைவிகளின் நடத்தைதான் காரணம் என்று நீங்கள் எண்ணினால் அது உங்களது ஆணாதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடு எனவும், அவ்வாறு எண்ணியதற்காக நீங்கள் சீக்கிறமே சிறைக்குச் செல்ல நேரிடும் என்றும் எச்சரிக்கப்படுகிறீர்கள்!

இப்போது செய்திகள்:-

1. உலக ஆண்கள் தினத்தன்று போலீஸ் அதிகாரி மனைவியால் கொளுத்தப்பட்டார்
செய்தி: டெக்கான் கிரானிக்கிள் (http://www.deccanchronicle.com/national/asi-set-fire-wife-intl-mens-day-751)

ஒரு சிறிய வாய்த் தகராறினல் கோபப்பட்டு ஒரு போலீஸ் அதிகாரியின் மனைவி கணவன் மீது மண்ணெண்ணையை ஊற்றிக் கொளுத்தி விட்டார். இது நடந்தது 19-11-2009 வியாழனன்று.

மனைவியால் இது போல் தீ வைத்து எறிக்கப்பட்டவர் 52 வயதான பலவந்த் பவார் எனப்படும் உதவி சார்-கண்காணிப்பாளர் (Assistant Sub-Inspector). கொளுத்தப்பட்ட அவர் தன் உடலின் 85% பகுதி எறிந்த நிலையில் ஔரங்காபாதிலுள்ள அரசு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்.

இந்த தீவைக்கும் நிகழ்வு உலக ஆண்கள் தினத்தன்று நடந்தது ஒரு முரண்நகையே!

முதல்நாள் இரவு அவர்கள் இருவருக்குமிடையே ஏதோ வாக்குவாதம் நடந்ததாகவும், மறுநாள் கணவன் வீட்டுக்குள் நுழைந்ததும் மனைவி அவர்மேல் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துவிட்டதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

அந்த கணவன் வேலை பார்ப்பது MIDC Cidco காவல் நிலையம்

========================================

2.

காரிமங்கலம் அருகே புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை
போலீசார் விசாரணை

காரிமங்கலம்,நவ.21 - 2009. தினத்தந்தி

காரிமங்கலம் அருகே புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுமாப்பிள்ளை

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள மொளப்பனஅள்ளியை சேர்ந்தவர் காவேரி. விவசாயி. இவரது மகன் காளியப்பன்(வயது 22). இவருக்கும் காரிமங்கலம் அருகே உள்ள பாறையூரைச் சேர்ந்த சித்ரா(19) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. காளியப்பனுக்கு வயிற்று வலி இருந்து வந்ததாக தெரிகிறது.

நேற்று முன்தினம் காளியப்பனின் பாட்டி இறந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த காளியப்பன் மனைவி சித்ராவிடம் சாப்பாடு கொண்டு வரும்படி கேட்டதாக தெரிகிறது. சித்ரா கணவருக்கு சாப்பாடு கொடுக்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. மேலும் வயிற்று வலியும் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி கிடந்தார்.

பரிதாப சாவு

வீட்டில் இருந்து வெளியில் வந்த சித்ரா, கணவர் காளியப்பன் மயங்கி கிடப்தை கண்டு அதிர்ச்சி அடைந்து அருகில் சென்று பார்த்துள்ளார். அப்போது அவருக்கு அருகில் பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் இருப்பதை கண்டு தனது மாமனார் காவேரிக்கு தகவல் கொடுத்தார். அவர் வந்து காளியப்பனை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=528612&disdate=11/21/2009&advt=2

1 மறுமொழி:

')) said...

மனைவியை ரூ.35ஆயிரத்துக்கு பணயம் வைத்து சூதாடிய கணவன்!!!

இதில் மயங்கிய உஷா வெங்கடேசுடனே தங்கிவிட்டார்.!!!!!!!!!!!!!!

http://mukkiaseidhigal.blogspot.com/2009/11/35.html
/இதை கேட்டதும் உஷா அதிர்ச்சி அடைந்தார். வரமாட்டேன் என்று அழுது புரண்டார். ஆனாலும் இருவரும் அவனை ஒரு ஆட்டோவில் ஏற்றி பக்கத்து ஊரில் உள்ள தங்களது வீட்டிற்கு இழுத்துச்சென்றனர். இதனால் பாலாஜி செய்வதறியாது திகைத்தார்.

வெங்கடேஷ் உஷாவை தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று நன்றாக கவனித்தார். விதவிதமான உணவு வகைகள் கொடுத்தார். நிறைய புடவைகள், நகைகள் வாங்கி கொடுத்தார். இதில் மயங்கிய உஷா வெங்கடேசுடனே தங்கிவிட்டார்./