தேவை கள்ளக்காதல் காப்பீட்டுத் திட்டம்!

Disclaimer:

ஏழை எளிய மக்களின் துயர் துடைக்க தமிழக அரசு தொடங்கியிருக்கும் "கலைஞர் காப்பீட்டுத் திட்டத்"திற்கும் இந்த இடுகைக்கும் தொடர்பு இல்லை. அதைக் குறைவு படுத்தும் நோக்கில் இந்த இடுகை எழுதப்படவில்லை.

எதெதெற்கோ இன்ஷ்யூர் செய்கிறார்கள். திருமணமான ஒரு கணவன், தன் மனைவியின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கிறான் என்ற காரணத்தினால் என்றைக்கு மனைவி கையால் சாகடிக்கப் போகிறானோ தெரியாது. அதனால் திருமணம் செய்துகொள்ளும் ஒவ்வொரு ஆண்மகனுக்கும் ஒரு சிறப்பு காப்பீடு தேவை. அதாவது, கள்ளக்காதல் வெறியின் மேலீட்டால் கொலை செய்யப்படும் கணவனின் குழந்தைகள், பெற்றோர், உடன்பிறப்புகளுக்கு நிவாரணம் வழங்கவும், மற்றும் ஜீவனாம்சம், மெயின்டெனென்ஸ், 498A, DV Act போன்ற கேசுகளிலிருந்து கணவர்களை பாதுகாக்கவும், மேலும் கள்ளக்காதலைத் தேடி மணமான பெண்கள் அலைவதன் காரணம் கணவனின் ஆண்மைத்தன்மை (இதற்கு என்ன விளக்கம் என்பதை மனோரமா அம்மையாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்) குறைவுதான் என்று கூறி ஒட்டுமொத்த ஆண்குலத்தையுமே இழிவு படுத்தும் மனோரமாவிடமிருந்து கணவர்களைக் காப்பாற்றவும், அவசியம் ஒரு "கள்ளக்காதல் காப்பீட்டுத் திட்டம்" தேவை. அப்போதுதான் எதிர்வரும் ஆண் சிசுக்கொலை நிகழ்வுகளிலிருந்து சமூகத்தைக் காப்பாற்ற முடியும்!

மேலும் கள்ளக்காதலன் கூட கணவன் போல் கண்ட்ரோல் செய்ய எத்தனித்தால் அவனையும் இந்தப் புதுமைப்பெண்கள் போட்டுத் தள்ளி விடுகிறார்கள். என்றாலும் கள்ளக் காதலனுக்கும் காப்பீடு வேண்டும் என்று கேட்பது ரொம்ப ஓவர். அதனால் கணவனுக்கு மட்டும் இப்போது கேட்போமே!

இப்போது கள்ளக்காதலினால் கணவனைக் கொலை செய்த காரிகை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பிடிபட்ட கதையைப் படியுங்கள்.

சிவகிரி, நவ.2 - 2009. தினத்தந்தி

சிவகிரி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, காதலனுடன் சேர்ந்து பெண் கொலை செய்தார். 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கொலையில் துப்பு துலங்கியது.

கள்ளத்தொடர்பு

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள குலவிளக்கு நத்தக்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது45), விவசாயி. இவரது மனைவி பொன்னாத்தாள். இவருக்கும், திருப்பூர் மாவட்டம் முத்தூரை சேர்ந்த மர அறுப்பு மில் அதிபர் தங்கவேல் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது.

இவர்களது கள்ளத் தொடர்பு பொன்னாத்தாளின் கணவர் சண்முகத்திற்கு தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர் பொன்னாத்தாளை கண்டித்தார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

விவசாயி கொலை

இந்த நிலையில் கடந்த 12-3-2000 அன்று கரூர் மாவட்டம் தென்னிலை அருகே உள்ள மொஞ்சனூரில் சண்முகம் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது பிணத்தை தென்னிலை போலீசார் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து தீவிர புலன் விசாரணை நடத்தி வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் போலீசார் அந்தப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த ஒரு நபரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில், அவரது பெயர் முருகேசன் என்ற முகிலன் என்பதும், முத்தூரில் உள்ள தங்கவேலின் மர அறுப்பு மில்லில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் முகிலன் முத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீடு புகுந்து கைவரிசை காட்டி வந்ததும் தெரியவந்தது.

தீ வைத்து...

அவரிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தினார்கள். அப்போது மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. குலவிளக்கு நாத்தக்காடு பகுதியை சேர்ந்த விவசாயி சண்முகத்தை, தானும், சண்முகத்தின் மனைவி பொன்னாத்தாள், மாமனார் ரங்கசாமி, மகள்கள் செல்வி என்கிற அச்சுதா, வசந்தி, கள்ளக்காதலன் தங்கவேல் ஆகியோரும் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொலை செய்து, அவரது உடலை டிராக்டரில் கொண்டு வந்து மொஞ்சனூர் பகுதியில் தீ வைத்து எரித்து விட்டு தப்பி சென்றதையும் விசாரணையில் அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் முகிலனை சிவகிரி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்லமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து முகிலனை கைது செய்தனர்.

வலைவீச்சு

கொலை வழக்கில் தலைமறைவாக இருக்கும் பொன்னாத்தாள், அவரது கள்ளக் காதலன் தங்கவேல், தந்தை ரங்கசாமி, மகள்கள் செல்வி என்கிற அச்சுதா, வசந்தி ஆகிய 5 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவனை கொலை செய்த சம்பவத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு துப்பு துலங்கி இருப்பது அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

3 மறுமொழிகள்:

')) said...

கள்ளக்காதல் இன்சுரன்ஸ் பாலிசி விரைவில் எதிர்பார்கலாம் என்று நினைகின்றேன்...

இதொ ஒரு கள்ளக்காதலியின் நவின கொலை முயற்சி! படித்துப்பாருங்கள் தினமலரில் வெளியான செய்தியை!
"உட்காந்து யோசிப்பாங்களோ??"

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=13762

')) said...

திருச்சி அருகே, கள்ளக்காதலுக்காக, பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியை கடத்தி, எச்.ஐ.வி., பாதித்தவரின் ரத்தத்தை, அவரது உடலில் செலுத்த முயன்ற வழக்கில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய பெண் கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்...

செய்தி இங்கே

விவரம் இங்கே

')) said...

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைக் கொலை செய்த பத்தினியின் வாக்குமூலம்:-

கணவனை கொலை செய்தது எப்படி? என்று கைது செய்யப்பட்ட சண்முகத்தின் மனைவி பொன்னாத்தாள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

கையும்-களவுமாக சிக்கினோம்

என்னுடைய கணவர் சண்முகத்தின் நண்பர் தங்கவேலு. மரம் அறுக்கும் மில் அதிபர். தொழில் விசயமாக அடிக்கடி என் கணவரை சந்திக்க எங்கள் வீட்டுக்கு வருவார். முதலில் பார்க்கும் போது சிரிக்கின்ற அளவில் தொடங்கிய எங்கள் பழக்கம், நாளடைவில் வளர்ந்தது. எனது கணவர் இல்லாத நேரங்களிலும் வர ஆரம்பித்தார். என்னாலும் அவரை பார்க்காமல் இருக்க முடியவில்லை. இதனால் இருவரும் கள்ளக்காதலர்களாக மாறி அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்டு வந்தோம்.

இந்த நிலையில் ஒருநாள் நானும், தங்கவேலும் தனிமையில் உல்லாசமாக இருந்தபோது, திடீரென எனது கணவர் சண்முகம் வீட்டிற்கு வந்து எங்களை கையும், களவுமாக பிடித்துவிட்டார். தங்கவேலுவிடம் எனக்கு துரோகம் செய்து விட்டாயே? இனிமேல் இந்த வீட்டிற்கு நீ வந்தால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டினார்.

கொலை செய்தோம்

நான் தவறு செய்ததை பார்த்த நாளில் இருந்து என்னையும் கொலை செய்துவிடுவதாக எனது கணவர் மிரட்டி வந்தார். அப்போது என்னுடைய கணவருக்கு தெரியாமல் தங்கவேல் என்னை வந்து சந்தித்தார். அவர் என்னை மிரட்டும் விசயத்தை அவரிடம் கூறினேன். எனது கணவர் தங்கவேலுவை கொல்லும் வரை நமக்கு நிம்மதி கிடையாது. அதுவரை உங்களையும் நான் தனிமையில் சந்திக்க முடியாது என்று அவரிடம் கூறினேன்.

கவலைப்படாதே உனது கணவரை கொன்று விடலாம் என்று எனக்கு தங்கவேல் நம்பிக்கை கூறினார். மேலும் எனது கணவர் எங்கு படுத்து தூங்குவார் உள்ளிட்ட விவரங்களையும் கேட்டு தெரிந்து கொண்டார். பின்னர் அவரிடம் வேலை பார்த்த முகிலன் என்பவருடன் சம்பவத்தன்று இரவில் வந்தார். நான் தயாராக எடுத்து வைத்திருந்த அரிவாளை முகிலன் கையில் கொடுத்தேன். தூங்கிக்கொண்டிருந்த எனது கணவரின் தலைப்பகுதிக்கு நைசாக சென்ற முகிலன் என் கண் முன்னாலே எனது கணவரின் கழுத்தில் 3 முறை வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் எனது கணவர் அந்த இடத்திலேயே துடிதுடித்து செத்தார்.

பிணத்தை எரித்தோம்

பின்னர் பிணத்தை ஒரு சாக்குமூட்டையில் கட்டி பூமேடு என்ற இடத்திற்கு கொண்டு சென்று எரித்து விட்டு யாருக்கும் தெரியாமல் வந்து விட்டோம். ஆனால் என கணவரை வெட்டிய முகிலன் வேறொரு வழக்கில் போலீசில் பிடிபட்டதால், இந்த உண்மைகளை உளறிவிட்டான்.

இவ்வாறு பொன்னாத்தாள் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.