பணம் கேட்டு மாமனாரை மிரட்டிய மருமகளுக்கு வலைவீச்சு

பெண்ணியவாதிகள் “போராடிப்” பெற்ற பொய்வழக்கு சட்டங்கள் எதற்குப் பயன்படுகின்றன பாருங்கள்?

வரதட்சணை முறை ஒழிய வேண்டுமானால், வரதட்சணை கேட்போரையும் கொடுப்போரையும் ஒருங்கே கைது செய்து சிறையிலடைக்க வேண்டும். குற்றம் நடந்த உடனேயே இரண்டு பேரையும் கைது செய்து வழக்கு நடத்தி தூக்கில் போடவேண்டும். இப்பொது உள்ளதுபோல் சாவகாசமாக ”ஒரு கல்ப கோடி காலம் முன் என்னிடம் வரதட்சணை கேட்டர்கள். நானும் கொடுத்தேன்” என்று புகார் கொடுப்போரை உடனே கைது செய்யவேண்டும்!

தற்போது உள்ள 498A சட்டம், திருமணம் நடந்து பல ஆண்டுகள் கழித்து கள்ளக்காதல், மிரட்டிப் பணம் பறித்தல், தனிக்குடித்தனம் போன்ற காரணங்களுக்காக பொய் வழக்கு போட்டுப் பணிய வைக்கத்தான் இந்தச் சட்டம் பயனபடுகிறது. பெண்கள் துயர் துடைக்கவோ, வரதட்சணை முறையை ஒழிக்கவோ இச்சட்டங்கள் பயன்படுவதில்லை.

இனி செய்தி:

மாலைமுரசு - மதுரை. நவ. 28, 2009

மதுரையில் ரூ. 5 லட்சம் கேட்டு மாமனாரை மிரட்டிய மருமகளை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை எச்.எம்.எஸ் கலனியை சேர்ந்தவர் எஸ்.ஏ.ராஜன் (62). இவரது மகன் சீனிவாசன். இவருக்கும் சீதா பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே சீதாபிரியதர்ஷினிக்கு ஏற்கனவே 2003-ம் ஆண்டு திருமணமாகி இருப்பது தெரியவந்தது.

இதனால் இவருக்கும் சீனிவாசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில் எச்.எம்.எச் காலனி வீட்டில் சீனிவாசனின் தந்தை ராஜன் இருந்தார். அப்போது சீதாபிரியதர்ஷனி மற்றும் சில பெண்கள் நுழைந்தனர்.

வீட்டில் நுழைந்த சீதாபிரியதர்ஷினி ராஜனிடம் ரூ. 5 லட்சம் கேட்டு மிரட்டினார். கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இது குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் ராஜன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சீதாபிரியதர்ஷினியை வலைவீசி தேடி வருகின்றனர்.

1 மறுமொழி:

Anonymous said...

முதலில் அரசாங்கம் செய்ய வேண்டியது வரதட்சனை புகார் கொடுத்த பின் அந்த மனைவியை வழக்கு முடியும் வரை மகளிர் பாதுகாப்பு இயக்கத்தில் வைக்க உத்தரவிட வேண்டும் . வரதட்சனை கொடுத்தேன் என கூறும் மனைவி வீட்டாரையும் உடனே கைது செய்ய வேண்டும் .