இதற்கு முந்தைய இடுகையைப் படித்தீர்கள் அல்லவா. அதுபோல் 498A பொய் வழக்கில் எக்ஸ்ட்ராவாக சிறிது அஜால்குஜால் மசாலா சேர்க்கும் அளவிற்கு கற்பனை வளமில்லாத ஒரு வக்கீலை இந்த நங்கை மடவன்னம் அணுகியதால் கீழ்க்காணும் ஸ்டாண்டர்ட் டெம்பிளேட் புகார்தான் போட்டிருக்கிறார்.
ஆனால் இந்த 498A டெம்பிளேட்தான் 95% பொய்க் கேசுகளில் பயன்படுத்தப்படுகின்றன.
உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? இன்னும் 498A பேய் பிடிக்கவில்லையா? கவலையை விடுங்கள் இந்த சீக்கு தற்போது பன்றிக் காய்ச்சலைவிட வெகுவேகமாகப் பரவி வருகிறது. ஆனால் ஒரு வேறுபாடு. காய்ச்சல் ஒருத்தர் ஒருத்தராகத்தான் பிடிக்கும். ஆனால் 498A கேசு குடும்பத்தில் உள்ள மொத்தப் பேரையும் ஹோல்சேலாக ஒரே கட்டில் அடைத்துவிடும்!
இப்பொது செய்தியைப் படித்துவிட்டு "பெண்கள் பாவம், ஒரு பாவமும் அறியாத பேதைகள்" என்று உரக்க கோஷமிடுங்கள்!
சாத்தூர் கோர்ட்டில் புகார்;
கூடுதல் வரதட்சணை வாங்கிவர மறுத்த புதுப்பெண் சித்ரவதை
கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு
விருதுநகர், நவ.6 - 2009. தினத்தந்தி
சாத்தூர் அருகே கூடுதல் வரதட்சணை வாங்கி வர மறுத்த புதுப்பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
சாத்தூர் அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 30). இவர் சாத்தூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனக்கும், சென்னை திருவான்மியூரை சேர்ந்த மளிகைக் கடை வியாபாரி ராமச்சந்திரன் என்பவக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது எனது பெற்றோர் 10 பவுன் நகை மற்றும் சீர்வரிசை செய்தனர்.
ஆனால் கடந்த சில மாதங்களாக எனது கணவர் கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு என்னிடம் வற்புறுத்தி வந்தார். நான் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் எனக்கு சாப்பாடு போடாமல் சித்ரவதை செய்தார். எனவே இந்த சித்ரவதைகளை தாங்க முடியாமல் நான் எனது தாய் வீட்டுக்கு வந்து விட்டேன். இந்த சித்ரவதைக்கு உடந்தையாக மாமனார் காசிபெருமாள், மாமியார் சரோஜா, நாத்தனார் கலாராணி, அவரது கணவர் சங்கர் ஆகியோர் உள்ளனர். எனவே இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மகாலட்சுமி தனது மனுவில் கூறியிருந்தார்.
5 பேர் மீது வழக்கு
வழக்கை விசாரித்த மாஜிஸ் திரேட்டு, இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு சாத்தூர் அனைத்து மகளிர் போலீசுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் ராமச்சந்திரன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
ஒட்டுமொத்த குடும்பத்தின் மீதும் 498A
குறிச்சொற்கள் 498a, anti-male, biased laws, extortion, misuse, ஆண்பாவம், பொய் வழக்கு
Subscribe to:
Post Comments (Atom)
2 மறுமொழிகள்:
ஆண்களாய் பிறப்பது பாவம் !!!
//ஒட்டுமொத்த குடும்பத்தின் மீதும் 498A //
ஒட்டுமொத்த குடும்பத்தின் மீது மட்டுமல்ல.. திருமணத்திற்கு வந்த உறவினர்கள் நண்பர்கள் யாரையும் விட்டுவைப்பதில்லை இந்த 498ஏ ஆயுதத்தை பயன்படுத்தும் நச்சுப்பாம்புக்கூட்டம்.
பன்றிக்காய்சலில் இருந்து தப்பிக்க மூக்கை துணியால் முடிக்கொண்டு செல்வதுபோல்.. இனிமேல் திருமணத்திற்கு செல்லும் பொழுது முகமுடிஅணிந்து செல்லவேண்டும் இல்லவிட்டால் திருமணத்திற்கு வந்தவர்களையும் கைது செய்து சிறையில் அடைக்கலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்க