திருவண்ணாமலையில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவிக்கு கொலை மிரட்டல்.
கணவன் மீது போலீசில் புகார்
திருவண்ணாமலை, அக்.30- 2009 - தினத்தந்தி
திருவண்ணாமலை அருகே உல்லாசத்துக்கு மறுத்த மனைவியை கொலை செய்து விடுவதாக மிரட்டிய கணவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அடுத்த பெருமணம் கிராமத்தை சேர்ந்தவர் அரிகரன் (வயது 25). இவருக்கும் ஜெயலட்சுமி (19) என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் ஜெயலட்சுமி திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
கொலை மிரட்டல்
எனது கணவர் அரிகரன் தினமும் குடித்து விட்டு என்னை அடித்து துன்புறுத்துகிறார். நேரம் காலம் பார்க்காமல் உல்லாசத்துக்கு அழைக்கிறார், மறுத்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்.
இதனால் அவரை விட்டு பிரிந்து தாய் வீட்டுக்கு வந்து விட்டேன். கணவர் வீட்டில் உள்ள எனது சீர்வரிசை பொருட்களை மீட்டு தர வேண்டும்.
5 பேர் மீது வழக்கு
என்னை சித்ரவதை செய்த கணவர் அரிகரன், அதற்கு துணையாக இருந்த மாமனார் வீராசாமி, மாமியார் பூங்கோதை, அரிகரனின் தம்பி சரவணன், அவரது மனைவி விமலா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்டவாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இப்படியும் வழக்கு போடுவார்கள், உஷார்!
குறிச்சொற்கள் 498a, biased laws, dv act, extortion, misuse, பொய் வழக்கு
Subscribe to:
Post Comments (Atom)
2 மறுமொழிகள்:
திருமணமே செய்யாதீர்கள் ! அதுவே ஆணுக்கு சுதந்திரம் ! என்பதை தற்போதுள்ள பெண்கள் மறுபடி மறுபடி பாடம் சொல்லி கொடுத்தும் ஆண்யினத்திற்கு புத்தி வருவது போல் தெரியவில்லை ???
//திருவண்ணாமலையில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவிக்கு கொலை மிரட்டல்.
கணவன் மீது போலீசில் புகார்//
உட்காந்து யோசித்ததில் கிடைத்த புது டெம்ப்லட்... இங்கு உல்லாசம் என்பது "உல்லாசம்" திரைப்படத்திற்கா...?
உங்கள் கருத்தைத் தெரிவிக்க