கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்திய பெண் தீக்குளித்து தற்கொலை

கணவனை வேண்டாம் என்று உதறிவிட்டு கள்ளக் காதலனுடன் குடித்தனம் நடத்தியவள், கள்ளகாதலனுடன் சண்டை போட்டுச் செத்தாலும், ஒரிஜினல் புருஷன்தான் குற்றவாளி எனக்கருதி அவன் மீது விசாரணை நடத்துவார்களாம். ஏனென்றால் திருமணமான ஏழு ஆண்டுகளுக்குள் மனைவி இறந்தால் அது வரதட்சணைக் கொடுமையால்தான் என்ற முன்முடிவுடன் கணவனையும் அவனது பெற்றோரையும் குற்றவாளிகள் என்ற அனுமானத்துடன் (Section 498A & 304B of IPC and "Presumptive Section" 113-B of the Indian Evidence Act) ஆர்.டி.ஓ விசாரணை நடக்கவேண்டும். இதுதான் இந்தியச் சட்டங்களின் கேவல நிலைமை. பெண்டாட்டி கள்ளக்காதலனுடன் ஓடிப்போன கொடுமை போதாதென்று இந்தக் கேவலம் வேறு அவனுக்கு!

ஐயமிருந்தால் நான் மேற்குறிப்பிட்டிருக்கும் சட்டப் பிரிவுகளைப் பற்றி கூகிளில் தேடிப்பாருங்கள்.

நிச்சயம் அனைத்து ஆண்களும் திருமணம் செய்துகொண்டு இத்தகைய இன்பங்களை துய்க்கவேண்டும்!

இந்தச் செய்தியின் முடிவில் இருக்கிறது அந்த கொடுங்கோனமை சட்ட நடவடிக்கை.

ஆலந்தூர், நவ.1- 2009. தினத்தந்தி

திருமணமான 4 மாதத்தில் கணவனை விட்டு கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்திய பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 19). இவருடைய மனைவி சுபா (18). இவர் தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக செத்தார்.

இது பற்றி பள்ளிக்கரணை போலீசுக்கு தகவல் வந்தது. மடிப்பாக்கம் உதவிக்கமிஷனர் சங்கரபாண்டியன், பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் தினகரன் ஆகியோர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது பற்றி விசாரணை நடத்தியபோது பல தகவல் கிடைத்தன. திண்டிவனம் அருகே உள்ள வெள்ளிமேடு பேட்டையை சேர்ந்தவர் சுபா. இவருக்கும் காஞ்சீபுரத்தை சேர்ந்த சசிக்குமார் என்பவருக்கும் கடந்த ஜுன் மாதம் 25-ந் தேதி திருமணம் நடந்தது. பின்னர் ஆடி மாதம் சுபாவை திண்டிவனம் அழைத்து வந்தனர்.

அப்போது சுபாவுக்கு அதே பகுதியை சேர்ந்த ரமேசுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இது பற்றி அங்குள்ள போலீசில் புகார் செய்யப்பட்டது. அப்போது சுபா தனது கணவருடன் செல்ல விருப்பம் இல்லை. காதலன் ரமேசுடன் வாழ்வேன் என்று கூறினார்.

இதையடுத்து சுபா, காதலனுடன் கடந்த 2 மாதத்திற்கு முன்பு பள்ளிக்கரணை வந்து குடும்பம் நடத்தினார். இதற்கிடையே கூலி வேலை செய்யும் ரமேஷ், சுபாவை வேலைக்கு செல்லுமாறு கூறினார். இதற்கு சுபா மறுப்பு தெரிவித்தார். இதனால் சுபா, ரமேஷ் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சுபா வீட்டில் தீக்குளித்தார். இதை கண்ட ரமேஷ், சுபாவை காப்பாற்ற சென்றார். அப்போது அவரும் படுகாயம் அடைந்தார். 2 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சையின்றி சுபா பரிதாபமாக செத்தார்.

மேற்கண்ட தகவல்கள் விசாரணையில் வெளியாயின. இது பற்றி பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக ஆர்.டி.ஒ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

4 மறுமொழிகள்:

')) said...

அடக்கொடுமையே!

Anonymous said...

மிக அழகான செய்தி, " நாங்கள் அப்படித்தான் இருப்போம், ஆனால் கணவன் தான் அதற்கு பொறுப்பு, எங்களுக்கு சட்டமும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்." இதுவே பெண்ணியவாதிகளின் கருத்தாக இருக்கும். - தூங்குவது போல் சுயலாபத்திற்க்காக நடிப்பவர்களை எழுப்ப முடியுமா ?

')) said...

இதுபோல் கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்களுக்கு தகுந்த மானியம் வழங்க அரசு ஏற்பாடு செய்யவேண்டும்! மற்றும் 498ஏ பொய்வழக்கு போட்டு குடிஅழிக்கும் பத்தினி தெய்வங்களுக்கு அரசு செலவில் வீடு மற்றும் உடன் தங்க அவர் விருப்பபடுகின்ற முன்னால் பின்னால் இன்னால் காதலன் ஆகியோரும் உடன் தங்கலாம் மற்றும் கரண்ட் பில், வாட்டர் பில், குவாட்டர் பில் போன்றவற்றிற்கு ஆடித்தள்ளுபடியும் வழங்க வேண்டுமென மகளிர் ஆணையத்துக்கு 498ஏ புற்று நோய் வந்த கூட்டம் பரிந்துரை செய்கின்றது...ORDER ORDER ORDER!

')) said...

தந்தைகள் அற்ற சமுதாயம்! தந்தை அரவணைப்பு இல்லாமல் வளரும் குழந்தைகள்! ஒழுக்கமற்ற உறவு! 498ஏ பொய்வழக்கில் குடிஅழிக்கும் பத்தினிகள், மன உலைச்சல் மற்றும் பணவிரயம் போன்ற பல சமுதாய சீர் மிகு செயல்களை செய்து இந்திய பாராம்பரியத்தை(?????????) கட்டிக்காப்பத்தும் பெண்தெய்வங்கள் நாட்டில் பெருகி வளர வேண்டுகிறோம்.

வாழ்க கள்ளக்காதல்! வாழ்க 498ஏ பொய்வழக்கு பத்தினிகள்!