துப்புத் துலக்கும் செல்ஃபோன்கள்

உங்கள் எல்லோருக்கும் தெரியும் "தி ஹிந்து" ஒரு தீவிர பெண்ணியவாதம் பேசும் (Ultra-feminist) நாளிதழ் என்பது. இதுபோன்ற பெண்ணியவாத ஊடகங்கள் பெரும்பாலும், "மனைவி கணவனைக் கத்தியால் குத்திக் கொலை செய்தாள்" என்ற செய்தியைக்கூட "மனைவி தன் கையில் கத்தியுடன் இருக்கும்போது அந்த கொடுமைகாரக் கணவன், தன் மனைவிமீது கொலைப்பழி விழவேண்டும் என்னும் தீய எண்ணத்தில் அந்தக் கத்திமீது தன் கழுத்து சரியாகப் பாயும் வகையில் விழுந்து மாண்டான்" என்றுதான் எழுதுவார்கள்!

அத்தகைய செய்தி வெளியாகும்போது, இன்னொரு பக்கத்தில் ஒரு ஆஸ்தான பெண்ணிய எழுத்தாளர் பெயரில் ஒரு பாஷ்யக் கட்டுரை வெளியாகும். அது "இதுபோல் தன்னை மனைவி கையால் மாய்த்துக் கொண்டு பெண்ணினத்திற்கு மாசு கற்பிக்கும் போக்கு ஆண்டாண்டு காலமாக பெண்களை அடிமைப்படுத்தி கொடுமைப் படுத்தும் ஆணாதிக்க ம்னப்பான்மையின் வெளிப்பாடு. நம்நாட்டுப் பெண்கள் விழிப்படைந்து தங்கள் உரிமைகளை உணர்ந்து, முழுமையான விடுதலையை இன்னமும் பெறவில்லை என்பதையே இத்தகைய நிகழ்வுகள் காட்டுகின்றன" என்ற ரீதியில் இருக்கும். இதற்கு பின்பாட்டு பாடுவதற்கென்று மறுநாள் அரை டஜன் பெயர்களில் ஆசிரியருக்குக் கடிதங்கள் பிரசுரமாகும். இதுதான் நாம் அன்றாடம் காணும் வாடிக்கை.

அதே நேரத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவதாகச் சொல்லிகொண்டு அதையே முழுநேரத் தொழிலாகச் செய்யும் இன்னும் சில "சமூக ஆர்வலர்கள்" இந்த "கேப்"பில் புகுந்து "கள்ளக்காதலை 'கள்ளக்காதல்' என்று அழைக்கக் கூடாது" என்பதுபோல் அறிக்கை விடுவார்கள். உடனே அரசியலில் துண்டு போட இடம் தேடிக்கொண்டிருக்கும் சில முன்னாள் நடிகர்கள் "மனைவி கள்ளக்காதல் செய்வதற்கு கணவன்தான் காரணம். ஆகையால் மனைவி கணவனைக் கொன்றால் மற்ற சட்டங்களில் உள்ளதுபோல அதற்கு கணவனையே பொறுப்பாளி என்று தீர்மானித்து, அவன் தப்பித்தவறிப் பிழைத்தால் அவனைக் கைது செய்து சிறையிலடைக்கவேண்டும்; அவன் செத்தால் அவனுடைய பெற்றோரைச் சிறையிலடைக்க வேண்டும். மேலும் அவர்களுடய சொத்தையும் பிடுங்க வேண்டும் (இதுதான் முக்கியமான கூறு!!) - இப்படி அறிக்கை விட்டு விளம்பரம் தேடிக்கொள்வார்கள்!

ஆனால், இன்றைய "தி ஹிந்து" இதழில் கள்ளக்காதலனுடன் கூட்டுச் சேர்ந்து கணவனைக் கொலை செய்த செய்தி பெரிய எழுத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. பூசி மெழுகாமல் "உள்ளது உள்ளபடி" இத்தகைய செய்திகளை அந்த நாளிதழ் வெளியிடத் தொடங்கியிருப்பது ஒரு காலத்தின் கட்டாயம் எனலாம். எனெனில் தற்காலத்தில் பல பத்தினிகள் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்வதை ஓவர்டைம் போட்டுச் செய்து கொண்டிருப்பதைக் காண்கிறோம். மேலும் கள்ளக்காதல் என்பது இருமுனையிலும் கூறான கத்தி என்பதை அது அந்தக் கள்ளக்காதலியையும் பதம் பார்க்கும் காட்சிகள் மூலம் காணமுடிகிறது.

சரி, இப்போது இன்றைய சூடான "க.கா.கொ"-விற்கு வருவோம்:-

கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி
தற்கொலை என்று நாடகமாடியவர்கள் கைது

அம்பத்தூர், நவ.10 - 2009. செய்தி: தினத்தந்தி. (சுட்டி)

கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து விட்டு தற்கொலை என்று நாடகமாடியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

போலீசுக்கு போன்

ஆவடி வீட்டுவசதி வாரியக்குடியிருப்பில் வசித்து வந்தவர், சுதாகர் (வயது 38) ரியல் எஸ்டேட் புரோக்கர். இவரது மனைவி ஷீலா (32) இவர்களுக்கு நிவேதிதா (8) என்ற மகளும், விஜய் (2) என்ற மகனும் உள்ளனர்.

கடந்த மாதம் 26-ந் தேதி சுதாகர் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி ஷீலா ஆவடி போலீஸ் நிலையத்திற்கு அதிகாலை 3 மணிக்கு போன் செய்து எனது கணவர் சுதாகரை யாரோ மர்ம ஆசாமிகள் கொலை செய்து விட்டு போகும் போது வீட்டின் கதவை வெளிப்புறம் தாழ்ப்பாள் போட்டுவிட்டு சென்றதாக கூறினார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் தலைமையிலான போலீசார் சுதாகரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

ரகசிய கண்காணிப்பு

பிரேத பரிசோதனையில் சுதாகர் கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

பிணத்தை மனைவியிடம் ஒப்படைத்த போலீசார் இறுதிச் சடங்கு முடியும் வரை மவுனம் காத்தனர். எனினும், சுதாகரின் மனைவியை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது ஷீலா அதிகநேரம் செல் போனில் யாரோ ஒருவருடன் பேசுவது தெரியவந்தது. உஷாரான போலீசார் ஷீலா உபயோகப்படுத்தும் செல்போனின் விவரங்களை சேகரித்தனர்.

அதில், தினமும் இரவில் மணிக்கணக்கில் ராஜேஷ் (24) என்பவருடன் அவர் பேசியது தெரியவந்தது.

திட்டமிட்ட கொலை

ராஜேஷை பற்றி விசாரித்த போது, அவர் சுதாகரின் அக்காள் மகன் என்பதும் அவனுக்கு சுதாகர் கார் வாங்கி கொடுத்து டிராவல்ஸ் நிறுவனம் வைத்து கொடுத்ததும் தெரிய வந்தது. பின்னர் இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிரச்சிணை காரணமாக காரை திரும்ப வாங்கிக் கொண்டு சுதாகர் அவனை துரத்தியதும் விசாரணையில் தெரிந்தது.

இதன்காரணமாக சுதாகரை திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம். அதில் இருவருக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்பட்டனர்.

இருவரிடமும் துருவி, துருவி போலீசார் விசாரித்தபோது கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.

ஷீலா போலீசாரிடம் கொடுத்த வாக்கு மூலம் வருமாறு :-

உல்லாசமில்லை

எனது கணவர் சுதாகர் எனக்கு மாமன் முறை ஆகும். ரியல் எஸ்டேட் தொழிலில் கைநிறைய சம்பாதித்தார். உடல் பருமன் ஆகி குண்டாக இருப்பார். இதனால், வெளியில் அவருடன் செல்வதற்கு எனக்கு அசிங்கமாக இருக்கும். மேலும் உடல் பருமனாக இருப்பதால் அவரால் என்னுடன் உல்லாசமாக இருக்க முடியவில்லை. (இது கள்ளக்காதலை jutify செய்வதற்கு இவர்கள் கண்டுபிடித்துள்ள லேட்டஸ்ட் அஜால்குஜால் சாக்கு. உணமையில் இத்தகைய பெண்குலத் திலகங்கள் கள்ளக்காதலுக்கு அலைவதே வரையிட்டியான உல்லாசத்திற்காகத்தான். ஒருவனிடம் மட்டும் சுகம் கிடைத்தால் அடங்குமா அந்த வெறி! ஆண்குழந்தைகளைப் பெற்றவர்கள் ராத்தூக்கம் இல்லாமல் அலைவதுதான் அவர்களுடைய விதி!)

அவரது அக்கா மகன் ராஜேஷிற்கு கார் ஓட்ட தெரியும் என்பதால் அவனுக்கு வங்கியில் கடன் பெற்று ஒரு கார் வாங்கி கொடுத்து டிராவல்ஸ் நிறுவனம் வைத்து கொடுத்தார்.

ஒருநாள் கடைக்கு செல்லவேண்டும் என்று என் கணவரிடம் கூறினேன். அவரோ ராஜேஷுடன் காரில் அனுப்பி வைத்தார். அவனும் என்னை `மாமி மாமி' என்று பாசமாக அழைத்தான். அவனது அன்பில் நான் மயங்கினேன்.

கணவர் கண்டிப்பு

என்னை விட 8 வயது குறைந்த ராஜேஷுடன் உல்லாசமாக இருக்க முடிவு செய்தேன். ஒருநாள் தலைவலிக்கிறது என்று பாசாங்கு செய்தேன். அவனும் தைலம் தேய்த்தான். இதுதான் சந்தர்ப்பம் என்று அவனை இழுத்து அணைத்துக் கொண்டேன். இருவரும் உல்லாசமாக இருந்தோம் அன்று தொடங்கி தினமும் உல்லாசமாக இருந்து வந்தோம். கள்ள உறவு என் கணவருக்கு தெரிந்து விட்டது. அவர் இருவரையும் கண்டித்தார். இதைத் தொடர்ந்து தினமும் எனக்கும் அவருக்கும் சண்டை வந்தது. என்னால் ராஜேஷை பார்க்காமல் இருக்க முடியவில்லை.

திட்டம் தீட்டினோம்

ஒருநாள் நான் உணர்ச்சி வசப்பட்டு பேச்சு வாக்கில், "இனி என் கணவன் உயிருடன் இருந்தால் நாம் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பில்லை'' என்று கண்ணீர் மல்க கூறினேன். இதைக் கேட்டு மனமுடைந்த ராஜேஷ் விரைவில் சுதாகருக்கு முடிவு கட்டிவிட்டு உன்னுடன் காலமெல்லாம் வாழ்வேன் என்று கூறினான்.

சம்பவத்தன்று நாங்கள் எதிர்பார்த்தது போல் வீட்டிற்கு வந்த சுதாகர் உடனடியாக அசந்து தூங்கி விட்டார். இந்த தகவலை செல்போன் மூலம் ராஜேஷிற்கு நான் கூறினேன்.

அதன்படி ராஜேஷ் நைலான் கயிற்றுடன் எங்கள் வீட்டிற்கு வந்தான். பின்னர் இருவரும் சேர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சுதாகரின் காலை டவலால் கட்டிபோட்டோம். ராஜேஷ் நைலான் கயிற்றால் இறுக்க நான் கணவர் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு பிடித்துக் கொண்டேன்.

சிறிது நேரத்தில் எனது கணவர் துடித்து, துடித்து செத்தார்.

பிணத்தின் அருகில் உல்லாசம்

பின்னர் சுதாகர் இறந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு நாங்கள் இருவரும் படுக்கை அறையில் உல்லாசமாக இருந்தோம்.
பின்னர், வெளிப்புறமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு ஒன்றும் தெரியாததுபோல் ராஜேஷ் அவனது வீட்டிற்கு சென்றுபடுத்துவிட்டான்.

மறுநாள் சுதாகரை எழுப்புவது போல் நடித்தேன். அவர் பிணமாக இருந்தார். அழுது புலம்பி ஊரை கூட்டினோம். எல்லோரும் நம்பினார்கள். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் அல்லது அவரே தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று நம்ப வைத்தோம். ஆனால் போலீசார் எங்களை கண்காணித்து பிடித்துவிட்டனர்.

இவ்வாறு ஷீலா கூறினார்.

சிறையில் அடைப்பு

ஷீலா அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து ஷீலாவையும், ராஜேஷையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

6 மறுமொழிகள்:

')) said...

//மேலும் உடல் பருமனாக இருப்பதால் அவரால் என்னுடன் உல்லாசமாக இருக்க முடியவில்லை//

உல்லாசம் உல்லாசம் ஊரேல்லாம் கள்ளக்காதல் உல்லாசம்... குண்டாக இருக்கும் கணவன்மார்களே.. எச்சரிக்கை உங்கள் கழுத்துக்கும் நைலான் கயிறு மாட்டி அழகுபார்கப்படும் சில கற்புக்கரசிகளினால்

')) said...

//பிணத்தின் அருகில் உல்லாசம்

பின்னர் சுதாகர் இறந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு நாங்கள் இருவரும் படுக்கை அறையில் உல்லாசமாக இருந்தோம்.//

கணவனுக்காக ஒரு நகரத்தையே எரித்த கண்ணகி வாழ்ந்த நாட்டிலா கணவனைக் கொன்று அந்த சவத்தருகே இது போன்ற காமக்களியாட்டம் நடக்கிறது?

')) said...

//எனது கணவர் சுதாகர் எனக்கு மாமன் முறை ஆகும். ரியல் எஸ்டேட் தொழிலில் கைநிறைய சம்பாதித்தார். உடல் பருமன் ஆகி குண்டாக இருப்பார். இதனால், வெளியில் அவருடன் செல்வதற்கு எனக்கு அசிங்கமாக இருக்கும்.//

இதே வார்த்தையை கணவர் சொல்லியிருந்தால் அவர் மனைவியை "மனதளவில்" கொடுமை செய்ததாக 498A கேஸில் சிறையிலடைத்துவிடுவார்கள். இந்த காமக்கன்னி புத்திசாலி ஆளையே கொன்றுவிட்டார். கணவர்கள் இந்த செய்தியிலிருந்து ஒரு முக்கியமான விஷயத்தைக் கற்றுக் கொள்ளவேண்டும்.

Anonymous said...

கணவன் இறந்தாலோ அல்லது மனைவி கள்ள தொடர்பு வைத்திருந்தாலோ இந்த சட்டத்தின் மூலமாக எதுவும் செய்ய முடியாது. ஆனால் மனைவி இறந்தாலோ, தற்கொலை செய்து கொண்டாலோ கள்ளக்காதல் கொண்டாலோ இந்த பெண்ணிய பித்தர்கள் ஏற்படுத்திய சட்டத்தின் முன் கணவர்கள், தீவிரவாதிகளை, மாவோயிஷ்ட்களைவிட மிக மிக மோசமானவர்களாகவும் மிகக் கொடுமையானவர்களாகவும் சித்தரிக்கப் படுகிறது. இதே நிலை நீடித்தால் கணவர்கள், நீதித்துறையையும் காவல்துறையையும் எதிர்த்து கடுமையாக போராட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு கொண்டிருக்கிறார்கள் ! ஜெய்ஹிந்த் !! ...........

')) said...

//மேலும் உடல் பருமனாக இருப்பதால் அவரால் என்னுடன் உல்லாசமாக இருக்க முடியவில்லை//

அதன்படி பார்த்தால் நீங்கள் காணும் பெரும்பாலான இளம் பெண்கள் ஊதிப் பெருத்துப் போய்த்தானே காணப்படுகிறார்கள், அவர்களைக் கட்டிக் கொண்ட கணவன் என்ன செய்வது!

கருமேனியை சிவப்பாக்கும் கிரீம் போல இப்போதெல்லாம் உடல் இளைக்கும் மருந்துகள் (liposuction, slimming), டயட்டிங் இவையெல்லாம்தான் நல்ல பிசினஸ். அதற்குத்தான் கணவனிடமிருந்து பிரிந்து ஓடிப்போன பின்னும் கூட பொய்ப் புகார் கொடுத்து ஏராளமாக பணம் பறிக்கிறார்கள். இதுபோல் மிரட்டிப் பணம் பறிப்பதெற்கென்றே அடுக்கடுக்காக பற்பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஒரே காரணத்தைச் சொல்லி அனைத்து சட்டபிரிவுகளின் கீழும் மெயிண்டெனன்ஸ், ஜீவனாம்சம் அல்லது வெறுமனே நஷ்டஈடு கொடு என்று வழக்கு மேல் வழக்காகப் போட்டுத் தள்ளுகிறார்கள். "ஐயோ பாவம், அபலைப் பெண்கள். அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்துவிடு" என்றுதான் ஆணைகள் பிறப்பிக்கப்படுகின்றன. கணவனுக்கு வருமானமே இல்லையென்றாலும் கொடுக்கவேண்டும் என்றும், முன்னாள் மனைவி கனவனைவிட நிறைய சம்பாதித்தாலும் அவன் கொடுத்துத்தான் அழவேண்டும் என்றும், அவள் விவாகரத்து பெற்று இன்னொருவனைக் கலியாணம் செய்துகொண்ட பின்னும் தண்டத் தீர்வையைக் கொடுக்கவேண்டும் என்றும் பல தீர்ப்புகள் உள்ளன!

இந்தச் விஷச் சூழலிலிருந்து தப்பவே வழியில்லை!

')) said...

ஹிந்துவை பத்தி எழுதினது பயங்கர காமெடி சிரிப்பை அடக்க முடியவில்லை