மூன்று பெண் குழந்தைகளின் தாய் கள்ளக்காதலுக்கு பலி!

பெரும்பாலான 498A பொய் வழக்குகளுக்கு பெண்களின் கள்ளக்காதலே அடிப்படைக் காரணியாக அமைந்திருப்பதைக் காண முடிகிறது. மேலும் சில பெண்ணியவாத அமைப்புகளும், மனோரமா போன்ற திடீர் சமூக சேவகிகளும் பெண்களின் பாலியல் தேவைகளைப் பற்றியும், ஆண்களின் ஆண்மை விறைப்புத் தன்மையைப் பற்றியும் பேட்டி கொடுத்துக் கொண்டு இத்தகைய கள்ளக்காதல்களுக்கு ஒரு அங்கீகாரத்தையும் தெய்வீகத்தனமையையும் ஊட்ட முயற்சித்து வருகிறார்கள் என்பது வருந்தத்தக்க விஷயம்.

ஆனால் அத்தகைய கள்ள உறவுகளால் விளையும் தீங்குகளைப் பற்றி இவர்கள் எவருக்கும் அக்கறையில்லை. கள்ளக்காதல் புரியும் பெண்களின் குழந்தைகளின் நிலை என்ன? அது போல் கள்ளக்காதல் கிளிகள் பெற்ற குழந்தைகள் தனக்குப் பிறந்தவைதானா என்ற ஐயப்பாட்டை மறக்க இயலாமல் புழுங்கிச் சாகும் கட்டிய கணவன் மனநிலை எப்படி இருக்கும்? அந்தக் குழந்தைகள் வளரப்போகும் சூழல்,அவர்களின் உளநிலை இவற்றைப் பற்றி கவலைப் படுவோர் எவர்?

எப்படியாவது நம் பாரம்பரிய குடும்பக் கட்டமைப்பை முழுமையாக சிதைத்து, அனைவரையும் தனி நபர்களாக ஆக்கி, கட்டுப்பாடற்ற செக்ஸ் கொள்ள வைத்து, சர்வதேச வர்த்தக நிறுவனங்களின் கல்லாவை உப்பிவிக்கும் நோக்கத்தில் செயல்படும் ஒரு பயங்கரமான போக்குதான் தற்போது நிலவுகிறது.

ஆனால் இந்தக் கள்ளக்காதல் கதைகள் பல கொலைகளில் முடிவதைக் காண்கிறோம். பெரும்பாலும் அந்த அப்பாவி கணவன், இல்லையேல் கள்ளக்காதலன், சில நேரங்களீல் கள்ளக்காதல் செய்யும் "அபலை" - இப்படி பல நிகழ்வுகள்.

அத்தகைய ஒரு கொலைச் செய்தியைத்தான் இப்போது காணப் போகிறோம். (ஓரிரு நாட்களாக கள்ளக்காதல் செய்திகளுக்கு லீவு விட்டிருந்தார்கள். இப்போது தொடங்கி விட்டனர் புதுக் கணக்கை!)


கள்ளக்காதலியை எரித்து கொன்றவரை காட்டிகொடுத்த மொபைல்போன்
நவம்பர் 18,2009 - தினமலர் (சுட்டி)

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே கள்ளக்காதலியை எரித்து கொன்றவரை போலீசார் கைது செய்தனர். இவர் நீண்டநேரம் மொபைல்போன் பேசியதை வைத்து போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

அருப்புக்கோட்டை- விருதுநகர் ரோடுபுதுகண்மாய் அருகே கடந்த மாதம் ஒரு பெண் அரை குறையாக எரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரணை செய்து வந்தனர். இதை அறிந்து,விருதுநகர் அருகே மையிட்டான்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி,போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து, காணாமல் போன தன் மனைவி நாகரத்தினம் பற்றிய விவரங்களை கூறினார். போலீசார் விவரங்களை கூறியவுடன் தன் மனைவிபோல் இருக்கிறது என்றார். பின்னர், போலீசார் அவரை விசாரிக்கையில், நாகரத்தினம் மொபைல் போன் மற்றும் நகைகள் அணிந்து சென்றதை கூறினார். போலீசார் அந்த மொபைல்போன் எண்ணை வாங்கி சம்பந்தப்பட்ட மொபைல்போன் அலுவலகத்தில் விசாரணை செய்கையில் குறிப்பிட்ட எண்ணில் அதிக நேரம் பேசியது தெரிய வந்தது. அந்த எண்ணை வைத்து முகவரியை விசாரித்த போது, அது விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த கணேசமூர்த்தியின் எண் என தெரிய வந்தது. போலீசார் கணேசமூர்த்தியை பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர் விருதுநகரில் உள்ள ஒரு தனியார் மில்லில் காவலராக வேலை செய்துவந்தார். அதே மில்லில் வேலை பார்த்து வந்த நாகரத்தினத்துடன் ஒரு ஆண்டாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. கடந்த மாதம் 22 ஆம் தேதி இருவரும் டூ வீலரில் அருப்புக்கோட்டையில் சினிமா பார்த்து விட்டு, பின் விருதுநகர் ரோட்டிலுள்ள புதுகண்மாய் அருகே பேசி கொண்டிருந்தனர். நாகரத்தினம் கணேசமூர்த்தியை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். இதில் ஆத்திரடைந்த கணேசமூர்த்தி, தான் வைத்திருந்த துண்டால் நாகரத்தினத்தின் கழுத்தை இறுக்கியுள்ளார். இதில் அவர் மயக்கமடைந்தார். அவர் கழுத்திலிருந்த ஆறு சவரன் நகை மற்றும் மொபைல்போனை எடுத்து கொண்டு, தன் டூ வீலரில் வைத்திருந்த பெட்ரோலை நாகரத்தினத்தின் மீது ஊற்றி தீ வைத்து விட்டு ஓடி விட்டார். போலீசார் கணேசமூர்த்தியை கைது செய்தனர். இறந்த நாகரத்தினத்திற்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். கணேசமூர்த்திக்கு திருமணமாகி, அவரது மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1 மறுமொழி:

Anonymous said...

அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு
---

புதுடில்லி : வரதட்சணை கொடுமை செய்வதாக, பொய்ப்புகார் கூறி பழிவாங்கும் மனைவிகளுக்காக சட்டத்தை பயன்படுத்தக்கூடாது; புகார் தந்தவுடனே, தீர விசாரிக்காமல் கணவன், அவன் குடும்பத்தினரை கைது செய்யக்கூடாது! - தங்களுக்கு சாதகமாக சட்டப் பிரிவு இருக்கிறது என்று, திட்டமிட்டு "பிளான்' போட்டு அப் பாவி கணவர்களை பழிவாங்கும் மனைவிகளுக்கு எதிராக முதல் முதலாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.




இந்திய தண்டனை சட்டப் பிரிவு 498 ஏ. வரதட்சணை கொடுமை செய்யும் கணவன், அவர் குடும்பத்தில் உள்ள தந்தை, தாய் உட்பட யாரையும் கைது செய்ய போலீசுக்கு அதிகாரம் அளிக்கிறது இந்த சட்டப் பிரிவு. வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்படுவது பெண்கள் தான் என்பதால், அவர்கள் புகார் தந்தாலே, இந்த சட்டத்தை பயன் படுத்தி, கணவன், அவன் குடும்பத்தாரை கைது செய்வது போலீஸ் வழக்கம். கைது செய்தபின் தான் எல்லா விசாரணையும் நடக்கும். கடந்த சில ஆண்டாக இதுபோன்ற நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், மத்திய அரசுக்கு ஆயிரக்கணக்கான மனுக் கள் குவிந்தன. பழிவாங்க துடித்த மனைவியால் பாதிக்கப்பட்ட கணவர்கள், அவர்களின் குடும் பத்தார், சமூக நல அமைப்புகள், ஆண்கள் நல அமைப்புகள் போன்றவற்றில் இருந்தும் அரசுக்கு மனுக்கள் குவிந்தன. "வரதட்சணை கொடுமை செய்யும் ஆண்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதே சமயம், திட்டமிட்டு கணவனை, அவன் குடும்பத்தினரை பழிவாங்க சில பெண்கள், வரதட்சணை கொடுமை புகார் செய்வது அதிகரித்து வருகிறது.




கடந்த காலங்களில், வரதட்சணை கொடுமைக்காக தண்டிக்கப்பட்ட கணவர்கள் எண்ணிக்கை சதவீதத்தை வைத்தே இதை புரிந்து கொள்ளலாம்; இதனால், அப்பாவி கணவர்களுக்காக மத்திய அரசு , இந்த சட்டத்தில் கட்டுப்பாடு விதிக்க வேண்டும்' என்று மனுக்களில் கோரப்பட்டிருந்தது. மத்திய உள்துறை அமைச்சகமும், சட்ட அமைச்சகமும் இது தொடர்பாக பரிசீலித்து வந்தது. இந்த நிலையில், டில்லி ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புகள், அரசின் பரிசீலனைக்கு மேலும் வலுவூட்டின.




"கணவன் குடும்பத்தாரை பழிவாங்க வேண்டும் என்ற எண் ணம் உள்ள பெண்களுக்கு வரதட்சணை கொடுமை புகார் பெரிதும் கைகொடுக்கிறது. அதற் கேற்ப, போலீசும், உடனே 498 ஏ சட்டப்பிரிவு, 406ம் பிரிவை பபயன்படுத்தி உடனே கணவன் குடும்பத்தினரை கைது செய்து விடுகின்றனர். சிறியவர்களை கூட கைது செய்வது சட்டப்படி சரியல்ல. இதுபோன்ற போக் குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண் டும்' என்று ஒரு வழக்கில் டில்லி ஐகோர்ட் நீதிபதி கபூர் தன் கருத்தை வலியுறுத்தியிருந்தார். இதுபோல, சுப்ரீம் கோர்ட்டில் வந்த வழக்கில்,"வரதட்சணை கொடுமை வழக்குகளில் நிரபராதியாக வெளியே வருவோர் அதிகரித்து வருகின்றனர். அதனால், இப்படிப்பட்ட வழக் குகள் ஜோடிக்கப்பட்டு, சிலரால் பயன்படுத்தப்படுவதாக அறிய முடிகிறது. இதை தடுக்க சட்டப் படி பரிசீலிக்க வேண்டும்' என்று நீதிபதி அர்ஜித் பசாயத் கூறினார்.




இந்த இரு தீர்ப்புகளும் மத்திய அரசின் கவனத்தை திசை திருப்பியது. சட்ட, உள்துறை அமைச்சகம் தீவிர பரிசீலனைக்கு பின், மாநில அரசுகளுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. "வரதட்சணை கொடுமை புகார் விஷயத்தில் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். புகார் தந்ததை ஆதாரமாக வைத்து உடனே, கணவன், அவர் குடும்பத்தினரை கைது செய்யவே கூடாது. தீர விசாரித்து, உயர் அதிகாரி திருப்தி பட்டாலொழிய கைது நடவடிக்கையில் இறங்கக்கூடாது. இது தொடர்பாக எல்லா போலீஸ் மண்டலங்களுக்கும் உத்தரவு அனுப்ப வேண்டும்' என்று கடிதத்தில் கூறப் பட்டுள்ளது. மத்திய உள்துறை செயலர், இந்த கடிதத்தை மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கு அனுப்பியுள்ளார்.




வரதட்சணை கொடுமை புகார் அளித்தால், இந்த சட்டத்தின் கீழ் கணவனுக்கு அதிகபட்சம் மூன்றாண்டு சிறை தண்டனை தர முடியும். கடந்த 2007ல், ஒரு லட்சத்து 60 ஆயிரம் வழக்குகள் பதிவாயின. அதில், 76 ஆயிரம் வழக்குகளில் தான் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டது. 79 சதவீதம் பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய குற்ற ஆவண காப்பக சர்வேயில் தெரியவந்துள்ளது. "இந்த சட்டப்பிரிவுகளில் சில திருத்தங்களை கொண்டு வர அரசு திட்டமிட்டது. ஆனால், பெண்கள் அமைப்புகள் பெரும் போர்க்கொடி தூக்கியதால், இந்த முடிவில் பின்வாங்கி விட்டது. எனினும், கோர்ட்களின் கருத்துக்களுக்கு பின் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது' என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.