இடியாப்பச் சிக்கல்

ராஜபாளையம், அக்.23- 2009

ராஜபாளையம் அருகே முகவூர் மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் மாடசாமி (வயது22). இவரும் சங்கரன் கோவில் தாலுகா பந்தல்குடி கிராமத்தை சேர்ந்த கடல்கனியும்(20) காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடல்கனிக்கு அவரது பெற்றோர் வேறு இடத்தில் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் ஆனாலும் கடல்கனிக்கும், மாடசாமிக்கும் இடையே தொடர்பு இருந்தது.

பின்னர் சில ஆண்டுகளில் கடல்கனி தனது கணவரை பிரிந்து விட்டார். இதன்பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாடசாமியை திருமணம் செய்து கொண்டார்.

அப்போது கடல்கனி கர்ப்பமாக இருந்ததாக தெரிகிறது. மாடசாமியும், கடல்கனியும் தனிக்குடித் தனமாக வசித்து வந்தனர். இந்தநிலையில் கடல்கனிக்கு சில மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு தான் தந்தை இல்லை என மாடசாமி கருதினார்.

இதனால் கடல்கனியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை பிரிந்துவிட முடிவு செய்தார். ஆனால் கடல்கனி மாடசாமிக்கு தான் குழந்தை பிறந்தது என கூறினார். இதனால் இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து மாடசாமி முகவூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். அங்கு அவருக்கு 2-வது திருமணம் செய்ய முயற்சி மேற்கொண்டனர்.

இந்த திருமணம் அவருக்கு நேற்று நடப்பதாக இருந்தது. இதையறிந்த கடல்கனி முகவூருக்கு தனது கைக்குழந்தையுடன் வந்தார். பின்னர் கணவர் மாடசாமி 2-வது திருமணம் செய்தால் கைக்குழந்தையுடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் கடல்கனியை தளவாய்புரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 மறுமொழி:

')) said...

//498A" என்னும் நச்சுப் பாம்பால் தீண்டப்பட்டீர்களா? நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம்! (Tamil nadu DGP's circular) //

ஆ அற்புதமான உத்தரவு.. ஆனால் இதை பின்பற்றுவார்களா. அப்பாவி வயதான தாய்தந்தையர்களும், சகோதரிகளும் பொய்வழக்கில் சிறைசெல்வது தடுக்கப்படும் இந்த உத்தரவால்...

நீதிதேவதையில் பார்வை நம்மிதும் பட்டுருக்கின்றது என்பதின் அடையாளம் இந்த உத்தரவு