கள்ளக்காதல் கொலைகள் நிகழும் வேகத்தைப் பார்த்தால் இன்னும் சில நாட்களில் அனைத்து நாளிதழ் மற்றும் வேறுபல ஊடங்களிலும் கள்ளக்காதல் மற்றும் அதனால் நிகழும் கொலைகள் பற்றிய செய்திகள்தான் நிரம்பி இருக்கும் போலிருக்கிறது!
ஆமாம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகமும், அரசு வரிப்பணத்தில் அரசியல்வாதிகளாலும் பணக்காரப் பெண்மணிகளாலும் நிரப்பப்பட்டுள்ள "தேசிய பெண்கள் வாரியமும்" (National Commission for Women) என்ன செய்கின்றன? இந்த "கள்ளக்காதல்" (Adultery) சீக்கு பன்றிக்காய்ச்சலை விட வேகமாகப் பரவி, பல உயிர்களைப் பலி வாங்கிக் கொண்டிருக்கிறதே. இதைத் தடுக்க ஏதேனும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டாமா?
இந்தக் கள்ளக்காதல் சோரம் போகும் அவலத்திற்கு ஆகும் முதல் நரபலி அந்தப் பெண்குலத் திலகத்தின் கணவன் தான்! அவன் தப்பித்தால், சில கேசுகளில் எக்குத்தப்பாக அந்தக் கள்ளக்காதலிகளும் பரிதாபமாக பலியாகிறார்கள்.
ஆனால், இந்த கள்ளக்காதல் கேவலங்களினால் நிகழும் மிகவும் பரிதாபத்திற்குறிய இழப்பு, இடையில் சிக்கி பலியாகும் குழந்தகள்தான்! இதைப்பற்றி எவரும் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. அனைத்து இயக்கங்களும், பெண்கள் அமைப்புக்களும், பெண்கள் வாரியங்களும் அந்தக் கள்ளக்காதல் மனைவிகளின் உரிமைகளைப் பற்றித்தான் கவலைப் படுகிறார்கள், கடமைகளைப் பற்றியல்ல. அவர்கள்தம் செக்ஸ் தேடுதலில் முழுத் திருப்தி அடைவதுதான் சமூகத்தின் முக்கியத் தேவை என்பது போல மனோரமா போன்ற திடீர் சமூக சேவகிகளும் பேசி வருகிறார்களேயன்றி ஒரு பாவமும் அறியாத இந்தக் குழந்தைகளின் நிலையைப் பற்றி யாரும் சிறிதளவேனும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. கணவன்மார்களின் "ஆண்மைக் குறைபாடு" பற்றி இயக்கம் நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுக் கொண்டிருக்கும் மனோரமா அம்மையார் ஏனிந்தக் குழந்தைகளின் நிலையைப் பற்றிக் கவலைப்படக் கூடாது?
இந்த நிலைக்கு முக்கிய காரணம் கள்ளக் காதல் (Adultery) தொடர்பான சட்டங்கள் ஒரு தலைப் பட்சமாக அமைந்திருப்பதுதான். கள்ளக்காதல் செய்யும் பெண்கள் மீது ஒருவித நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என்பதுதான் இப்போதிருக்கும் சட்டம். ஏனெனில் பெண்கள் அப்பாவிகள், ஒரு பாவமும் அறியாத அபலைகள். அவர்கள் வலைதான் விரிப்பார்கள்; ஆண்மகன் தான் காமாந்தகாரன், சண்டாளன், வெறி பிடித்தலைபவன்; அவன் வந்து சிக்கினால் அது அவன் குற்றம். இதுதான் இத்தகைய சட்டங்களின் அடிப்படை கருத்தாக்கம்!
Sec. 497 of Indian Penal Code:- "Adultery"
Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.
இதுதான் கள்ளக்காதல் தொடர்பான சட்டம். இது ஒருதலை சார்பாக உள்ளது எனவும் இதைத் திருத்தம் செய்து, தவறு செய்யும் ஆண், பெண் இருவருக்கும் சமமாகப் பொருந்தும்படியாக மாற்றியமைக்க வேண்டும் என்று நீதிபதி மலிமத் கமிட்டி மற்றும் சட்டக் கமிஷன் பரிந்துரை அளித்த பின்னும் தேசிய பெண்கள் வாரியமும் பல வலிமை வாய்ந்த இயக்கங்களும் சேர்ந்து எதிர்ப்பதால் அது இன்னமும் திருத்தப் படாமல் இருக்கிறது! (சுட்டி)
சரி. உங்களுக்கு இன்றைய கள்ளக்காதல் கோட்டா இதோ:-
மயிலாடுதுறை அருகே பயங்கரம்:
பரோலில் வந்த ஆயுள் கைதி கள்ளக்காதல் தகராறில் படுகொலை
மனைவி உள்பட 6 பேர் கைது
நாகப்பட்டினம், நவ.12 - 2009. செய்தி - தினத்தந்தி. (சுட்டி இதோ)
கள்ளக்காதல் தகராறில் பரோலில் வெளியே வந்த ஆயுள் சிறைக் கைதி கொலை செய்யப்பட்டார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த மணல்மேடு அருகே கழுக்காணிமுட்டம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்மோகன் (வயது 42). இவர் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் இருந்து வந்தார்.
சமீபத்தில் பரோலில் வந்த ராஜ்மோகன் பரோல் காலம் முடிந்து மீண்டும் ஜெயிலுக்கு செல்லவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் மணல்மேடு அருகே உள்ள ஆத்தூர் கிராமத்தை சேர்ந்த பாலையா ஆத்தூர் கிராம நிர்வாக அலுவலர் தென்னரசுவிடம் நேரில் ஆஜராகி ராஜ்மோகனை கொலை செய்து அவரது பிணத்தை ஒரு வயலில் புதைத்துள்ளதாக தெரிவித்தார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கிராம நிர்வாக அலுவலர், பாலையாவை மணல்மேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலையாவை கைது செய்தனர். அப்போது பாலையா போலீசாரிடம் கூறியதாவது:-
கள்ளக்காதல்
நானும், ராஜ்மோகனும் திருச்சி மத்திய சிறையில் இருந்த போது நண்பர்களானோம். அந்த நேரத்தில் பரோலில் நான் வெளிவந்த போது ராஜ்மோகன் வீட்டிற்கு சென்று அவரது மனைவி இந்துமதிக்கு பணம் கொடுத்து உதவினேன்.
அதில் இந்துமதியுடன் எனக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இந்த விஷயம் ராஜ்மோகனுக்கு தெரிந்து இந்துமதியை துன்புறுத்தினார்.
இதனை தொடர்ந்து இந்துமதி எனக்கு கணவரே தேவையில்லை, அதனால் ராஜ்மோகனை தீர்த்து கட்டிவிடு என்று என்னிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து மயிலாடுதுறையில் ராஜ்மோகனை தற்செயலாக நான் சந்தித்தேன். அப்போது ராஜ்மோகன் தனக்கு பணம் தேவை என்று என்னிடம் தெரிவித்தார்.
உடனே நான் ஆத்தூர் கிராமத்தில் உள்ள எனது வீட்டிற்கு வந்து பணத்தை வாங்கி செல்லும்படி ராஜ்மோகனிடம் கூறினேன். அதன்படி ராஜ்மோகன் எனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னர் நானும், எனது நண்பர்களும், ராஜ்மோகனுடன் சேர்ந்து மது அருந்தினோம்.
அப்போது ராஜ்மோகனுக்கு அதிகமாக மதுவை, ஊற்றி கொடுத்தோம். இதில் நிலைதடுமாறி மயக்க நிலையில் இருந்த ராஜ்மோகனை நானும், எனது நண்பர்களும் மறைத்து வைத்திருந்த உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினோம். இதில் நிலைக்குலைந்த ராஜ்மோகன் சம்பவ இடத்திலேயே செத்தார்.
இதனையடுத்து ராஜ்மோகன் உடலை ஆத்தூரில் உள்ள ஒரு வயலில் குழித்தோண்டி எனது நண்பர்கள் உதவியுடன் புதைத்துவிட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து கொலை செய்து புதைக்கப்பட்ட ராஜ்மோகன் பிணத்தை தோண்டி எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி நேற்று மதியம் புதைக்கப்பட்ட இடத்தை பாலையன் அடையாளம் காட்டினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்வர் தயாள், தாசில்தார் ஜோதிலிங்கம் ஆகியோர் முன்னிலையில் பிணம் தோண்டி எடுக்கப்பட்டது. ராஜ்மோகன் பிணத்தை குடும்பத்தினர் அடையாளம் காட்டினர்.
6 பேர் கைது
ராஜ்மோகன் கொலைச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து பாலையா, அவரது நண்பர்கள் சிவராஜன், ராமலிங்கம், செல்வராஜ், உத்திரங்குடி கலியமூர்த்தி மற்றும் கொலை செய்யப்பட்ட ராஜ்மோகனின் மனைவி இந்துமதி ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.
3 மறுமொழிகள்:
போறபோக்கில் கடு அல்லது சுடுகாடுதன் கணவர்களுக்கு safest place என்ற நீலை வந்துடும் போல இருக்கு ???
கள்ளக் காதலன் வீட்டில் குடும்பம் நடத்திய மனைவிக்கு கத்திக்குத்து : கணவர் கைது
http://www.dinamalar.com/district_main.asp?ncat=Chennai#256023
எண்ணூர் : கள்ளக்காதலன் வீட்டில் தங்கி, குடும்பம் நடத்திய மனைவியை கணவர் சரமாரியாக குத்திய சம்பவம் எண்ணூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காசிமேடு சிங்காரவேலர் நகரைச் சேர்ந்தவர் சத்யா (28); மீனவர். இவரது மனைவி சரஸ்வதி(26). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் குடும்பத் தகராறு ஏற்பட்டது, சரஸ்வதி தனது குழந்தைகளுடன் எண்ணூர் பாரதியார் நகரில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றார்.கணவர் வீட்டிற்கு திரும்பிச் செல்லாமல் தாய் வீட்டிலேயே வசித்து வந்தார். சத்யா அவ்வப் போது வந்து குழந்தைகளை பார்த்துச் செல்வது வழக்கம்.சில தினங்களுக்கு முன் வந்த சத்யா, மனைவிக்கு நகைகள் வாங்கிக் கொடுத்துவிட்டு, "நாம் ஒன்று சேர்ந்து குடும்பம் நடத்துவோம், வந்து விடு' என அழைத்தார்."நாளை வருகிறேன்' என கூறி கணவரை அனுப்பி வைத்த சரஸ்வதி, இரண்டு நாட்களாகியும் வரவில்லை. இதையடுத்து, சத்யா மீண்டும் எண்ணூர் பாரதியார் நகர் சென்றார். சரஸ்வதி வீட்டில் இல்லை. விசாரித்தபோது, அருகே உள்ள பாலகிருஷ்ணன் வீட்டில் இருப்பது தெரிந்தது.இதுபற்றி விசாரித்தபோது, சரஸ்வதி குழந்தைகளுடன் பாலகிருஷ்ணனுடன் குடும்பம் நடத்துவது தெரிந்தது. ஆத்திரமடைந்த சத்யா, பாலகிருஷ்ணன் வீட்டிற்குச் சென் றார். அங்கிருந்த மனைவி சத்யாவை சரமாரியாக குத்திவிட்டு தப்பினார்.ரத்த வெள்ளத்தில் மிதந்த சரஸ்வதி, ஸ்டான்லி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். எண்ணூர் போலீசார் கணவன் சத்யாவை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
எனக்கு ஒரு சந்தேகம் ! இந்த பெண்ணிய தலைவிகள் எல்லோரும் கணவனுடன் தானே வாழ்கிறார்கள் ? அப்போ ஏன் இந்த கள்ள தொடர்புகளை கண்டிக்க மனமில்லை ? பணம் பண்ண மட்டுமே பெண்ணிய வாதமோ ? வெட்கம் கெட்ட ஜென்மங்களா இவர்கள் ?
உங்கள் கருத்தைத் தெரிவிக்க