மன்னிக்க முடியாத குற்றம்!

ஆஞ்சனேயரை வணங்கிவிட்டு தன் அருமை மகனுடன் சிரித்துக்கொண்டு நிற்கும் இந்த அம்மையாருக்கு வயது சுமார் 60 இருக்கும். ஆனால் அவர்கள் முகத்தில் நீங்கள் காணும் மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்கவில்லை. ஏன்? என்னதான் நடந்தது?

பெங்களூரில் வசிக்கும் இவர் வீட்டுக் கதவு ஒருநாள் நள்ளிரவில் திடீரென்று தட்டப்பட்டது. அதிரடியாக உள்ளே நுழைந்தனர் சென்னையைச் சேர்ந்த சுமார் பதினோரு போலீசார். அவர்கள் இவரது முடியைப் பிடித்து அடித்து குண்டுக் கட்டாக அவர்கள் வந்த வண்டியில் தூக்கிப் போட்டு, பலநூறு கிலோமீட்டர் தூரம் இரவோடு இரவாக பொட்டலம் கட்டி இழுத்து வந்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

ஏன் இந்த அவசரம்? அவர் என்ன உலகம் முழுதும் தேடப்படும் ஒரு பயங்கரவாதியா? எங்காவது குண்டு வைத்தாரா?

ஐயோ, உங்களுக்கு என்ன தெரியும் - அந்த அம்மையார் சாதாரண குற்றத்தையா செய்திருக்கிறார்! கேட்டால் அதிர்ந்துபோய் அந்த நடவடிக்கை சரியானதுதான் என்பதை நீங்கள் உடனே ஒப்புக் கொள்வீர்கள். "எல்லாம் தெரிந்த" பெண்ணியவாத போலி அறிவுஜீவிகள் கூட அது சரிதான் என்பர்!

அந்த வயது முதிர்ந்த அம்மணியை அப்படி அடாவடியாகக் கைது செய்து இழுத்து வந்து சிறையிலடைக்காமல் மட்டும் இருந்திருந்தால் நம் நாட்டின் பாதுகாப்பு என்ன ஆகியிருக்கும், சட்டம், ஒழுங்கு என்ன கதியாகியிருக்கும், நினைத்துப் பாருங்கள்!

அப்படி அந்தப் பெண்மணி செய்ததாகச் சாட்டப் பட்டிருக்கும் குற்றம்தான் என்ன?

நம் நாட்டில் புகுந்து நம் நாட்டு அப்பாவி மக்களை இஷ்டப்படி சுட்டுப் பொசுக்கிவிட்டு, தற்போது நம் வரிப்பணத்தில் (சுட்டி) ஜெயிலில் சுக வாழ்க்கையை அனுபவித்து வரும் அஜ்மல் கசாப் போன்று தீவிரவாதம் ஏதாவது செய்தாரா?

சர்க்காருக்குச் சொந்தமான நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலத்தை கபளிகரம் செய்து ஏப்பம் விட்டாரா?

இன்னொருவர் நிலத்தை அபகரிக்க அதன் சொந்தக்காரரை மிரட்டினாரா?

2000 கோடி ஹவாலா மோசடி செய்தாரா?

57 கோடி ரூபாய் பி.எஃப் (PF) மோசடி செய்தாரா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்காரர்கள் குற்றம் சாட்டும் (சுட்டி) 60,000 கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தாரா?

இதெல்லாம் செய்திருந்தால்தான் பரவாயில்லையே. சாதாரணக் குற்றம்தானே என்று அவரை சும்மா விட்டிருக்கலாமே, அல்லது ஆசுபத்திரியில் படுக்க வைத்து ஃபிலிம் காட்டியிருக்கலாமே!

அவர் இவற்றையெல்லாம் விட மிகக் கொடிய பாதகம் அல்லவா புரிந்திருக்கிறார்!

அவர் செய்துள்ள அக்குற்றத்தின் முழுப் பரிமாணத்தை நீங்கள் அறிய வேண்டுமென்றால் சமீபத்தில் நம் நாட்டின் உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ள அதிகாரபூர்வ சுற்றறிக்கையை நீங்கள் அவசியம் வாசிக்க வேண்டும்.

அந்த சுற்றறிக்கை அப்படி என்னதான் சொல்கிறது?

"IPC Sec 498A சட்டம் பரவலாக தவறாக பயன்படுத்தப் படுகிறது. ஆகையால் ஒரு மனைவி புகார் கொடுத்தவுடன் அதில் சுட்டிய மனிதர்களைக் கைது செய்யாதீர்கள்."

இப்படி ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் (498A போன்று) 7 ஆண்டுகளுக்குக் குறைவாக தண்டனை விதிக்கப் பட்டிருக்கும் குற்றங்களின் அடிப்படையில் புகார் வந்தால் கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தடை விதித்து ஒரு சட்ட மாற்றத்தை இந்திய அரசின் சட்ட அமைச்சகத்தினர் கொண்டுவந்தார்கள். காரணம், பல லட்சக் கணக்கானவர்கள் சிறுசிறு குற்றம் புரிந்தவர்களாக குற்றம் சாட்டப்பட்டதால் கைது செய்ய்யப்பட்டு, ஆண்டுக் கணக்கில் ஒரு தீர்வும் இல்லமல் சிறையில் வாடுகிறார்கள்; அதனால் தனி மனித சுதந்திரம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது; சிறைகள் நிரம்பி வழிகின்றன; அரசுக்கு வெட்டிச் செலவும் ஆகிறது என்பதால் இதனைத் தடுக்க இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அத்திருத்தம் பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரும் அதற்கு ஒப்புதல் அளித்துவிட்டார். ஆனால் இன்னமும் அந்த சட்டத் திருத்தம் ஒரு முறையான அரசு ஆணைமூலம் நடைமுறைக்குக் கொண்டு வரப்படவில்லை. காரணம்? வக்கீல்கள் தங்கள் வருமானம் போய்விடுமே என்று அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்களாம் (சுட்டி). இப்படிச் சொல்வது யார்? உள்துறை அமைச்சர் திரு. சிதம்பரம் அவர்கள்தான்! (மேல் விவரங்கள் இங்கே)

சரி, இந்த அரசாணையை நடைமுறைப் படுத்த வேண்டிய அமைச்சகம் எது? மத்திய உள்துறை அமைச்சகம்தான். ஏன் இன்னமும் அதை சட்ட பூர்வமாக்காமல் நாடாளுமன்றத்தையே கேலிக் கூத்தாக ஆக்கிக் கொண்டிருகிறார்கள்? அரசின் கடமை மக்களின் நன்மையை கருத்தில் கொள்வதா அல்லது பொய்க்கேசுகள் மூலம் ஜாமீன் எடுப்பது, ஈரங்கி வாங்குவது போன்ற வகைகளில் கட்சிக்காரர்களின் தலையைத் தடவி சில வக்கீல்கள் சம்பாதிப்பதற்குத் துணை போவதா? நீங்கள் இந்தக் கேள்வியை அமைச்சராவதற்குமுன் வக்கீல் தொழில் செய்தவராகிய தற்போதைய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அவர்களைத்தான் கேட்கவேண்டும்! (அவருடைய மனைவி திருமதி. சிதம்பரம் அவர்களும் ஒரு வக்கீல்தான் என்பது இங்கு தொடர்பில்லாத விஷயம்!)

இப்போது இந்த சுற்றறிக்கை மூலம் திரு. சிதம்பரம் அமைச்சராக இருக்கும் உள்துறை அமைச்சகம் இந்தச் சட்டம் வெகுவாக துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்று் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறது! சட்டத் திருத்ததை அமுல் செய்யாமல் வெறும் சுற்றறிக்கை விட்டுக் கொண்டிருப்பதன் மர்மம் என்ன?

மேற்குறிப்பிட்ட சுற்றறிக்கையில் கண்டுள்ள மேல் விவரங்களைப் பார்ப்போம்:-

In a communication sent to the Chief Secretaries and DGPs of all states and the Administrations of the Union Territories on October 13, the MHA has cited misuse of the clause.

“In some cases, every member of the husband’s family has been arrested, irrespective of whether they had a role in inflicting cruelty on the married woman or not. In some cases, the provisions have been used to settle personal scores. Cases have been reported where momentary anger has resulted in invocation of Section 498A, which resulted in the arrest of the members of the family shutting down any possibility of reconciliation in future and total collapse of the marriage. Even where there is a divorce proceeding, the case under Section 498A continues to persist because of the offence being non-compoundable,” the letter says.

இந்த 498A சட்டத்தின் துஷ்பிரயோகத்தால் அத்தகைய பொய்க் கேசு போடும் பெண்களின் கதி கடைசியில் என்ன ஆகிறது என்ப்தைப் பற்றி இந்தக் கடிதம் என்ன சொல்கிறது என்ப்தைப் பார்த்தீர்கள் அல்லவா! தீயது விதைத்தால் நல்லதா விளையும்!

சரி. அரசே ஒப்புக் கொள்கிறது. இந்த சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்றும், அதனால் பெண்கள் நலனே பதிக்கப்படுகிறது என்றும். பிறகு இந்த சட்டத்தைத் திருத்துவதுதானே?

இந்தக் கேள்விக்கு அந்தக் கடிதமே பதில் சொல்கிறது பாருங்கள்:-

The MHA letter, incidentally, says that in light of judicial pronouncements, an attempt was made earlier to find a via media by amending Section 498A to make the offence compoundable. “However, this could not be pursued because of the opposition from women organisations,” the letter says.

இப்பொது புரிகிறதா, வில்லன்கள் யாரென்று?

ஒரு சட்டத்திருத்தத்தை பாரளுமன்றம் நிறைவேற்றியும் வக்கீல்களின் வருமானத்தைக் காப்பாற்றுவதற்காக நிறுத்தி வைத்துள்ளனர்.

இன்னொரு சட்டத் திருத்தம் கொண்டுவருவதை பெண்ணிய இயக்கங்கள் "தங்கள் வருமானம் போய்விடுமே" என்ற பயத்தில் எதிர்ப்பதால் நிறுத்தி வைத்துள்ளார்கள்!

மக்களைப் பற்றி இவர்களுக்கு என்ன கவலை. It is evident that the government is playing into the hands of certain vested interests.

இந்த 498A சட்டம் முழுமையாக் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்று இதற்கு முன்னமையே ஒப்புக் கொண்டு அறிக்கை விட்டுள்ளவர்கள் யார்யார்?
  1. நம் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் அவர்கள்
  2. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் அவர்கள்
  3. இதை சட்டபூர்வ பயங்கரவாதம் என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திரு.அர்ஜித் பசாயத் மற்றும் திரு.ஹெச்.கே.சீமா அவர்கள்
  4. ஆற்காடு இளவரசர் நவாப் முகம்மது அப்துல் அலி அவர்கள்

மற்றும் பல நீதிபதிகள், அரசியல்வாதிகள், மக்கள் நலத்தில் உண்மையான அக்கறை கொண்டோர்...

இதுதான் நம் நாட்டின் நிலைமை.

இது புரியாமல் பல ஜொள்ளுக் கிழங்கள் " ஐயகோ, பல அப்பாவி இளம் பெண்கள் இந்த ஆணாதிக்க சமூகத்தில் அபலைகளாக அலைகிறார்களே" என்று பிலாக்கணம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் சட்டத் திருத்தங்கள் நடைமுறைக்கு வரும் வரையில் மேலே நீங்கள் கண்ட படத்திலிருக்கும் வயதான அம்மமையார் போன்ற அப்பாவி முதியோர்களும், திருமணம் செய்து கொண்ட பாவத்திற்காக இளம் கணவர்களும், அவர்களின் சுற்றமும் சூழலும் ஒட்டு மொத்தமாகக் கைதாகி ஜெயிலுக்குப் போய்க்கொண்டிருக்க வேண்டியதுதான்!

ஆம். அந்த அம்மையார் ஒரு ஆணைப் பெற்றெடுத்து அவனுக்கு திருமணமும் செய்வித்த மன்னிக்க முடியாத குற்றத்தைத்தான் செய்துள்ளார்! அவர் நிச்சயம் கைது செய்யப்பட வேண்டியவர்தான் என்பதை இப்போது ஒப்புக் கொள்கிறீர்கள் அல்லவா?!

அவர் அனுபவித்த கொடுமைகளைப் பட்டியலிட்டு காவல் துறைத் தலைவருக்கு வடித்துள்ள கடிதத்தின் மூலம் அந்த சோகக்கதையை அறியலாம். நெஞ்சை திடப்படுத்திக் கொண்டு இங்கிருந்து அதனை டவுன்லோடு செய்து வாசியுங்கள்.

உங்கள் மனத்தில் தற்போது எழப்போகும் கேள்விகள்:-

  • தேசிய பெண்கள் வாரியத்தின் நோக்கில் இந்த முதிய அம்மையார் பெண்ணினத்தில் சேர்ந்தவராகக் கருத்தப்பட மாட்டாரா?

  • அது போன்ற இயக்கங்கள் தவறு செய்யும் பெண்களுக்காகத் தானா?

  • ஆண் பிள்ளையைப் பெறுவதே இந்நாட்டில் பெருங்குற்றமா?

  • இதுபோல் ஒருதலைச் சார்பான சட்டங்களின் தவறான பயன்பாடு இன்னும் அதிகமாகப் பெருகி ஒரு கட்டத்தில் சமூகக் கிளர்ச்சி ஒன்று ஏற்படும் அபாயம் உள்ளதே, ஏன் ஒருவரும் இதற்கான தீர்வை செயல்படுத்த மறுக்கிறார்கள்?

  • இந்நாட்டு ஆண்களைப் பொறுத்தவரை திருமணம் என்பதே பாம்புப் புற்றில் கைவிடுவது போன்று ஆகிவிட்டதே; சீக்கிறமே ஆண்சிசுக் கொலைகள் நடக்கத் தொடங்கிவிடுமா?"


பதில் உங்கள் கையில்!

5 மறுமொழிகள்:

')) said...

"மன்னிக்க முடியாத குற்றம்!" - உண்மை ஊர்அறியவேண்டும்! உண்மை வென்றிட வேண்டும்... எங்களுக்கு ஏற்பட்ட துன்பங்களை ஊர்அறியசெய்ததற்கு நன்றி! நன்றி! நன்றி!

Anonymous said...

keep up your excellent work !

Read this as well.
http://ungalrasigan.blogspot.com/2009/11/blog-post_16.html

')) said...

//தேசிய பெண்கள் வாரியத்தின் நோக்கில் இந்த முதிய அம்மையார் பெண்ணினத்தில் சேர்ந்தவராகக் கருத்தப்பட மாட்டாரா?//

தேசிய பெண்கள் வாரியத்தை நடத்துபவர்கள் பெண்கள் தானா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

')) said...

யப்பு எனக்கு 27 வயசகுது.வீட்டில கல்யாணம் பன்ன சொல்லி வற்புறுத்துறாங்க.
எனக்கு இந்த பொண்ணுங்கள பார்த்தாலே பயமா இருக்குங்க.எப்ப பொய் கேஸ் போட்டு நம்மல மாட்டி விடுவாங்கனும் தெரியாது...
யாராச்சும் idea இருந்தா சொல்லுங்கப்பு...

')) said...

பயந்து ஓடுவது கொலைகளின் கொள்கை DVA ,498a வை தன் புத்தி சாமர்த்தியத்தால் வென்ற முதல்வன் ஒரு தமிழன் படியுங்கள் அவனது தீரச் செயலை.
http://misuse498adva.blogspot.in

பாதகம் செய்பவரை கண்டால் பயம்கொள்ளல் ஆகாது பாப்பா மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா.