தாய்மையின் பெருமை

3 குழந்தைகள், கள்ளக்காதலனுடன் இளம்பெண் விஷம் குடித்தார்
உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி

இடுக்கி, நவ.2 - 2009. தினத்தந்தி

3 குழந்தைகள் மற்றும் கள்ளக்காதலனுடன் இளம் பெண் விஷம் குடித்தார். இதையடுத்து அவர்கள் 5 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இளம்பெண்

இடுக்கி மாவட்டம் ஆனச்சால் பகுதியைச் சேர்ந்தவர் அனிதா (வயது33). இவர் கணவனை பிரிந்து தனது 3 குழந்தைகளான சங்கீதா (9), சரிதா (7), கங்கா (4) ஆகியோருடன் மண்ணாக்குடியில் உள்ள சகோதரன் வீட்டில் வசித்து வந்தார்.

இதற்கிடையில் அனிதாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான ஹரி (35) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறியதாக தெரிகிறது.

மயங்கிய நிலையில்...

இந்த நிலையில், அங்குள்ள தனியார் தொழிற்சாலை அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் ஹரியின் ஆட்டோ நின்று கொண்டிருந்தது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஆட்டோ அருகே சென்று பார்த்தபோது அங்கு ஹரி, அனிதா மற்றும் 3 குழந்தைகளும் வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அருகில் விஷம் கலந்த ஐஸ்கிரீம் இருந்தது.

இது குறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக அங்கு விரைந்து சென்று, 5 பேரையும் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஹரி- அனிதா கள்ளக்காதலுக்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டதால், 3 குழந்தைகளுக்கும் ஐஸ்கிரீமில் விஷம் கலந்து கொடுத்து அவர்களும் தின்றதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.