பிரபல பெண் சாராய வியாபாரி கைது

இந்தச் செய்தி அப்பட்டமான பொய்! நம்பாதீர்கள்!

பெண்கள் தவறே செய்ய மாட்டார்கள். குற்றம் செய்வது ஆண் மட்டும் தான்!
பெண்கள் அனைவருமே அபலைகள்! அவர்கள் கேட்கும் போது ஆண்கள் பணம் கொடுத்து அழவேண்டும். அதுதான் இந்நாட்டின் சட்டம்!! அதுதான் நீதியின் தீர்ப்பு!!

இப்போது செய்தி:

சென்னை, நவ.19 - 2009. செய்தி: தினத்தந்தி

அண்டாவில் வைத்து நள்ளிரவில் கூவி, கூவி வியாபாரம்

அரசு மதுவில் அதிக போதைக்காக ரசாயன பவுடர் கலந்து விற்பனை

பிரபல பெண் சாராய வியாபாரி கைது

அரசு மதுவில் அதிக போதைக்காக ரசாயன பவுடர் கலந்து விற்பனை செய்த பிரபல பெண் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்.

சாராய வியாபாரி அப்பம்மா

சென்னை வால்டாக்ஸ் ரோடு பகுதியில் உள்ள ஜமரா தோட்டத்தில் வசிப்பவர் அப்பம்மா(வயது 40). பிரபல சாராய வியாபாரியான இவர் 4 முறை ஜெயிலுக்கு போய் இருக்கிறார். இவர் தற்போது அரசு மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து, நள்ளிரவில் அந்த மது பாட்டில்களை திறந்து அதில் உள்ள மதுவை அண்டாவில் ஊற்றி, பின்னர் அதில் தண்ணீரையும் ஊற்றி, அடுத்து அதில் அதிக போதைக்காக ரசாயன பவுடரையும் கலந்து "குவாட்டர்'' பாட்டில் ரூ.100-க்கு விற்பனை செய்வதாக அப்பம்மா மீது போலீசாருக்கு ரகசிய புகார் தெரிவிக்கப்பட்டது.

அப்பம்மாவை கையும், களவுமாக பிடித்து கைது செய்ய இணை கமிஷனர் சேஷசாயி உத்தரவிட்டார்.துணை கமிஷனர் பெரியய்யா, உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் பூக்கடை இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் இதற்காக தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது.

கைதானார்

நேற்று முன்தினம் நள்ளிரவில் அப்பம்மா அதிக போதை மதுவை அண்டாவில் வைத்து கூவி, கூவி, விற்கும் போது தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

1 மறுமொழி:

')) said...

‘ஒரு பெண் ஆபரணங்கள் அணிந்து தனியாக பயமின்றி இரவில் நடந்து செல்லும் நாள் தான் முழுச்சுதந்திரமடைந்த நாளாக கருதப்படும்’ என்று ஒரு பெரியவர் சொல்லியிருப்பதாக ஒரு கருத்து இருக்கிறது.

ஒரு படிப்பறிவில்லாத பெண் நள்ளிரவில் தனியாக "போதை பானத்தை" கூவி விற்கும் அளவிற்கு பெண்கள் அச்சமின்றி இரவில் உலவும் அளவிற்கு அளவுக்கு அதிகமாகவே சுதந்திரம் இருக்கிறது. சுதந்திரத்தையும் தாண்டி ஆனந்த சுதந்திரமே கிடைத்துவிட்டது!இது போதாதா?