பெருகுது 498A அறுவடை, ரொம்புது கல்லா!

கீழ்க்கண்ட புகார்களின் நடைமுறைக்கு ஒவ்வாத "டெம்பிளேட்" தன்மையையும், கற்பனை வளத்தையும், வெளிநாடுகளில் இதுபோன்ற பொய் வழக்கு ஜோடனைகளின் பருப்பு வேகாது என்பதால் அங்கு நடந்தவைக்கு நம்மூரில் வந்து புகார் கொடுக்கும் அவலத்தையும் காணுங்கள். இங்குதானே "ஐயோ பாவம், அபலைப் பெண்கள்" என்று கண்ணீர் விட்டுக் கதறி உருக வைத்து, "உன்னுடன் வாழாத மனைவி கேட்கும் ரொக்கத்தைக் கொடு, இல்லாவிடில் ஜெயிலுக்குப் போ" என்று உத்தரவுகள் பெற்று, ஆண்களை இலவச ஏ.டி.எம் மெஷீனாக மாற்றும் சடங்கு நடக்கும்!

தினந்தோறும் அறங்கேற்றப்படும் நம் புதுமைப் பெண்களின் புனிதத்தன்மையைக் கண்டு களித்து கலியாணம் செய்து கொண்டு வயதான பெற்றோருடன் கூட்டாக கைது செய்யப்பட்டு ஜெயிலுக்குப் போங்கள்!

1.
அருப்புக்கோட்டையில் இளம்பெண்ணிடம் வரதட்சணை கொடுமை; 4 பேர் மீது வழக்கு

அருப்புக்கோட்டை, நவ.10 - 2009. தினத்தந்தி

அருப்புக்கோட்டை அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக கணவன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய் யப்பட்டுள்ளது.

திருமணம்

அருப்புக்கோட்டை நல்லூர் முஸ்லிம் வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் செய்யது அலிபாத் திமா (வயது 22). இவருக்கும் அஜீஸ்நகர் பஜீருல் ஹக் என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, மணமகள் வீட்டார் சார்பில் 10 பவுன் நகையும், 70 ஆயிரம் ரொக்கமும் தருவதாக பேசப்பட்டது. ஆனால் அப்போது 10 பவுன் நகையும், 16 ஆயிரம் ரொக்கமும் கொடுக்கப்பட் டது. மீதி ரொக்கப்பணத்தை 2 மாதம் கழித்து தருவதாக மணமகள் வீட்டார் சார்பில் பேசப்பட்டதாக தெரிகிறது.

கொடுமை

ஆனால் அதன்படி மீதி பணத்தை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இத னால் மீதி பணத்தை வாங்கி வரும்படி செய்யது அலி பாத்திமாவை கணவர்பஜீருல் ஹக், அவரது தாயார் ஆயிஷா பீவி, அண்ணன் காட்டுபாவா, தம்பிரியாஸ் ஆகியோர் துன் புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து செய்யது அலி பாத்திமா அருப்புக் கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து

பஜீருல் ஹக் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

2.
வரதட்சணை கொடுமை: கணவர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு

திண்டுக்கல்,அக்.28 - 2009. தினத்தந்தி

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக, கணவர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வரதட்சணை கொடுமை

திண்டுக்கல் மீனாட்சி நாயக்கன்பட்டி வடக்குபாறைப்பட்டியை சேர்ந்தவர் கவிதா (வயது 24). இவருக்கும், மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த சங்கர் (30) என்பவருக்கும் இடையே கடந்த 3.12.2009-ந்தேதியன்று திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 27 பவுன் தங்கநகை மற்றும் ரூ.45 ஆயிரம் ரொக்கபணம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இதற்கிடையே கவிதா கறுப்பாக இருப்பதாகவும், படிக்கவில்லை என்றும் கூறி சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூறியதாக தெரிகிறது.

மேலும் கூடுதலாக 15 பவுன் தங்கநகை மற்றும் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு ரூ.25 ஆயிரம் பணம் கேட்டு வீட்டை விட்டு விரட்டி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திண்டுக்கல் 2-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கவிதா மனுதாக்கல் செய்தார்.

பெண் கைது

இந்த மனுவினை விசாரித்த மாஜிஸ்திரேட்டு உமாராணி, புகார் கூறிய சங்கர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீதாதேவி புகார் கூறப்பட்ட சங்கர், அவரது தாயார் கமலா (57), உறவினர்கள் பாமா (38), பாக்கியலெட்சுமி (35), சுதர்கனா தேவி (46), ராஜேந்திரன் (46), ரகுநாதன் (40) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தார். இதில் திண்டுக்கல் முருகபவனத்தை சேர்ந்த சுதர்கனாதேவியை நேற்று போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

3.
தனி அறையில் அடைத்து கொடுமை: லண்டன் கணவர் மீது மனைவி புகார்

நவம்பர் 08,2009. தினமலர்

காரைக்குடி: வரதட்சணை கேட்டு தனி அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய கணவர் உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த பிரதீபாவுக்கும் (23), கல்லலை சேர்ந்த சண்முகம் மகன் ராமநாதனுக்கும் (29) கடந்த 2007 ல் திருமணம் நடந்தது.

கணவர் குடும்பத்தினர் லண்டனில் தொழில் செய்து வந்தனர். சில மாதங்களில் பிரதீபா அங்கு சென்றார்.ஐந்து லட்ச ரூபாய் வரதட்சணை கேட்டு, அங்கு தனி அறையில் பிரதீபா அடைக்கப்பட்டார். கணவருடன் தொடர்பு இல்லாத நிலையில், பெற்றோரிடம் பேசவும் தடை விதித்தனர். அங்குள்ள உறவினர்கள் உதவியுடன் கடந்த டிசம்பரில் பிரதீபா நாடு திரும்பினார்.கணவருடன் சேர்த்து வைக்க கோரி சென்னை குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தற்போது நிலுவையில் உள்ளது.

கடந்த ஒன்றாம் தேதி லண்டனில் இருந்து பிரதீபாவின் மாமனார் சண்முகம், மாமியார் வசந்தா நாடு திரும்பினர். அவர்களிடம் பிரதீபாவின் பெற்றோர் பேச்சு நடத்தினர்.ஐந்து லட்ச ரூபாய் வரதட்சணை கொடுத்தால் மகனோடு சேர்ந்து வைப்பதாக கூறினர்.இதுகுறித்து காரைக்குடி மகளிர் போலீசில் பிரதீபா புகார் செய்தார்.கணவர் ராமநாதன்,அவரது பெற்றோர் மீது இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் அமலராணி வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.

4.
ஐதராபாத்தில் வரதட்சணை கொடுமை புகார்

கோவை : ஐதராபாத்தில் கணவர் குடும்பத்தினரால் துன்புறுத்தப்பட்ட பெண், நடவடிக்கை கோரி கோவை போலீசில் புகார் கொடுத்தார்.கோவைப்புதூர், சிறுவாணி நகரைச் சேர்ந்தவர் தேவா(32). இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த சுமலதா(28)வுக்கும் 2007ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின் தேவா தனது குடும்பத்துடன் ஐதராபாத், குருமூர்த்தி லேன் பகுதியில் குடியேறினார்.சில நாட்களுக்கு முன், ஐதராபாத்திலிருந்து பெற்றோர் வீட்டுக்கு திரும்பிய சுமலதா, தன்னை கணவரும், அவரது குடும்பத்தினரும் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாகத் தெரிவித்தார். இது தொடர்பாக குனியமுத்தூர் போலீசில் சுமலதா புகார் கொடுத்தார். அதில், கணவர் தேவா, மாமியார் பட்டம்மாள், மாமனார் ராஜகோபால் மற்றும் உறுவினர் ரோகிணி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

வழக்குப்பதிவு செய்த கோவை போலீசார், சம்பவம் நடந்த இடம் ஐதராபாத் என்பதால், மேல் நடவடிக்கைக்காக, முதல் தகவல் அறிக்கையை ஐதராபாத் போலீசாருக்கு அனுப்பி வைத்தனர்.

5.
வரதட்சணை கேட்டு மிரட்டல்:
பெண் வக்கீலை ஏமாற்றி திருமணம் செய்த போலி வக்கீல் கைது

சென்னை, அக்.25- 2009. செய்தி - தினத்தந்தி

பெண் வக்கீலை ஏமாற்றி திருமணம் செய்ததுடன், வரதட்சணை கேட்டு மிரட்டிய 'போலி' வக்கீல் கைது செய்யப்பட்டார்.

பெண் வக்கீல்

தஞ்சாவூர் முனிசிபல் காலனியை சேர்ந்தவர் மோசஸ். இவருடைய மகள் உஷா மோசஸ் (வயது 39). சென்னையில் வக்கீலாக வேலைபார்த்து வருகிறார். உஷா மோசஸ் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் கடந்த 2004-ம் ஆண்டு சென்னை ஜார்ஜ் டவுண் கோர்ட்டில் வக்கீல் ஒருவரிடம் ஜுனியராக வேலை பார்த்தேன். அப்போது மற்றொரு வக்கீல் ஒருவரின் அலுவலகத்தில் வேலைபார்த்து வந்த ஸ்ரீராமுலு என்ற பால் ஸ்ரீராம் (34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஸ்ரீ ராமுலு திருத்தணி கிருஷ்ணசமுத்திரம் காலனி பகுதியை சேர்ந்தவர். வக்கீல் தொழில் பார்த்து வருவதாக கூறினார். அதற்கான அடையாள அட்டையையும் காண்பித்தார். அவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது.

மோசடி

அதைத் தொடர்ந்து ஸ்ரீ ராமுலுவும் நானும் திருமணம் செய்ய முடிவு செய்தோம். திருத்தணியில் கிறிஸ்தவ முறைப்படி எங்களுடைய திருமணம் 14.9.2005 அன்று நடந்தது. அதன் பிறகு சென்னை வரத முத்தையப்பன் தெருவில் வசித்து வந்தோம். திருமணத்திற்கு பிறகுதான் அவர் போலி வக்கீல் என்பது தெரியவந்தது.

பி.ஏ. பொருளாதாரம் படித்துள்ள ஸ்ரீராமுலு, ஆந்திர மாநிலத்தில் உள்ள சட்டக்கல்லூரி ஒன்றில் படிக்க சேர்ந்ததுடன் சரி, பட்டம் எதுவும் வாங்கவில்லை. எந்த கோர்ட்டிலும் வாதாடவில்லை என்பது தெரியவந்தது. இந்த மோசடி குறித்து கேட்ட போது, என்னுடன் தங்குவதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில், எனக்கு குழந்தை பிறக்கவில்லை என்பதை காரணம் காட்டி, தன்னுடைய சகோதரி மகள் சரிதா என்பவரை 2-வது திருமணம் செய்யப்போவதாக ஸ்ரீராமுலு கூறினார்.

இந்த நிலையில், ஸ்ரீராமுலு சரிதாவை எனக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். இது பற்றி அவரிடம் கேட்டதற்கு, என்னுடன் வாழ வேண்டும் என்றால் அதிக வரதட்சணை கொடுக்க வேண்டும் என்று மிரட்டி வருகிறார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு உஷா மோசஸ் புகாரில் கூறியிருந்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் இணை கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர் பெரியய்யா ஆகியோர் மேற்பார்வையில் கொத்தவால்சாவடி இன்ஸ்பெக்டர் ஹரிக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். ஸ்ரீராமுலு மீது 406, 420, 467 பிரிவு 4, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் (இது எங்கிருந்து வந்தது!) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கைது

விசாரணையில் ஸ்ரீராமுலு திருத்தணியில் நடந்த அடிதடி வழக்கு ஒன்றில் தொடர்புடையவர் என்பதும், தன்னை போலீசார் தேடுகிறார்கள் என்பதை அறிந்தால் அவரை தலைமறைவாகி விடலாம் என்பதால் அவரை 'பொறி' வைத்து பிடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஸ்ரீராமுலுவிடம் செல்போன் மூலம் உஷா மோசஸ் பேசினார்.

இனிமேல் சண்டை போடமாட்டேன் என்றும் கேட்ட வரதட்சணை பணத்தை தருவதாகவும், எனவே சென்னைக்கு வரவேண்டும் என்றும் ஸ்ரீராமுலுவிடம் கேட்டுக் கொண்டார். அவரது பேச்சை உண்மை என்று நம்பிய ஸ்ரீராமுலு நேற்று முன்தினம் சென்னை வந்த போது போலீசில் சிக்கிக் கொண்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் போலி வக்கீல் என்று கூறி ஏமாற்றியதையும், வரதட்சணை கேட்டு மிரட்டியதையும், 2-வது திருமணம் செய்ததையும் ஒப்புக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

4 மறுமொழிகள்:

')) said...

நாட்டை நாசமாக்க வெளியிலிருந்து தீவிரவாதிகள் வரத்தேவையில்லை. உள்நாட்டிலுள்ள இந்தக் கூட்டணியே போதும். பல குடும்பங்களை அடுத்த தலைமுறை கூட இல்லாமல் அழித்துக் கொண்டிருக்கும் இந்த நாசக்காரக் கூட்டத்தைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது போலுள்ளது.

')) said...

இதொ ஒரு கள்ளக்காதல் கத்திகுத்து சம்பவம்!

தினமலரில் வெளியான செய்தி


4.கள்ளக் காதலன் வீட்டில் குடும்பம் நடத்திய மனைவிக்கு கத்திக்குத்து : கணவர் கைது

http://www.dinamalar.com/district_main.asp?ncat=Chennai#256023

')) said...

//கணவர் குடும்பத்தினர் லண்டனில் தொழில் செய்து வந்தனர். சில மாதங்களில் பிரதீபா அங்கு சென்றார்.ஐந்து லட்ச ரூபாய் வரதட்சணை கேட்டு, அங்கு தனி அறையில் பிரதீபா அடைக்கப்பட்டார். கணவருடன் தொடர்பு இல்லாத நிலையில், பெற்றோரிடம் பேசவும் தடை விதித்தனர். அங்குள்ள உறவினர்கள் உதவியுடன் கடந்த டிசம்பரில் பிரதீபா நாடு திரும்பினார்.கணவருடன் சேர்த்து வைக்க கோரி சென்னை குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தற்போது நிலுவையில் உள்ளது.//

//கடந்த ஒன்றாம் தேதி லண்டனில் இருந்து பிரதீபாவின் மாமனார் சண்முகம், மாமியார் வசந்தா நாடு திரும்பினர். அவர்களிடம் பிரதீபாவின் பெற்றோர் பேச்சு நடத்தினர்.ஐந்து லட்ச ரூபாய் வரதட்சணை கொடுத்தால் மகனோடு சேர்ந்து வைப்பதாக கூறினர்.இதுகுறித்து காரைக்குடி மகளிர் போலீசில் பிரதீபா புகார் செய்தார்.கணவர் ராமநாதன்,அவரது பெற்றோர் மீது இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் அமலராணி வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.//


"Do not be forced into participating in legal action in country of husband’s residence. You can file a case in India and cannot be forced to defend a case filed against you by husband abroad-especially divorce. INDIA HAS MORE WOMEN-FRIENDLY LAWS THAN MANY OTHER COUNTRIES- National Commission for Woman"

')) said...

//INDIA HAS MORE WOMEN-FRIENDLY LAWS THAN MANY OTHER COUNTRIES- National Commission for Woman"//

நன்றி, கிராமத்துப் பையன்.

இந்த தேசிய பெண்கள் வாரியம் தான் உண்மையில் ஏழை இந்தியப் பெண்களின் முதல் எதிரி! இவர்கள் பொய்க்கேசு போட்டு மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலுக்குத்தான் துணை போவார்கள்.

வெளி நாட்டில் நடந்ததாக இங்கு வந்து பொய்ப் புகார் கொடுக்கும் போக்கு தொடர்ந்தால் எ.ஆர்.ஐ-கள் இனிமேல் இந்தியப் பெண்களைத் தவிர்த்துவிட்டு உகாண்டா, போட்ஸ்வானா போன்ற நாட்டுப் பெண்களை திருமணம் செய்துகொண்டால் தேவலை என்று எண்ணத் தொடங்கிவிடுவார்கள்!