'டிவி' தொடர் பார்க்க விடாததால் மனைவி விவாகரத்து

மும்பை : "எனக்கு பிடித்த "டிவி' தொடர்களை பார்க்க அனுமதிக்க மறுக்கிறார்; இதனால், எங்களுக்குள் தினமும் சண்டை ஏற்படுகிறது. இதை மனதில் வைத்து, பலவகையில் என்னை துன்புறுத்துகிறார்!' - இப்படி சொல்லி, குடும்ப கோர்ட்டில் கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார் மனைவி. "திருமணத்தை முறிக்க விரும்பவில்லை; நான் சேர்ந்து வாழவே விரும்புகிறேன்' என்று கணவன் அப்பீல் செய்துள்ளார்.

செய்தி: தினமலர் - நவம்பர் 25,2009.
http://www.dinamalar.com/court_detail.asp?news_id=4542

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக இருக்கிறார் ஹர்ஷத்(34); இவர் மனைவி சீமா (31). சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்; திருமணம் ஆகி எட்டாண்டு ஆகிறது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. "என் கணவர் என்னை பலவகையில் கொடுமைப்படுத்துகிறார். எனக்கு பிடித்தமான "டிவி' தொடர்களை பார்க்க அனுமதிப்பதில்லை. இது தான் சண்டைகளுக்கு காரணம். அதனால், எனக்கு சரியான பாதுகாப்பு அளிப்பதில்லை. நள்ளிரவில் தனியாக ஆட்டோவில் பயணிக்க வைக்கிறார். இது போன்ற சித்ரவதைகளை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை' என்று குடும்ப நல கோர்ட்டில் மனு செய்தார் சீமா. வழக்கை விசாரித்த கோர்ட், அவர்களுக்கு விவாகரத்து அளித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து, மும்பை ஐகோர்ட்டில் கணவன் ஹர்ஷத் அப்பீல் செய்தார்.


"இந்திய சமுதாயத்தின் ஒரு முக்கிய அங்கம் திருமண பந்தம். அதை சாதாரணமாக முறிக்க முடியாது. "எந்த ஆதாரமும் இல்லாமல், என் மனைவி என் மீது சொன்னதை வைத்து விவாகரத்து கொடுத்திருப்பது சரியல்ல; திருமண முறிவு தொடர்பான வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் பல முறை சுட்டிக்காட்டிய கருத்துக்களை குடும்ப நல கோர்ட் காற்றில் பறக்க விட்டு, இப்படி விவாகரத்து அளித்துள்ளது. "எனக்கு திருமண முறிவுவேண்டாம். அதில் விருப்பமில்லை. என் குழந்தையை நான் வளர்க்க அனுமதிக்க வேண்டும்' என்று அப்பீல் மனுவில் அவர் கூறியுள்ளார்.

=====

பார்த்தீர்களா, பார்த்தீர்களா இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் அபலைப் பெண்கள் படும் அவலத்தை!

தனக்குப் பிடித்த டி.வி சேனலைப் பார்க்க இயலவில்லை. சரி, அந்தப் பெண்மணி தான் பெற்ற குழந்தையைக்கூட கவனிக்காமல் பொழுதுக்கும் டி.வி சீரியல்களைப் பர்த்துக் கொண்டிருந்திருக்கலாம், அதை கணவன் கண்டித்திருக்கலாம் - இப்படியெல்லாம் நீங்கள் நினைத்தால் அதற்கு உங்கள் ஆணாதிக்க மனப்பான்மைதான் காரணம்.

நல்ல வேளை, இந்தப் பெண்மணி விவாகரத்தோடு நிறுத்தி விட்டார். வேறு சில பெண்குலத் திலகங்கள் இன்னேரம் சட்டப் புத்தகத்தின் இண்டு இடுக்குகளில் உள்ள அத்தனை சட்டப் பிரிவுகளையும் கையிலெடுத்து கேசு மேல் கேசாக கணவன் மற்றும் அவனது பெற்றோர் மீது போட்டு நடுத்தெருவில் நிறுத்தியிருப்பார்கள்.

சரி, நீதி(!)மன்றங்கள் அவற்றுக்குச் செவி சாய்க்குமா என்றுதானே கேட்கிறீர்கள். ஹும். உங்களுக்கு நாட்டு நடப்பே தெரியாது போலிருக்கிறது!!

12 மறுமொழிகள்:

')) said...

அருமையான காரணத்திற்காக ஒரு விவாகரத்து

//நல்ல வேளை, இந்தப் பெண்மணி விவாகரத்தோடு நிறுத்தி விட்டார். வேறு சில பெண்குலத் திலகங்கள் இன்னேரம் சட்டப் புத்தகத்தின் இண்டு இடுக்குகளில் உள்ள அத்தனை சட்டப் பிரிவுகளையும் கையிலெடுத்து கேசு மேல் கேசாக கணவன் மற்றும் அவனது பெற்றோர் மீது போட்டு நடுத்தெருவில் நிறுத்தியிருப்பார்கள்.

சரி, நீதி(!)மன்றங்கள் அவற்றுக்குச் செவி சாய்க்குமா என்றுதானே கேட்கிறீர்கள். ஹும். உங்களுக்கு நாட்டு நடப்பே தெரியாது போலிருக்கிறது!!//

ஆமாம் கொடுத்து வைத்த கணவன்! சில 498ஏ மனைவிகள் போல் ஆபாச வக்கிர காவியம் எழுதி அனைவரையும் சிறையில் தள்ளாமல் நேரடியாக விவாகரத்து நோட்டிஸ் அனுப்பிய இந்த பெண்குல திலகம் வாழ்க!

')) said...

பெற்றபிள்ளையை ரூ. 5ஆயிரத்திற்ககு விற்ற தாய்...

பாவம் இந்த தாய்! இதுபோல் பெண்களுக்கு மகளீர் ஆணையம் என்ன செய்கின்றது???


http://www.dailythanthi.com/article.asp?NewsID=529589&disdate=11/25/2009

')) said...

எந்த ஒரு பெண்ணையும் தரக்குறைவாக தயவு செது பேசாதீர்கள்.
வேலைக்கு போகும் கணவன் காலையில் எட்டு மணிக்கு ஆபீஸ் போய்விட்டு இரவு 8 மணிக்கு மேல் வருகிறான்.
அவன் சமுதாயத்துடன் பழகுகிறான்.பாவம் இந்தத தாய்குலங்கள் 24 மணி நேரமும் பெற்ற பாவத்துக்காக குழந்தையை பார்க்கவேண்டி இருக்கிறது.
சரி வீட்டிற்கு வந்தால் கூட சரியாக மனைவியிடம் பேசுகிறார்களா? இல்லை.
சற்று சிந்திதுபாருங்கள், உங்கள் வீடில் கூட எத்தனை பெண்கள் விரும்பிய டிவி சேனலை பார்க்கிறார்கள்.அவர்களுக்குப பிடித்த சமையல் சமைக்கிறார்கள்.இதெல்லாம் ஆணாதிக்கம் அல்லவா?
ஒன்று மட்டும் புரிந்துகொள்ளுங்கள்,உங்கல் வீட்டுக்கு விளக்கேறற வந்தவளை வேலைகாரியாக நினைக்காதீர்கள்,மாலக்ஷ்மியாக நினையுங்கள்.

')) said...

திருமதி ஜெயசீலன் அவர்களே,

//இந்தத தாய்குலங்கள் 24 மணி நேரமும் பெற்ற பாவத்துக்காக குழந்தையை பார்க்கவேண்டி இருக்கிறது. //

இப்படி சலித்துக் கொள்கிறீர்களே, குழந்தை வளர்ப்பை ஒரு பெருஞ்சுமையாக நினைக்கும் நீங்கள்தான் எங்கள் ஆதரிச தாய். உங்களைப் போற்றுகிறோம்! நீங்கள்தான் அனைத்துத் தாய்மார்களுக்கும் ஒரு உன்னத முன்னுதாரணம்!

இப்போது புரிகிறது, ஒரு அற்ப காரணத்தைச் சொல்லி தன் திருமணத்தை முறித்திருக்கும் அந்தப் பெண்ணுக்கு நீங்கள் ஏன் வக்காலத்து வாங்குகிறீர்கள் என்று!

இனிமேல் திருமணம் செய்து கொள்ளப் போகும் இளைஞர்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கு வரன் பார்க்கும் பிள்ளையைப் பெற்ற தாய்மார்களுக்கும் இது ஒரு நல்ல பாடம்.

வாழ்க, உங்களைப் போன்ற உன்னதத் தாய்க்குலங்கள்!

விளக்கேற்ற வந்த மகாலட்சுமிகள் வெளி உலகம் தெரியாத பேதைகளா? நீங்கள் எந்த யுகத்தில் இருக்கிறீர்கள்!

நீங்கள் சித்தரிப்பது போல் இந்தக்காலப் பெண்கள் எவரும் ஒன்றுமே தெரியாத பேதைப் பெண்களல்ல என்பதை அனைவரும் அறிவர்.

நீங்கள் ஒரு பெண் தன் இஷ்டப்படி டிவி பார்க்க முடியவில்லை என்னும் அற்ப காரணத்திற்காக கணவனை விவாகரத்து செய்வதை வெளிப்படையாக ஆதரிப்பதன் நோக்கம் என்ன? அதை நியாயப்படுத்தி அது போன்று அனைத்து குடும்பங்களும் சிதைந்து, திருமணத்தையும் குடும்ப வாழ்வு முறையையும் கேலிக் கூத்தாக்கி, நம் நாட்டில் ஆண்களும் பெண்களும் தனி மரஙகளாக நிற்கும் நிலை ஏற்பட வேண்டும் என்னும் ஆசையா?

')) said...

(தொடர்ச்சி)

திருமதி ஜெயசீலன் அவர்களே,

அமேரிக்காவில் உள்ளது போல் தந்தை பெயர் தெரியாத ஒரு சமூகத்தை வருங்காலத்தில் ஏர்படுத்துவதுதான் சரி என்பது உங்கள் கருத்தா?

குடும்பம் என்றால் பிரச்னைகள் இல்லாமல் இருக்குமா? தவறு யாரிடம் வேண்டுமானாலும் இருக்கலாம். அனைத்து ஆண்களும் கிரிமினல்களல்ல, அனைத்துப் பெண்களும் உன்னத தேவதைகளுமல்ல என்பதை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளவேண்டும்; அது சிறுமையுமல்ல. நாம் பணி புரியும் இடத்தில் எவ்வளவு சகித்துக் கொண்டு போகிறோம்!

குடும்பப் பிரச்னைகளுக்குத் தீர்வு காவல் நிலையங்களும், கோர்ட்டும், பொய் கிரிமினல் வழக்குகளும், கணவன், மாமியார்,மாமனார், நாத்தனார், அவருடைய 2 மாதக் குழந்தை ஆகியோரை கைது செய்வித்து சிறைக்கனுப்புவதுதானா? அதையா நீங்கள் வரிந்து கட்டிக் கொண்டு ஆதரிக்கிறீகள்?

மகாலட்சுமிகளைப் பற்றிப் பேசுகிறீர்களே, தன்னிஷ்டப்படி டிவி பார்க்க முடியவில்லை என்பதைக் காரணம் காட்டி தன் குழந்தையின் எதிர்காலத்தைப் பற்றிய எந்தவித அக்கறையுமின்றி, தான், தன் சுகம் என்பதையே முன்னிறுத்தி தன் திருமணத்தை முறித்துக் கொண்ட பெண்மணியை ஆதரிக்கிறீர்களே, இதே போன்ற பெண்கள் தொடுத்த பொய் 498A வழக்குகளால் கதறக் கதற கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்களே, அந்த லட்சக்கணக்கான பெண்கள், அவர்கள் உங்கள் நோக்கில் பெண்ணினத்தைச் சேர்ந்தவர்கள் இல்லையோ!

')) said...

தொடர்ச்சி:

குடும்பப் பிரச்னைகளுக்குத் தீர்வு குடும்பம் என்னும் கட்டமைப்பினுள் அமைய வேண்டுமேயன்றி போலீஸ் ஸ்டேஷனிலும், கோர்ட்டிலும் அல்ல. இதுபோல் கணநேரக் கோபத்தினாலும், தான்தோன்றித்தனத்தினாலும், அனுசரித்துப் போகாத மனநிலையினாலும், கணவனையும் அவனது ரத்த உறவுகளையும் எவ்வகையிலாவது கொடுமைப் படுத்த வேண்டும் என்னும் வெறியினாலும் உந்தப்பட்டு, பொய்க்கேசுகள் போட்டு தங்கள் வாழ்க்கையைத் தொலைத்த பல பெண்கள் சில ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் இழப்பைப் பற்றி எண்ணி குமுறிக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா? இஷ்டத்திற்கு டிவி பார்க்க முடியவில்லை என்பதை காரணம் காட்டி விவாகரத்து செய்வது சரிதான் என்று வாதிடும் நீங்கள் அந்தக் குழந்தைக்கு ஏற்படப்போகும் உளரீதியான துன்பங்களைப் பற்றியும், இளமை போன பின் அந்தப் பெண் இருக்கப் போகும் நிலையைப் பற்றியும் சிறிதளவாவது சிந்தித்தீர்களா?

உண்மை நிகழ்வுகளை மேற்கோள் காட்டி நம்மைச் சுற்றி நடக்கும் தவறுகளை இந்த வலைப்பதிவில் விமரிசிக்கிறோமேயன்றி, ஒழுக்க நெறியுடன் குடும்ப வாழ்வை உன்னதமாக வாழும் கோடிக்கணக்கான பெண்களை ஒரு போதும் தாழ்வாக இங்கு பேசியதேயில்லை. உணமையில் குடும்ப வாழ்வின் மேன்மையை வலியுறுத்துவதுதான் எங்கள் இயக்கத்தின் அடிப்படை நோக்கமே! தினந்தோறும் நூற்றுக் கணக்கான ஆண்களும் பெண்களும் எங்கள் உதவி மையத்தைத் தொடர்பு கொண்டு இலவச உதவி பெற்று வருகிறார்கள். சமீபத்தில் இதுபோல் பொய்க் கேசுபோட்டு பழிவாங்கி பணம் பறித்து முடித்துவிட்ட சில பெண்கள் “எங்கள் வாழ்க்கையே போய் விட்டது. ஏதேனும் உதவி செய்யுங்கள்” என்று வேண்டிய செய்தியை முன்னொரு இடுகையில் விவரித்திருந்தோம்.

தவற்றை ஆதரிக்காதீர்கள். குடும்பத்தை சிதைக்காதீர்கள்!

தமிழ் சரவணன் said...

//எந்த ஒரு பெண்ணையும் தரக்குறைவாக தயவு செது பேசாதீர்கள்.//
ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் யாரையும் தவறாகபேசக்கூடாது என்பதே என்(எங்கள்) நோக்கம்

//சற்று சிந்திதுபாருங்கள், உங்கள் வீடில் கூட எத்தனை பெண்கள் விரும்பிய டிவி சேனலை பார்க்கிறார்கள்.அவர்களுக்குப பிடித்த சமையல் சமைக்கிறார்கள்.இதெல்லாம் ஆணாதிக்கம் அல்லவா?
ஒன்று மட்டும் புரிந்துகொள்ளுங்கள்,உங்கல் வீட்டுக்கு விளக்கேறற வந்தவளை வேலைகாரியாக நினைக்காதீர்கள்,மாலக்ஷ்மியாக நினையுங்கள்.//

வயற்காட்டில் வேலைசெய்தும்... டீக்கடை வைத்தும் எங்களை நன்றாகப்படிக்கவைத்து என்னுடைய விருப்பத்தினால் செய்யத திருமணத்திற்கு குற்றமாக என் நண்பருக்கும் எனது தாயாருக்கும் கல்ல உறவு என்று ஆபாச வக்கிர கதை கட்டி வரதட்சணை கேட்டு வயிற்றில் உதைத்தார் என்று வரதட்சணை வழக்குப்போட்டு எனது தாய், தம்பி நண்பருடைய தாயர் மற்றும் எனது தம்பி ஆகியோரை சிறையில் அடைத்த இதுபோல பெண்களுக்கு தங்கள் பதில் என்ன?
இதுவரைக்கும் சுமார் 1,50,000 ஆயிரம் பெண்கள் (வயதான தாயார்கள் மற்றும் சகோதரிகள்) மட்டும் பொய் வரதட்சணை வழக்கில் (பதிவு செய்யப்படும் 90சதவித வழக்குகள் பொய்யானவை என்று சுப்ரீம் கோர்டால் சுட்டிக்காட்டப்படுகின்றது) விசாரனை கைதிகளாக சிறைசென்றுள்ளனர்... ஆண்டொன்றுக்கு 20 ஆயிரம் குழந்தைகள் தந்தையின் அரவணைப்பில்லாம் வளர்கின்றது (எனது குழந்தை உட்பட) இதுபோல் பெண்களுக்கு (??) தங்கள் பதிலேன்ன சகோதரியே...
நான் கதைவுடுகின்றேன் என்று கருதினால் தயவுசெய்து தங்கள் மின்அஞ்சலை தெருவியுங்கள் எனது மனைவி(??) புனைந்த ஆபாச வக்கிர குற்றச்சாட்டை (F.I.R. NO. 4/2008 TAMBARAM) தங்கள் பார்வைக்கு அனுப்பி வைக்கின்றேன்

')) said...

MESSAGE -1

ஆண்களே,

திருமதி ஜெயசீலன் சொல்வது போல வீட்டில் இருக்கும் மனைவியர் தான் பெற்ற குழந்தைகளை கூட கவனிக்காமல் டிவி பார்த்தால் அதை ஒரு குற்றமாக சொல்லாதீர்கள். பிறகு அவர்கள் கள்ளக்காதல் போன்ற வேறு வேலை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள் (இன்று புதிதாய் வந்துள்ள செய்தியைப் பாருங்கள்:
http://ipc498a-misuse.blogspot.com/2009/11/blog-post_25.html).
சில சமயம் அந்த வேலைக்கு கணவர் தடையாக இருப்பதாக நினைத்தால் அவரையும் போட்டுத்தள்ளிவிடுவார்கள்.

')) said...

MESSAGE -3

தங்களின் கடமையை தட்டிக் கழிக்க “பெண்ணுரிமை” என்ற பெயரை பயன்படுத்தி தானும் அழிந்து பல அப்பாவிகளின் வாழ்க்கையையும் சிதைத்து கடைசியில் சமுதாயத்தையும் சீரழிக்கும் பெண்கள் திருந்துவதற்காக எழுதப்படுவதுதான் இதுபோன்ற கருத்துப்பதிவுகள்.

உண்மையான தாய்மையுள்ளம் கொண்ட பெண்ணை யாராலும் இழிவுபடுத்த இயலாது. அவர்கள் “சங்கு சுட்டாலும் வெண்மை தரும்” என்பதைப் போல மேன்மையானவர்கள்.

')) said...

MESSAGE -2

அதனால் அப்பாவி ஆண்களே,

மனைவி குழந்தையைப் பார்த்துக்கொள்ளவில்லை, குடும்பத்தை கவனிக்காம்ல டிவி பார்க்கிறார் போன்ற விசயங்களை பெரிதுபடுத்தி மதிப்புமிக்க உங்கள் உயிரை அற்பத்தனமாக இழந்து விடாதீர்கள்.

இப்போதெல்லாம் விளக்கேற்ற வருவதாக சொல்லிவிட்டு வீட்டையே கொளுத்தும் மருமகள்கள் தான் அதிகம்.

கணவனின் கடமை பணம் சம்பாதித்து மனைவியையும் குழந்தைகளையும் அவனது பெற்றோர்களையும் காப்பாற்ற வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் மனைவியின் கடமை என்னவென்று சொல்வதற்கு கிழக்கோட்டான்கள் அஞ்சுகின்றன. ஆனால் தெய்வப்புலவர் அன்றே சொல்லிவிட்டார்:
****************
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
********************
பிறந்த, புகுந்த குடும்பங்களுக்கு ஏற்ற நல்ல குணம், நல்ல செயல்களை உடையவளாய்த், தன்னை மணந்தவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைப்பவளே மனைவி.
***********************
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
***********************
உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.
************************
இது போன்ற மனைவி அமைந்தால் மனைவிக்கு டிவி என்ன வீட்டில் சினிமா தியேட்டரே கட்டித்தந்து மனைவியைப் போற்றி மகிழ பல கணவர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அதற்கேற்ற மனைவி கிடைப்பது தான் இந்தக்காலத்தில் அரிதான செயலாக இருக்கிறது.

')) said...

கணவரின் இறுதிச்சடங்கிற்கு பிள்ளை வேண்டும் என்பதற்காக பிள்ளையை தத்தெடுத்து அதன் விளைவாக ஆங்கிலேயரிடம் வீரப்போர் புரிந்த உண்மையான பெண்ணும் இந்த நாட்டில் வாழ்ந்திருக்கிறார். தான் பிள்ளைகளை பெற்றதே பாவம் என எண்ணும் பெண்களும் இந்த நாட்டில் இருக்கிறார்கள்.

')) said...

Dinamalar News:

http://www.dinamalar.com/world_detail.asp?news_id=4271

பிரிட்டன் நூலகத்தில் ஜான்சி ராணியின் கடிதங்கள்

லண்டன்: ஜான்சி ராணி தன் கணவர் மரணப்படுக்கையில் இருக்கும் போது டல்ஹவுசி பிரபுக்கு கடிதங்கள் எழுதினார். அந்த கடிதங்கள் தற்போது பிரிட்டன் நுலகத்தில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரத்துக்கு முன்னர், உ.பி., மாநிலத்தில் உள்ள ஜான்சி பகுதியை ஆண்டு வந்தவர் ராணி லட்சுமி பாய். அப்போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக டல்ஹவுசி பிரபு இருந்து வந்தார். லட்சிமி பாயின் கணவர் மரணப்படுக்கையில் இருந்தார். கணவர் தான் இறக்கும் போது இறுதி சடங்குகள் செய்ய வாரிசு ஒன்று வேண்டும் என்று தாமோதர் என்ற இளைஞரை வாரிசாக தத்தெடுத்தார். லட்சுமி பாய், தாமோதரை தனக்கு பின்னால் ஜான்சி அரசராக்க எண்ணினார். இது குறித்து, டல்ஹவுசி பிரபுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதை ஏற்க மறுத்த அவர், ஜான்சி சமஸ்தானத்தை ஆங்கில ஆட்சியின் கீழ் இணைக்கும் படி கட்டளையிட்டார். ஜான்சி ராணி அதை ஏற்க மறுத்து பிரிட்டீஷ் மீது போர் தொடுத்தார். போரின் போது, ஜான்சி ராணி கொல்லப்பட்டார்.