"என்னை தொடாதே. அந்த தகுதி உனக்கு இல்லை"

சிறுமி பர்பி, கண்ணீர் மல்க கூறுகையில்,"அப்பாவை பார்க்க வேண்டும் என, கேட்கும்போதெல்லாம், அம்மா என்னை கடுமையாக அடித்து துன்புறுத்துவார். விடுமுறை நாட்களில் அம்மா என்னுடன் நேரத்தை செலவிட மாட்டார். அவரது தோழிகளை வீட்டுக்கு வரவழைத்து பேசிக் கொண்டிருப்பார்" என்றார்.இவ்வாறு பர்பி கூறிக்கொண்டிருக்கும் போது, அவளது தாய் அனாமிகா வேகமாக வந்து, சமாதானப்படுத்த முயன்றார். இதைப் பார்த்த பர்பி, ஆவேசமாக,"என்னை தொடாதே. அந்த தகுதி உனக்கு இல்லை' என, அழத் துவங்கினாள்."


நீதிபதி அளித்த உணமையான சாக்லேட்!

செய்தி: தினமலர் - நவம்பர் 23,2009


கோல்கட்டா : வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு வந்த பத்து வயது சிறுமியை, நீதிபதியே, கடைக்கு அழைத்துச் சென்று சாக்லேட் வாங்கி கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் கோல்கட்டா கோர்ட்டில் நடந்தது. தனது தந்தையுடன் வசிக்க வேண்டும் என்ற, அந்த சிறுமியின் நீண்ட நாள் ஆசையையும் நீதிபதி நிறைவேற்றி வைத்தார்.

கோல்கட்டாவைச் சேர்ந்தவர் ராணா. இவரது மனைவி அனாமிகா. இவர்களுக்கு பத்து வயதில் பர்பி என்ற பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக ராணாவும், அனாமிகாவும் பிரிந்து வாழ்கின்றனர். குழந்தை பர்பி, அம்மாவுடன் தங்கி இருந்தாள். ஆனாலும், அப்பாவுடன் தங்கியிருக்க வேண்டும் என்பது தான், அவளது விருப்பம். குழந்தையை யார் வைத்துக் கொள்வது என்பதில் அனாமிகாவுக்கும், ராணாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. வேறு வழியின்றி இருவரும் கோர்ட் படியேறினர். கோல்கட்டா மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது.

விசாரணையின்போது, பர்பியும் கோர்ட் டுக்கு அழைத்து வரப்பட்டாள். "தந்தையுடன் தான், வசிப்பேன்' என, பர்பி உறுதியாக தெரிவித்தாள். இருந்தாலும், நீதிபதி முகோபாத்யாயா, இதில் அவசரப்பட்டு முடிவு எடுக்க விரும்பவில்லை. தந்தையின் மிரட்டல் காரணமாக, பயந்து போய் குழந்தை இவ்வாறு கூறுகிறதா என்பது உட்பட பல்வேறு சிந்தைனைகள் அவரது மனதில் ஓடின.நீதிபதி முகோபாத்யாயா, தனது இருக்கையை விட்டு எழுந்தார். நேராக சிறுமி பர்பி இருக்கும் இடத்துக்கு வந்தார். அடுத்ததாக கோர்ட்டில் நடந்த நிகழ்வு தான், அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

பர்பியின் கையை பிடித்து வெளியில் அழைத்துச் சென்றார், நீதிபதி. அருகில் இருக்கும் கடைக்குச் சென்று, சாக்லேட் வாங்கி கொடுத்தார். மகிழ்ச்சியுடன் அதை வாங்கிக் கொண்டாள், பர்பி. பின்னர், சிறுமிக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக பேச்சுக் கொடுத்தார்."இங்கே பார். இப்போது இருந்து நான் உனக்கு நண்பன். எந்த பள்ளியில் படிக்கிறாய்? உனது பொழுது போக்கு என்ன? உன் நண்பர்கள் யார்?' என, சிறுமியின் மனதுக்குள் இருப்பதை சிறிது, சிறிதாக கேட்டுத் தெரிந்து கொண்டார். நீதிபதியின் மென்மையான அணுகுமுறையால், அவர் மீது பர்பிக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

மீண்டும் கோர்ட்டுக்கு அழைத்து வந்தார். விசாரணை தொடர்ந்தது."உனக்கு ஏன் அம்மாவிடம் இருக்க பிடிக்கவில்லை' என, விஷயத்துக்கு வந்தார், நீதிபதி.இதற்கு சிறுமி பர்பி, கண்ணீர் மல்க கூறுகையில்,"அப்பாவை பார்க்க வேண்டும் என, கேட்கும்போதெல்லாம், அம்மா என்னை கடுமையாக அடித்து துன்புறுத்துவார். விடுமுறை நாட்களில் அம்மா என்னுடன் நேரத்தை செலவிட மாட்டார். அவரது தோழிகளை வீட்டுக்கு வரவழைத்து பேசிக் கொண்டிருப்பார்' என்றார்.இவ்வாறு பர்பி கூறிக்கொண்டிருக்கும் போது, அவளது தாய் அனாமிகா வேகமாக வந்து, சமாதானப்படுத்த முயன்றார். இதைப் பார்த்த பர்பி, ஆவேசமாக,"என்னை தொடாதே. அந்த தகுதி உனக்கு இல்லை' என, அழத் துவங்கினாள்.

பர்பியின் வாக்குமூலத்தை கேட்ட நீதிபதி, தனது தீர்ப்பை வாசித்தார். "பர்பியை அவளது தந்தையுடன் தங்கியிருக்க இந்த கோர்ட் உத்தரவிடுகிறது' என்றார். இதைக் கேட்ட பர்பி மகிழ்ச்சி அடைந்தாள். நேராக நீதிபதி இருக்கும் இடத்துக்கு சென்று,"நன்றி நீதிபதி அங்கிள்' என, கூறி விட்டு, வேகமாக தனது தந்தையின் கையை பிடித்தபடி, கோர்ட்டை விட்டு வெளியேறத் துவங்கினாள். சென்று கொண்டிருக்கும்போதே, நீதிபதியை நோக்கி தனது தலையை திருப்பி, மெல்ல புன்னகைத்தாள். அங்கு கூடியிருந்தவர்களின் முகங்களிலும் புன்னகை அரும்பியது.

============

இதுபோன்ற உணமையான "நீதி"பதிகளும் உள்ளனர்!

3 மறுமொழிகள்:

')) said...

பெத்த புள்ளைய இந்த மிரட்டு மிரட்டியிருக்குன்னா... பாவம் அந்த புருசன் என்ன பாடு பட்டுருப்பார்... கடைசியில் இருவரும் இந்த பெண்திலகத்திடமிருந்து தப்பி விட்டனர்

Anonymous said...

பெத்த புள்ளய நடுவில விட்டுட்டு அம்மா வேணுமா,அம்மா வேணுமா என கேக்குறவங்க எல்லாம் மனித இனமா சொல்லுங்க?

')) said...

பெத்த புள்ளை மனசில விஷத்தை விதைக்கிற கொடுமைக்கார அம்மாக்களை என்ன செய்யறது? அதுக்கு எதிரா சட்டமே இல்லையே! அவிங்களுக்கெல்லாம் குழந்தையோட நலன் முக்கியமில்லை; எப்படியாவது புருஷனைக் கொடுமை பண்ணனும்; குழந்தையும் அதுக்கு ஒரு ஆயுதம், அவ்வளவுதான்!

தாயன்பு, தெய்வத்தாய் - இதெல்லாம் கதையிலேயும் காவியத்திலும்தான் பார்க்கலாம். நாட்டில குப்பைத் தொட்டிக் குழந்தைங்கதான் அதிகமா இருக்கு!

இந்த மாதிரி பொம்பிளைங்க கிட்ட குழந்தையை ஒப்படைச்சா புதிசா வர காதலனோட சுகம் அனுபவிக்க அந்தக் குழந்தையக் கொலை கூட பண்ணிடுவாங்க! இது மாதிரி பல கேசுகளைப் பத்தி இங்கேயே எழுதியிருக்கோம்.

ஏதோ இந்த குழந்தை அந்த நீதிபதி தயவால தப்பிச்சுது!