பணம் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கிறேன்: மனைவியிடம் ரூ.25 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் கணவர்

சென்னை, நவ. 22 - 2009. செய்தி: மாலைமலர்

திருச்சியை சேர்ந்தவர் கலைசெல்வன் குவைத்தில் என்ஜினீயர் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மலர்விழி. இவர்களுக்கு 1997-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2002-ல் கோர்ட்டில் விவாக ரத்துக்கு மனு செய்தனர். கடந்த ஆண்டு கோர்ட்டு உத்தரவுபடி குழந்தை கலைச் செல்வன் வசம் வந்தது.

விவாகரத்து வழக்கு தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட முறை குவைத்தில் இருந்து தமிழகம் வந்து சென்றார். இதற்கு ஏராளமான பணம் செலவானது. இடைப்பட்ட காலத்தில் அவரது வேலையும் பறிபோனது.

வருமானத்திற்கு வழியின்றி சேமிப்பு பணத்தை செலவிட்டார். இதற்கிடையே மலர்விழி கொடுத்த வர தட்சணை கொடுமை வழக்கிலும் கலைசெல்வன் சிக்கினார். இதில் 3 மாதம் வரை ஜெயிலில் இருந்தார். ஒருவழியாக வெளியே வந்த அவர் மனைவி கொடுத்த புகாரில் இருந்து வெளியே வந்தார்.

ஒரு பக்கம் குழந்தையின் செலவு, தனது வழக்கு செலவு என்று கலைசெல்வன் சாப்பாட்டுக்கே திண்டாடும் நிலைக்கு செல்லப்பட்டார். தனது கஷ்ட நிலைமைக்கு காரணமான முன்னாள் மனைவி மலர்விழியின் நிலைமையோ தலைகீழ் என் கிறார் கலைசெல்வன்.

மேலும் கூறியதாவது:-

நான் திருமணம் செய்து கொண்டபோது மலர்விழி வேலை இல்லாமல் இருந்தார். நான் உழைத்து சம்பாதித்து அனுப்பிய பணத்தில், வேலைக்கு செல்ல முன்னேற்பாடுகள் செய்தாள். ஏராளமான பணத்தையும் வைத்து கொண்டார். தற்போது கல்லூரி ஒன்றில் பேராசிரியராக நல்ல சம்பளத்தில் உள்ளார். நானோ குழந்தையுடன் நடுத் தெருவில் நிற்கிறேன்.

எனவே மலர்விழியிடம் இருந்து மொத்தமாக ரூ.25 லட்சம் அல்லது மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் ஜீவனாம்சம் பெற்று தரவேண்டும் என கேட்டு குடும்ப நல கோர்ட்டில் மனு செய்துள்ளேன். அது வருகிற டிசம்பர் 15-ந்தேதி விசாரணைக்கு வருகிறது என்றார்.

3 மறுமொழிகள்:

')) said...

//நான் திருமணம் செய்து கொண்டபோது மலர்விழி வேலை இல்லாமல் இருந்தார். நான் உழைத்து சம்பாதித்து அனுப்பிய பணத்தில், வேலைக்கு செல்ல முன்னேற்பாடுகள் செய்தாள். ஏராளமான பணத்தையும் வைத்து கொண்டார். தற்போது கல்லூரி ஒன்றில் பேராசிரியராக நல்ல சம்பளத்தில் உள்ளார். நானோ குழந்தையுடன் நடுத் தெருவில் நிற்கிறேன்.//

ஐயோ கொடுமை! இவரை உறிஞ்சி சக்கையாக்கி போட்டுவிட்டு அதிலும் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தினான் என்ற பொய்வழக்கு வேற...

')) said...

மனைவியால் போலீஸ் தொல்லை கணவனுக்கு கைகொடுத்த மனித உரிமை கமிஷன்...

http://ipc498a-misuse.blogspot.com/2009/11/blog-post_7023.html#comment-form

Anonymous said...

மனைவிகளை எதிர்த்து போராட முன் வர வேண்டும் . பணம் கொடுத்து விட்டு புறமுதுகிட்டு ஓடுவதை நிறுத்துங்கள்