சீரழிவை நோக்கி ஒரு பயணம்

நம் நாட்டுப் பெண்களை தாங்கள் பெண்களாக இருப்பதையே வெறுக்கும்படி செய்யும் பெண்ணியவாதிகளின் ஓயாத பிரசாரத்தின் பலனாய் மணமான பெண்கள், அதுவும் காதல் மணம் புரிந்து கொண்ட பலர், இன்னொருவரோடு ஒத்துப் போக மனமில்லாமல் விவாகரத்தை வேண்டி நிற்கின்றனர். த்ங்கள் எதிர்காலத்தை வடிவமைத்து குடும்ப வாழ்வை மெலோங்கச் செய்ய வேண்டிய வயதில் கோர்ட்டு வராண்டாவில் வக்கீல் பின்னால் லோலோவென்று அலைந்து கொண்டிருக்கிறார்கள். தவிர, இவர்களில் பலர் கணவனிடமிருந்து காசுபிடுங்கும் ஆசையில் பொய்வழக்கு போட்டுத் திரிகிறார்கள்.

இவர்களாவது பரவாயில்லை, இன்னும் பலர் ஒரு ஆண்மகனிடம் அனுபவிக்கும் செக்ஸில் மட்டும் திருப்தி அடையாமல் பலவகை சுகத்தைத்தேடி கள்ளக்காதலில் ஈடுபடுகிறார்கள். இதுபோன்ற நிக்ழ்வுகள் அதிகமாகும்போதுதான் பெண்ணியவாதிகளின் அடிப்படை நோக்கமாகிய நம் குடும்ப வாழ்வு முறைச் சிதைவு முழுதாக நிறைவேறும்.
ஆனால் அந்தப் பெண்கள் கதி?

இந்தச் செய்தியைக் கூர்ந்து நோக்குங்கள்:-

கடலூரில் பெண் கற்பழித்துக் கொலை : கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
நவம்பர் 23,2009. செய்தி - தினமலர்

கடலூர் : கடலூரில், இளம் பெண்ணை கற்பழித்துக் கொலை செய்த வழக்கில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபரை, போலீசார் நேற்று கைது செய்தனர். கடலூர் பச்சையாங்குப்பம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகள் இந்துமதி(19). கடந்த 14ம் தேதி இரவு 7.30 மணியளவில் தோட்டத்திற்கு சென்றவர், மர்ம நபரால் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்துமதியின் மொபைல் போனில், சம்பவத்திற்கு சற்று நேரத்திற்கு முன் பேசிய அவரது காதலன் ராஜ்குமார் மற்றும் அந்தோணி இருதயராஜ் (27) ஆகியோர் மீது போலீசார் சந்தேகம் கொண்டனர். இந்நிலையில், ராஜ்குமார் 15ம் தேதி இரவு அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார், அந்தோணி இருதயராஜை தேடி வந்தனர். அவரை, நேற்று பிடித்து விசாரணை செய்தனர்.

அந்தோணி இருதயராஜ் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: நான்கு ஆண்டிற்கு முன் எனது பெற்றோர் ஆரோக்கியமேரி (35) என்ற பெண்ணை எனக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆரோக்கிய மேரிக்கு வயது அதிகமாக இருந்ததால், எங்களுக்குள் ஒத்துவரவில்லை. அவர் பிரிந்து சென்றுவிட்டார்.

பின், நான் புதுக்கோட்டைக்கு கரும்பு வெட்டச் சென்றபோது, டெய்ஸி ராணி என்பவரை திருமணம் செய்து கொண்டேன். அவர் வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தார். அதை நான் கண்டித்தும் விடவில்லை. அதனால், நான் விலகி விழுப்புரம் மாவட்டம் வடபொன்பரப்பியில் உள்ள தனியார் பள்ளியில் டிரைவராக வேலைக்கு சேர்ந்தேன். அங்கு பணிபுரிந்த மாலதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது மாலதியின் குடும்பத்தாருக்கு தெரியவரவே, தொடர்பை நிறுத்திக் கொள்வோம், உறவிற்கு வற்புறுத்த வேண்டாம் என மாலதி கூறினார்.

ஆத்திரமடைந்த நான், 2008 ஆக., 13ம் தேதி மாலதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன். பின்னர் புதுக்கோட்டை சென்று டெய்ஸி ராணியின் கழுத்தில் கத்தியால் வெட்டினேன். அதில், டெய்ஸி ராணி பிழைத்துக் கொண்டார்.

பின்,கடலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தபோது இந்துமதியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை நான் காதலித்தேன். அவர் என்னை காதலிக்கவில்லை. தொடர்ந்து அவரின் மனதை மாற்ற போனில் பேசிவந்தேன். கடந்த 14ம் தேதி, புதுச்சேரியிலிருந்து கடலூர் வந்த நான், இந்துமதியிடம் பேசி, தோட்டத் திற்கு வரவழைத்து, கற்பழித்து கொலை செய்துவிட்டு தப்பியோடினேன். இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

கடலூர் முதுநகர் போலீசார், அந்தோணி இருதயராஜை கைது செய்து கடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.