கணவன்கள் ஏ.டி.எம்., மிஷின்களா? மனைவிகளுக்கு எதிராக போர்க்கொடி!

நவம்பர் 27,2009. செய்தி - தினமலர் (http://www.dinamalar.com/General_detail.asp?news_id=19275)

புதுடில்லி:"கணவன் என்பவன் மனைவிக்கு எப்போதும் பணம் கறக்கும் ஏ.டி.எம்., மிஷினா?' என்று ஆண்கள் உரிமை சங்கத்தினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.கடந்த 19ம் தேதி உலக ஆண்கள் தினமாக அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் பலர் டில்லியில் "இந்தியன் பேமிலி பவுன்டேஷன் (ஐ.எப்.எப்.,)' சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

பெண்களுக்கு அதிகாரம் கொடுத்து ஆண்களை அதிகாரமற்றவர்களாக மாற்றி விட்டனர்; ஆண்கள் ஏ.டி.எம்., மிஷின்கள் அல்ல' என இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் கோஷம் எழுப்பினர்.டில்லியில் ஆசாத் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஐ.எப்.எப்., நிறுவனர் பந்தி ஜெயின் குறிப் பிடுகையில், "கணவர் மீது பெண்கள் புகார் கொடுத்தால் 498ஏ பிரிவின் கீழ் ஆண்கள் தண்டிக்கப்படுகின்றனர். எந்த விசாரணையும் ஆண்களிடம் நடத்தப்படுவதில்லை. இந்த சட்டம் பெண்களுக்கு ஆதரவானது என்பதை விட மனைவிகளுக்கான சட்டம் என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால், மனைவிகள் புகார் கொடுத்ததும் கணவர் மட்டுமல்லாது, கணவரது தாய், சகோதரிகளும் கைது செய்யப்படுகின்றனர். 498ஏ பிரிவின் கீழ் பதிவு செய்யப்படும் பெரும்பாலான புகார்கள் அடிப்படையில்லாதவை. நானும் எனது மனைவியால் பாதிக்கப்பட்டவன் தான். கணிசமான தொகையை ஜீவனாம்சமாக கொடுத்து வருகிறேன்' என்றார்.

பேரணியில் கலந்து கொண்ட ராகேஷ் ஜெய்ஸ்வால் குறிப்பிடுகையில், "என் மனைவி என்னை விட்டு பிரிந்து சென்று இரண்டு ஆண்டுகள் ஆகிறது. தற்போது, ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக் கிறார். ஓராண்டில் இரண்டரை லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் அவர் ஜீவனாம்சம் கேட்டு விண்ணப்பித்திருப்பது நியாயமில்லாதது' என்றார்.

கமல் கபாடியா(59) என்பவர் குறிப்பிடுகையில், "என் மருமகள் என் மகன் மீதும் மனைவி மற்றும் என் மீதும் 23 குற்றச்சாட்டுகளை சுமத்தி புகார் கொடுத்துள்ளார். இதில் ஒன்று கூட உண்மையில்லை. ஆனால், போலீசார் 498ஏ பிரிவை பயன்படுத்தி எங்களை தொல்லை செய்கின்றனர்' என்றார்.