வயதானவர்கள் கதி அதோகதிதான்

பெற்றோர்களின் கதி வருங்காலத்தில் இப்படித்தான் இருக்கும். இப்போதே முதியோர் இல்லங்கள் பெருமளவில் தொடங்கப்பட்டு விட்டன. வசதியுள்ளோர் அத்தகைய இல்லங்களில் தங்குகின்றனர். ஏழை முதியோர்கள் பாடு?

-------------------------------------
கோவை, செப்.18- 2009 . செய்தி - தினத்தந்தி

மகன்கள் மற்றும் மருமகள்களிடமிருந்து பாதுகாப்பு கேட்டு 73 வயது மூதாட்டி கோவை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோடு இந்திராநகரை சேர்ந்தவர் ராஜம்மாள்(வயது 73). இவரது கணவர் வடிவேலு இறந்து விட்டார். கணவர் இறந்த பிறகு கூலி வேலை செய்து சொந்தமாக வீடு கட்டினார்.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தனது மகன்களான ஞானவேல்(42) மற்றும் செல்லத்துரை (40) ஆகியோருக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால் 2 மகன்களும் தங்களின் வயதான அம்மாவுக்கு வீட்டின் ஒரு ஓரத்தில் சிறு அறையை மட்டும் ஒதுக்கி விட்டு, வீட்டின் முழு பகுதியையும் ஆக்கிரமித்து கொண்டனர்.

அது மட்டுமல்லாமல் தாய்க்கு உணவு வழங்குவதையும் நிறுத்திக்கொண்டனர். செலவுக்கும் பணம் கொடுப்பதில்லை. தள்ளாத வயதிலும், கூலி வேலை, வீட்டு வேலை செய்து ராஜம்மாள் பிழைப்பை நடத்தி வருகிறார். இதனால் இவரை மகன்களும், மருமகள்களும் மிரட்டி வருகின்றனர்.

தனது பெயரில் உள்ள வீட்டை ஆக்கிரமித்ததோடு மட்டுமல்லாமல், தன்னை வெளியேற்ற சதி நடப்பதை அறிந்த, ராஜம்மாள், கோவை 6-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வடவள்ளி வக்கீல் வெண்ணிலா மூலம் குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தார்.

எனவே தனது 2 மகன்கள் மற்றும் மருமகள்களிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்றும், தன்னை அவமரியாதை செய்யக்கூடாது என்றும், தனது பெயரில் உள்ள வீட்டை ஆக்கிரமித்து உள்ள மகன்களை காலிசெய்து கொடுத்தால், அதை வாடகைக்கு கொடுத்து, பிழைப்பு தேடிக்கொள்வேன் என்றும், அல்லது மாத வாடகையாக தலா ரூ.750 வழங்க வேண்டும் என்றும், மேலும் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கில் கூறியிருந்தார்.

பாதுகாப்பு அளிக்க உத்தரவு

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு ஜோதி, வடவள்ளி போலீசாரை அழைத்து, வயதான ராஜம்மாளுக்கு, மகன்கள் மற்றும் மருமகள்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டர்.

ஜீவனாம்சம் ,வீட்டை காலி செய்வது மற்றும் வாடகை குறித்த புகார்கள் மீதான விசாரணைக்காக வழக்கு வருகிற 25-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

1 மறுமொழி:

')) said...

//...கணவர் இறந்த பிறகு கூலி வேலை செய்து சொந்தமாக வீடு கட்டினார்.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தனது மகன்களான ஞானவேல்(42) மற்றும் செல்லத்துரை (40) ஆகியோருக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால் 2 மகன்களும் தங்களின் வயதான அம்மாவுக்கு வீட்டின் ஒரு ஓரத்தில் சிறு அறையை மட்டும் ஒதுக்கி விட்டு, வீட்டின் முழு பகுதியையும் ஆக்கிரமித்து கொண்டனர்.

அது மட்டுமல்லாமல் தாய்க்கு உணவு வழங்குவதையும் நிறுத்திக்கொண்டனர். செலவுக்கும் பணம் கொடுப்பதில்லை. தள்ளாத வயதிலும், கூலி வேலை, வீட்டு வேலை செய்து ராஜம்மாள் பிழைப்பை நடத்தி வருகிறார். இதனால் இவரை மகன்களும், மருமகள்களும் மிரட்டி வருகின்றனர்.//

ஒருவராக இருந்து இரு மகன்களை ஆளாக்கினார். இப்போது இருவரால் அந்த ஒருவரை ஆதரிக்க இயலாதா?

உள்ளம் கனக்கிறது; என்ன சொல்வது என்று தெரியவில்லை.