குடுமப நல வழக்குகளில் வக்கீல் தேவையில்லை

விவாகரத்து கேட்கும் தம்பதிகள் வக்கீல் இல்லாமலே கோர்ட்டில் ஆஜராகி வாதிடலாம். தமிழிலும் மனு தாக்கல் செய்ய முடியும்.

சென்னை, மே.13- 2009. செய்தி - தினத்தந்தி

விவாகரத்து வழக்குகளில் வக்கீல் இல்லாமலே கோர்ட்டில் ஆஜராகி கணவன் அல்லது மனைவி வாதிடலாம்.

நாளொன்றுக்கு சென்னையில் விவாகரத்து கோரும் மனுக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு 30 முதல் 40 மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. இவற்றில் 75 சதவீதம் வழக்குகள் விவாகரத்து கோரும் மனுக்களாகும். அதிகபட்சமாக ஒரே நாளில் 50 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட வரலாறும் உண்டு.

சென்னையில் 3 குடும்பநலக் கோர்ட்டுகள் இயங்குகின்றன. ஒவ்வொரு கோர்ட்டும் 40-க்கு 25 அடி பரப்பளவில் உள்ளன. நாளொன்றுக்கு சுமார் 100 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. நெரிசல் அதிகரிப்பு இந்த வழக்கு விசாரணைக்காக கணவன், மனைவி மட்டும் ஆஜரானாலே 200 பேருக்கு மேல் கோர்ட்டுக்குள் நிற்க வேண்டிய சூழல் உருவாகிவிடுகிறது. ஆனால் இவர்கள் அனைவரும் உறவினர்களோடு வருகின்றனர். எனவே கோர்ட்டுக்குள் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டே இருக்கிறது.

காலையிலேயே கோர்ட்டு விசாரணை தொடங்கி விடுகிறது. எனவே வழக்கு விசாரணைக்காக அனைவரும் வெளியே செல்லாமல் கோர்ட்டுக்கு உள்ளேயே சில மணி நேரம் இருக்க வேண்டிய நிலை உள்ளது. வழக்கு சம்பந்தப்பட்டவர்கள் தவிர வக்கீல்களும் ஆஜராவதால் நெரிசல் மேலும் அதிகரிக்கிறது. கூடுதல் கோர்ட்டு வருமா?

தற்போது 3 குடும்பநல கோர்ட்டுகளிலும் சேர்த்து 7 ஆயிரம் வழக்குக் கோப்புகள் நிலுவையில் உள்ளன. வழக்கின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. ஆனால் அந்தக் கோர்ட்டுகளுக்கு போதிய ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை.

எனவே, சென்னைக்கு கூடுதலாக ஒரு குடும்பநல கோர்ட்டு கேட்டு, குடும்பநல கோர்ட்டில் இருந்து ஐகோர்ட்டு மற்றும் தமிழக அரசுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன. அதைத் தொடர்ந்து பல விவரங்களைக் கேட்டு அரசு பதில் கடிதம் எழுதியது. ஆனால் சாதகமான நிலை ஏற்படவில்லை. மற்ற மாவட்டங்களில் இதுபோன்ற கோரிக்கை வரவில்லை என்பதால் சென்னைக்கு மட்டும் கூடுதல் கோர்ட்டுக்கு அனுமதிக்க முடியுமா? என்ற கேள்வியோடு அரசு ஆலோசனை செய்து வருகிறது.

எனவே, கூடுதல் கோர்ட்டுக்கான அனுமதி வரும்வரை, சிட்டிசிவில் கோர்ட்டு கட்டிடத்தின் தரை தளத்துக்கு குடும்பநலக் கோர்ட்டுகளை மாற்ற வேண்டும் என்றும் கூட்ட நெரிசலை தவிர்க்க இதுதவிர வேறு வழியில்லை என்றும் கோர்ட்டு ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர். அங்கு நீண்ட வராண்டா இருப்பதால் மக்கள் நடமாட்டத்துக்கு வசதியாக இருக்கும்.

வக்கீல் தேவையில்லை:

விவாகரத்து, ஜீவனாம்சம் பெற விரும்புகிறவர்கள் பெரும்பாலும் வக்கீல்களை நாடுவதைத் தவிர்க்கலாம் என்று சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஏனென்றால் குற்ற வழக்குகள் போல் விசாரணை நடத்தும் இடம் குடும்பநல கோர்ட்டு அல்ல.

கணவனோ மனைவியோ, விவாகரத்து கேட்பதற்கு முதலில் வக்கீல்களையே நாடுகின்றனர். இது தேவையற்ற ஒன்று. குடும்பப் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஆலோசனை (கவுன்சிலிங்) பெறும் இடத்தில் கணவன்-மனைவி, உறவினர்கள் தவிர வேறு யாரும் தேவையில்லை.

ஆயிரக் கணக்கில் குடும்பநல கோர்ட்டுகளில் வழக்கு தொடர்வதற்கு திருமண புகைப்படத்துடன் மனு தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் இதற்கு சட்ட விதிகள் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. எப்போது, எங்கு திருமணம் நடந்தது? எதற்காக விவாகரத்து கோரப்படுகிறது? என்பதை மட்டும் எழுதி கையெழுத்து போட்டு கொடுத்தாலே போதும். எந்த சட்டவிதிகளின் கீழ் விவாகரத்து கோரப்படுகிறது என்பதையெல்லாம் கோர்ட்டு அதிகாரிகள் கவனித்துக் கொள்வார்கள்.

ஆனால் இந்த நடைமுறை கடந்த பல ஆண்டுகளாக மாற்றப்பட்டு உள்ளது. இப்போது ஒருவர் தரப்பில் ஆஜராவதற்காக `வக்கலாத்து' தாக்கல் செய்வதற்கே வக்கீல்கள் ஆயிரக் கணக்கில் பணம் பெறுகின்றனர். இந்த ஆரம்பச் செலவுகளை கணவன்-மனைவி தவிர்க்கலாம்.

ஆங்கிலம் அவசியம் இல்லை

மேலும், கோர்ட்டில் மனு தாக்கல் செய்வதற்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. தமிழில் மனு எழுதி கொடுத்தாலே போதும். இந்த நடைமுறைகள் அமலுக்கு வந்தால் கோர்ட்டில் கூட்டம் கூடுவதும் குறையும், வழக்குகளும் துரிதமாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும்.

ஒவ்வொரு குடும்பநல கோர்ட்டிலும் மாதத்துக்கு சராசரியாக 190 வழக்குகள் முடித்து வைக்கப்படுகின்றன. முதன்மை குடும்பநல கோர்ட்டில் கடந்த ஏப்ரல் மாதம் முடித்து வைக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 231. இதுதான் குடும்பநல கோர்ட்டு சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

---------

குடுமப நல தீதிமன்றங்களில் சட்டப்படி வக்கீல்களை அனுமதிக்கக் கூடாது என்று இந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கத்தினர் (Save Indian Family foundation) அரசுக்கும் உயர்நீதிமன்றத்திற்கும் மனு கொடுத்துள்ளனர்.

2 மறுமொழிகள்:

')) said...

ஆகா காதும் பாதிக்கப்படும் மனதும் குளிரும் செய்தி... டவுரி கேசு போட்டு (அதாங்க நம்ம லக்கி நம்பர் 498ஏ) கணவரையும் அப்பாவிக்கூட்டங்களை சிறையில் அடைத்து கிரிமினல்களாலக சித்தரிக்கும் பெண்குல குடும்ப (கும்மாங்)குத்து விளக்குகளிடமிருந்து காப்பதற்கு பொய்கேசு போட்டால் உடனடியாக விவாகரத்து தான்னு சட்டத்த மாத்துனாங்கன்னா நல்ல இருக்கும்... பல வருசம் நாய் மாதிரி அலையவேண்டியதில்லை... (அதுக்கு பதிலாதான் பொய்கேசுல அலையிரோம்ல)

')) said...

"Lawyers, who are supposed to uphold law, have ended being conduit for corruption as if there is no monitoring or initiatives on the part of bodies like bar associations. They could put up notice boards to file complaints or give telephone number for passing on information against corrupt lawyers. There is not a single case of a lawyer being suspended for practice on account of such complaints or any effort made to get such corrupt practices enquired into independently. Although cases about delays and even prevalence of corruption in judiciary have been reported, media has never reported giving specific examples of corruption by lawyers."
2005 Report from the Transparency International India