தற்கொலைகள்

செய்தி - 1


நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள வெப்படையை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 25) டெம்போ டிரைவர். இவரது மனைவி பவித்ரா (19). இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 1- 1/2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை தன்னை தனது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்று விடும்படி பவித்ரா தனது கணவரிடம் கூறியதாக தெரிகிறது. இதற்கு பழனிச்சாமி தனக்கு வேலை உள்ளது என்றும் வேண்டுமானால் உனது தாயாரை வரவழைத்து அவருடன் செல் என கூறியதாகவும் தெரிகிறது. நீங்கள் கொண்டு வந்து விடுங்கள் என கூறி கண வரிடம் பவித்ரா வாய் தகராறில் ஈடுபட்டதாக தெரி கிறது. இந்த நிலையில் பழனிச் சாமி வேலைக்கு சென்று விட்டார்.
பின்னர் மனம் உடைந்த நிலையில் இருந்த பவித்ரா வீட்டில் இருந்த மண் எண்ணையை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீ வைத்து கொண்டு இறந்தார்.

இது குறித்து பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பவித்ராவிற்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆவதால் ஈரோடு உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.


(தற்கொலைக்கான காரணத்தைக் கவனியுங்கள்)


செய்தி - 2


நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மானத்தியை அடுத்த மேட்டுகாட்டு தோட்டத்தை சேர்ந்தவர் செந்தில்ராஜா (வயது 20). இவருக்கும் கொண்டிசெட்டிபட்டியை சேர்ந்த சுப்பிரமணி மகள் நித்யாவிற்கும் கடந்த 1-1/2 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

நித்யாவும், செந்தில் ராஜாவும், செந்தில்ராஜா வீட்டில் கூட்டு குடும்பமாக குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் நித்யா தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.


இந்தநிலையில் கடந்த 24-ந் தேதி செந்தில்ராஜா நித்யா வீட்டிற்கு சென்று நித்யாவை மிரட்டி தன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் அவரிடம் 30 ஆயிரம் பணமும், 30 பவுன் நகை யும் உனது தந்தையிடம் வர தட்சணையாக கொண்டு வரச்சொல். இல்லையெனில் உன் தாய் வீட்டிற்கு அனுப்ப மாட்டேன் என கூறியதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நித்யாவின் தந்தைக்கு செந்தில்ராஜா போன் செய்து உங்களது மகள் மருந்து குடித்து விட்டதாகவும், அவரை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளதாகவும் கூறினார்.

செய்தி அறிந்து அதிர்ச் சியடைந்த நித்யாவின் தந்தை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்த போது தன் மகள் இறந்து கிடந்ததாகவும், காலின் விரல்களில் காயம் இருப்பதாகவும் எனவே மகள் சாவில் மர்மம் இருப்பதாகவும் வேலகவுண்டம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் வேலகவுண்டம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.