மனைவியின் சொல்லுக்கு கீழ்ப்படிந்து நட - உச்ச நீதிமன்றம் அறிவுரை

உச்சநீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் தீபக் வர்மா இருவரும், கடந்த 17 ஆண்டுகளாக இழுத்தடிக்கும் ஒரு ராணுவ லெஃப்டினண்ட் கர்னலுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையேயான விவாகரத்து வழக்கை விசாரிக்கும்போது உதிர்த்துள்ள முத்துக்கள் இவை:

1. மனைவி என்ன கூறினாலும் அதை அப்படியே கேட்கவேண்டும்.
2. மனைவியின் கூற்றை மறுத்தே பேசக்கூடாது
3. மனைவி ”இந்தப் பக்கம் பார்” என்று ஆணையிட்டால் உடனே கீழ்ப்படியவேண்டும்
4. அடுத்த நொடி “அந்தப் பக்கம் பார்” என்றால் உடனே அப்படியே செய்யவேண்டும்.

எவ்வளவுதான் முட்டாள்தனமாக இருந்தாலும் மனைவியின் ஆணைக்குக் கீழ்ப்படிந்து நடக்கவில்லையென்றால் கணவர்கள் கடுமையான பின்விளைவுகளுக்கு ஆளாக நேரிடும். அப்படி மனைவி சொல்லுக்கு அடிமையாக இருந்தால்தான் மணவாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும் என்றார்கள் அந்த நீதியரசர்கள்.

வழக்கின் விவரம்:

விவாகரத்துக்காக கணவன் 10 லட்ச ரூபாய் கொடுத்தால்போதும் என்று ஹைகோர்ட்டில் தீர்மானமனதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார் மனைவி. அவர் தன் கணவன்மேல் பற்பல கிரிமினல் கேசுகளைப் போட்டுத் தாக்கியுள்ளார். கடந்த 17 ஆண்டுகளாக கணவர் அந்தக் கேசுகளை எதிர்த்துப் போராடி அத்துணை கேசுகளிலும் நிரபராதியாக தீர்ப்பளிக்கப்பட்டு வெளிவந்திருக்கிறார். அந்தக் கேசுகளாலேயே ஓட்டாண்டியாகிவிட்ட கணவரை இன்னும் பல லட்சங்கள் கொடு என்று மேல்முறையீடு செய்திருக்கிறார் அந்தப் பெண்குலத் திலகம்.

செய்தி: டைம்ஸ் ஆஃப் இந்தியா.

2 மறுமொழிகள்:

')) said...

//1. மனைவி என்ன கூறினாலும் அதை அப்படியே கேட்கவேண்டும்.
2. மனைவியின் கூற்றை மறுத்தே பேசக்கூடாது
3. மனைவி ”இந்தப் பக்கம் பார்” என்று ஆணையிட்டால் உடனே கீழ்ப்படியவேண்டும்
4. அடுத்த நொடி “அந்தப் பக்கம் பார்” என்றால் உடனே அப்படியே செய்யவேண்டும்.//


அப்படியென்றhல் நீதிபதிகள் வழங்கும் தீர்ப்புகளும் அவர்களின் பொண்டாட்டிகள் வீட்டில் சொல்லிக்கொடுத்து அனுப்புவதைத்தான் கோர்ட்களில் ஒரு எழுத்து மாறhமல் படிக்கிறhர்களோ? இனிமேல் வழக்குகளை நீதிமன்றங்களுக்கு எடுத்துச்செல்லாமல் நீதிபதிகளின் மனைவிகளிடம் எடுத்துச்செல்லலாமே!

மனைவியரிடமிருந்து ஆணை வந்தவுடன் உடையிலும் மாற்றம் ஏற்படலாம்! கலிகாலம். எதுவும் நடக்கலாம்.

')) said...

கொய்யால இன்னும் கொஞ்ச நாள்ள நம்ப பாசாக்கார பயமக்க காலரா நோயக்கண்டு ஒடுனமாதிரி கல்யாணம் நாலே துண்டக்காணும் துனியக்கானும் ஓடிஒளியப்போறாங்கப்பு....

வாழ்க நீதியரசர்கள் (இவங்க மேல யாரம் 498ஏ பொய்கேசு போட்டுத்தொலையமாட்டெங்றாங்கய்யா!) இந்த மாதிரி நீதியரசர்களை என்னுடைய 498ஏ டார்லிங்கிட்ட சொல்லி சொல்லி இது மாதிரி அளையும் என்னை வரதட்சணை கேட்டுக்கொடுமை படுத்துனாங்கன்னு சொல்லி அட்டவணைப்பட்டியலில் சேர்த்துவிடச்சொல்லி கைதிசெய்யச்சொல்லனும்)