கணவன் = இலவச ஏ.டி.எம் மெஷின்

மே 06,2009: தினமலர்

மும்பையில் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரியும், விமானப்பணி பெண்ணும் கடந்த 95ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

ஒன்றரை ஆண்டு காலம் சேர்ந்து வாழ்ந்த இவர்கள், சில காரணங்களால் விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். கடந்த 97ம் ஆண்டு விவாகரத்து கோரி மனு செய்யப்பட்டது. மாதம் இரண்டு லட்ச ரூபாய் சம்பாதிக்கும் கணவரிடமிருந்து மாதம் 20 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்ச தொகையை பெற்று தரும்படி அந்த பெண் கோரினார்.

இதை எதிர்த்து கணவர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. "பேஷன் டிசைன் படிப்பில் டிப்ளமோ வாங்கியுள்ள அந்த பெண்ணுக்கு கை நிறைய சம்பளத்தில், நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன.எனவே, அவருக்கு காலம் முழுக்க ஜீவனாம்சத்தை தர முடியாது' என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிபதிகள், ”தொழில் கல்வி படித்த நீங்கள் உங்கள் சொந்த காலில் நிற்க முயற்சி செய்ய வேண்டும். கணவரிடமிருந்து நீண்ட காலத்துக்கு ஜீவனாம்சத்தை நம்பியிருக்கக்கூடாது”, என அறிவுறுத்தினர்.

மாதம் 20 ஆயிரம் ரூபாயோ அல்லது மொத்தமாக 20 லட்சம் ரூபாயோ கொடுக்கும்படி சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

1 மறுமொழி:

')) said...

இரட்டை நீதிபதிகளின் தீர்ப்பு போல இருக்கிறது!

ஒருவர் ”தொழில் கல்வி படித்த நீங்கள் உங்கள் சொந்த காலில் நிற்க முயற்சி செய்ய வேண்டும். கணவரிடமிருந்து நீண்ட காலத்துக்கு ஜீவனாம்சத்தை நம்பியிருக்கக்கூடாது”,என்று சொல்லியிருக்கிறhர்

மற்றெhருவர் "மாதம் 20 ஆயிரம் ரூபாயோ அல்லது மொத்தமாக 20 லட்சம் ரூபாயோ கொடுக்கும்படி சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவருக்கு......" என்று சொல்லியிருக்கிறhர்.

உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் அதிசயக் கூத்து. கடைசியில் அவதிப்படுவது அப்பாவி ஆண்கள்.