தவறான கருத்தாக்கம்

அனைத்துப் பெண்களுமே மெனமையானவர்கள், வன்முறையே செய்யமாட்டார்கள் என்றும், அனைத்து ஆண்களும் கிரிமினல்கள், வன்முறையாளர்கள் என்னும் நேர்கோட்டு அனுமானத்தில் குடும்பச் சட்டங்கள் இயற்றப்பட்டு, நீதிபதிகளும் இத்தகைய தவாறான கருத்தியலின் அடிப்படையிலேயே தீர்ப்புகளை வழங்குகிறார்கள். இரு பாலரிடையே பாகுபடுத்தி ஒரு தலைச் சார்பு மனப்பான்மையில் இவை செயல்படுவதால் தற்போது குடும்ப வாழ்வு முறையே ஒட்டு மொத்தமாக அழிந்து போகும் நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இந்தச் செய்தியை வாசியுங்கள்:-

”கடனை திருப்பிக் கேட்ட பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொன்ற பெண் கைது மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் சொந்த மகளையும் கொன்ற வெறிச்செயல் அம்பலம்”

கொல்லம், மே.5- 2009. செய்தி: தினத்தந்தி

கடனை திரும்பிக் கேட்ட பெண்ணின் கழுத்தை அறுத்துக்கொலை செய்த பக்கத்துவீட்டைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார்.

மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் அவர் தனது சொந்த மகளையும் கொலை செய்திருந்த சம்பவம் விசாரணையில் அம்பலமானது.

கொல்லம் குழியம் செருமூடு பகுதியைச் சேர்ந்தவர் சிவன் குட்டி. இவருடைய மனைவி பிந்து (வயது35). இவரும் இதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஜா என்பவரின் மகள் அனுபமா (9) என்பவரும் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். அவர்களின் பிணங்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், கொலை செய்யப் பட்ட சிறுமி அனுபமாவின் தாய் ஸ்ரீஜா (33) தான் 2 கொலைகளையும் செய்து உள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:-

பிந்து ஏலச்சீட்டு நடத்தி வந்தார். அவரிடம் ஸ்ரீஜா ரூ.40 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். இந்த கடன் தொகையை பலமுறை திருப்பிக்கேட்டும் ஸ்ரீஜா கொடுக்க வில்லையாம். சம்பவத்தன்று இது தொடர்பாக அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஸ்ரீஜா, பிந்துவின் கழுத்தில் சுரிதார் ஷால் மூலம் இறுக்கினார். அப்போது அவர் பலத்த சத்தம் போடவே, ஸ்ரீஜா அங்கிருந்த கத்தியை எடுத்து பிந்துவை சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். பின்னர் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

இதையடுத்து ஸ்ரீஜா, ரத்தக்கரையை கழுவுவதற்காக அங்கிருந்த குளத்திற்கு சென்றார். இந்த நேரத்தில் அவரது மகள் அனுபமாவும் தனது தாயை பார்த்து அவருடன் சென்றாள். இதற்கிடையில் பிந்து கொலை செய்யப்பட்ட செய்தி பரவி ஊர் மக்கள் பெருந்திரளமாக ஓடி வந்தனர். அவர்களின் பார்வையில் சிக்காமல் இருக்க ஸ்ரீஜா அந்தக்குளத்தின் மதில் சுவரின் பின்னால் ஒளிந்தார். அப்போது அனுபமா தனது தாயிடம் சத்தமாக பேசினார். அவளது சத்தம்கேட்டு பொதுமக்கள் தன்னை பிடித்து விடுவார்கள் என்று பயந்த ஸ்ரீஜா தனது மகளை அந்தக்குளத்தில் தள்ளினார். இதில் அந்தச்சிறுமி நீரில் மூழ்கி இறந்தார். இதையடுத்து ஸ்ரீஜா அதே பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்றார். ஆனால் அவரை பொதுமக்கள் காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீஜாவை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு வேறு காரணம் ஏதும் உள்ளதா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.