கிழவர்களும் கொட்டி அழவேண்டியிருக்கும்!

வயதான மும்பை தம்பதியருக்கு விவாகரத்து கனத்த மனதோடு தீர்ப்பு வழங்கினார் நீதிபதி : மே 03,2009. தினமலர்

மும்பை:மும்பையில் 42 ஆண்டுகள் ஒன்றாக குடும்பம் நடத்திய தம்பதியர் விவாகரத்து பெற்றனர்.பார்சி சமூகத்தவர்கள் தான் நீண்ட நாட்கள் சந்தோஷமாக வாழ்வதாக சமீபத்தில் செய்தி வெளியானது. இந்நிலையில், 42 ஆண்டுகள் ஒன்றாக குடும்பம் நடத்திய பார்சி தம்பதியருக்கு மும்பை ஐகோர்ட், கடந்த வாரம்
விவாகரத்து வழங்கியது. "கணவர் என்னை அடித்து உதைத்து உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்துகிறார்' என மும்பை கோர்ட்டில் 74 வயது பெண், கடந்த 2007ம் ஆண்டு மனு செய்திருந்தார்.

குடும்ப கோர்ட் மூலம் இவர்களுக்கு சமாதானம் சொல்லி வழக்கை தள்ளி போட்டு கொண்டு வந்தனர். "இனி அந்த மனுஷனோடு வாழவே முடியாது” என வயதான பெண், வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசூட்டிடம் உறுதியாக சொல்லி விட்டார்.இந்த வழக்கின் போது உடனிருந்த வயதான தம்பதியரின் மகளிடம், "ஏம்மா நீயாவது பெற்றோரை சமாதானப்படுத்தியிருக்கலாமே?” என நீதிபதி கேட்டார். "நான் பிறந்த வீட்டில் இருந்தவரை முயற்சி செய்தேன். என் கணவர் வீட்டுக்கு சென்ற பிறகு இவர்கள் சண்டையை நிறுத்த முடியவில்லை” என மகள் கூறினார்.

இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்த வழக்கை தள்ளி போடலாமா?' என நீதிபதி, வயதான பெண்ணிடம் கேட்டார். "முடியாது” என இருதரப்பிலும் பதில் வரவே, "கனத்த மனதோடு இந்த விவாகரத்தை வழங்குகிறேன்' என கூறி தீர்ப்பில்
கையெழுத்திட்டார் நீதிபதி சந்திரசூட்.

கணவரிடமிருந்து இரண்டு கோடி ரூபாய்க்கு ஜீவனாம்சம் கேட்டிருந்தார் அந்த பெண். ஆனால், 45 லட்ச ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க நீதிபதி உத்தரவிட்டார்.
---------------

எந்த நிலையிலும், எந்த வயதிலும், யார்மேல் பிழை இருந்தாலும் கணவன் தான் காசு கொடுத்து தன்னை மீட்டுக் கொள்ள வேண்டும். இந்தியாவில் திருமணம் என்பது ஆணைப் பொருத்தவரையில் பாம்புப் புற்றில் கையை விடுவதுபோல்தான்!

2 மறுமொழிகள்:

')) said...

பணத்தை பற்றி சொல்கிறீர்கள். ஆனால் இவ்வளவு ஆண்டுகளாக துன்பத்தில் உழன்று, விடுதலை பெற்றுசெல்லும் அந்த பாட்டியின் மனதை பற்றி ஏன் சொல்லவில்லை ?

')) said...

ஆகா! பாட்டியின் மனதைப் பற்றிக் கவலைப்பட்டு உருகும் செந்தழல் ரவி அவர்களே,

அந்தத் தாத்தா இந்தப் பாட்டியின் கையில் சிக்கி எவ்வளவு பாடு பட்டிருப்பாரோ என்று ஏன் உங்களுக்கு நினைக்கத் தோன்றவில்லை?

அது சரி, அவள் அந்தக் கணவன் வேண்டாமென்றுதான் விவாகரத்து கேட்கிறாரே, கணவன்தான் வேண்டாம், அவருடைய பணம் மட்டும் வேண்டுமா?

உங்களைப் போன்றவர்கள் 498A, HMA, 125, DV Act போன்ற அநியாயமான சட்டங்களில் சிக்கி அனுபவித்தபின் தான் உண்மை நிலையை உணர்ந்து கொள்வீர்கள்!

இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் தன் வயதான பெற்றோர்கள் பொய் வழக்குகளில் கைது ஆகி சிறைக்குச் செல்தைப் பார்த்து நொந்து கண்ணீர் விட்டு அல்லல் படும் பலர் உங்களைப் போல் பெண்ணியம் பேசிக்கொண்டிருந்தவர்கள்தான்!