பாவம் இந்தப் பெண்

நம் பாரம்பரிய மரபுகள் மீதும், நன்னடத்தை, பெற்றோர் மீது மதிப்பு போன்ற சிறப்பியல்புகள் மீதும் தற்காலப் பெண்களை நம்பிக்கை இழக்க வைத்து, மனம் போன போக்கில் வாழ்வதுதான் பெண்கள் முன்னேற்றம் என்று பெண்ணியவாதிகளும் ஊடகங்களும் ஓயாமல் செய்யும் மூளைச் சலவையால் நிகழ்ந்துள்ள அவலங்கள் ஏராளம். பாதிக்கப்பட்ட பெண்கள் அநேகம்.

இந்தச் செய்தியை வாசியுங்கள்:-

பிரேத பரிசோதனையில் பரபரப்பு தகவல்கள். சென்னை விமான பணிப்பெண் கொலையில் மர்மம் நீடிக்கிறது. காதலன்-தோழிகளிடம் விசாரிக்க முடிவு

சென்னை, மே.26- 2009. செய்தி - தினத்தந்தி

சென்னையில் நடந்த விமான பணிப்பெண் கொலை வழக்கில் கொலையாளி யார்? என்பதில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. அவரது காதலன் மற்றும் தோழிகளிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

சென்னை ஜெ.ஜெ.நகர் கோல்டன் ஜார்ஜ் நகரில் வசித்த விமான பணிப்பெண் நிதின்குமாரி பூட்டிய வீட்டில் பிணமாக கிடந்தார். அழுகிய நிலையில் இருந்த அவரது பிணம் மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. நிதின்குமாரி கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் எப்படி கொலை செய்யப்பட்டார்? கொலையாளி யார்? என்பது இன்னும் கண்டுபிடிக்க முடியாத மர்மமாக உள்ளது.

இந்த கொலை வழக்கில் துப்பு துலக்க தனி போலீஸ் படை அமைத்து கமிஷனர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், இணை கமிஷனர் ரவிக்குமார், துணை கமிஷனர் பாண்டியன், உதவி கமிஷனர் ஸ்ரீதர்பாபு மற்றும் இன்ஸ்பெக்டர் சுந்தரம் ஆகியோர் நேரடி மேற்பார்வையில் தனி போலீஸ் படையினர் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள்.

இந்த வழக்கில் விடை தெரியாமல் இருக்கும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

விமான பணிப்பெண் நிதின்குமாரி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதியாக நம்பும் வகையில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. நிதின்குமாரியின் பிணம் தலைகுப்புற கட்டிலுக்கும், சுவருக்கும் இடையே கிடந்துள்ளது. பிணத்தை மறைக்கும் வகையில் 2 சூட்கேஸ்கள் வைக்கப்பட்டுள்ளன.
நிதின்குமாரி தற்கொலை செய்திருந்தால் அவரது பிணம் கட்டிலுக்கும், சுவருக்கும் இடையே கிடக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் பிணத்தை சூட்கேஸ்களை வைத்து மறைக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

எனவே, பிணம் கிடந்த நிலையை வைத்து அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று னிகிக்கமுடிகிறது. அவரை கொலை செய்து பிணத்தை கட்டிலுக்கு அடியில் போட்டு சூட்கேஸ் பெட்டிகளால் கொலையாளி மறைத்துள்ளான். அவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பது பிரேத பரிசோதனையில் தான் தெரிய வரும்.

பிரேத பரிசோதனையை டாக்டர் அன்புசெல்வம் நடத்தியுள்ளார். விமான பணிப் பெண்ணின் உடலில் பெரிய அளவில் காயங்கள் இல்லை. அவரது கழுத்து எழும்பும் முறியவில்லை. எனவே கழுத்தை நெறித்தோ, கொடூரமாக தாக்கியோ அவரை கொன்றதற்கான தடயங்கள் பிரேத பரிசோதனையில் கிடைக்கவில்லை.

நிதின்குமாரி இறந்து 76 மணி நேரம் கழித்துத்தான் பிணம் எடுக்கப்பட்டுள்ளது. பிணம் மிகவும் அழுகிவிட்டதால் மேலோட்டமாக உடலில் இருந்த தடயங்கள் மூலம் அவரது இறப்பு எப்படி நடந்தது என்று டாக்டரால் உறுதி செய்ய முடியவில்லை. நிதின்குமாரியின் உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் உறுதியான முடிவுக்கு வரமுடியும். தலையணையால் முகத்தில் அமுக்கி கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

கொலையாளி யாராக இருக்கலாம் என்று விசாரிக்கும்போது ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளது. நிதின்குமாரியின் தனிப்பட்ட லேப்-டாப் கம்ப்னிட்டர் கருவி, அவரது 2 செல்போன்கள் போன்றவற்றை தீவிரமாக ஆய்வு செய்துள்ளோம். லேப்-டாப்பில் உள்ள படங்களில் நிதின்குமாரி குறிப்பிட்ட ஆண் ஒருவரோடு நெருக்கமாக உள்ள படங்கள் உள்ளன.

அந்த ஆண் யார்? என்று விசாரித்தபோது அவர் நிதின்குமாரியின் காதலர் என்று தெரிய வந்துள்ளது. காதலர் பெயர் ராஜாத்சிங் என்று தெரிய வந்துள்ளது. அவரும் நிதின்குமாரியின் சொந்த ஊரான பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் தான் என்று கண்டறியப்பட்டுள்ளது.

ராஜாத்சிங் மும்பையில் `லிபர்ட்டி ஆயில் மில்' என்ற பெயரில் மிகப்பெரிய ஆயில் நிறுவனம் நடத்தி வருகிறார். அவர் பெரும் பணக்காரர் என்றும் தெரிய வந்துள்ளது. விமானத்தில் செல்லும்போது நிதின்குமாரியோடு பழக்கம் ஏற்பட்டு இருவரும் உயிருக்கு உயிராக காதலித்துள்ளனர்.

ராஜாத்சிங் கடந்த 10 மாதத்துக்கு முன்பு சென்னை வந்து நிதின்குமாரியோடு ஒரு வாரம் தங்கியிருந்து சென்றுள்ளார். ராஜாத்சிங்கை காதலிப்பதற்கு நிதின்குமாரியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மும்பையில் இருக்கும் ராஜாத்சிங்கை சென்னை வரவழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதேபோல, நிதின்குமாரியோடு ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றும் அவரது தோழிகளையும் விசாரிக்க முடிவு செய்துள்ளோம்.

நிதின்குமாரி வசித்த வாடகை வீட்டின் உரிமையாளர் பாஸ்கர் ராவையும் தீவிரமாக விசாரித்துள்ளோம். அவர் தனது வீட்டுக்கு கீழே மருந்து குடோன் வைத்துள்ளார். அங்கு நிறையபேர் பணிபுரிகிறார்கள். அவர்களிடமும் விசாரணை நடந்துள்ளது.
நிதின்குமாரி பயந்த சுபாவம் உள்ளவர். `எனக்கு தனியாக படுக்க பயமாக உள்ளது என்றும், நள்ளிரவில் யாரோ கதவை தட்டுகிறார்கள்' என்றும் வீட்டுக்காரர் பாஸ்கர் ராவிடம் நிதின்குமாரி கூறியுள்ளார்.

பல நாள் இரவில் பாஸ்கர் ராவ் வீட்டிலும், பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஒருவரது வீட்டிலும் நிதின்குமாரி தூங்கியுள்ளார். அந்த பகுதியில் உள்ள சந்தேக நபர்கள் நிறையபேரை பிடித்து விசாரித்துவிட்டோம். நிதின்குமாரி பெரும்பாலும் பகலில் வீட்டில் இருப்பதில்லை. இரவில்தான் வீட்டுக்கு வருவார். வெளியிலும் அதிகமாக நடமாடமாட்டார். பெரும்பாலும் சாப்பாட்டை ஓட்டலிலேயே முடித்துவிடுவாராம். வீட்டில் நூடுல்ஸ் மட்டுமே சமைத்து சாப்பிடுவார் என்று சொல்லப்படுகிறது.

நிதின்குமாரியின் உடல் உறுப்புகளை ஆராய்ந்தபோது அவர் ஆண்களோடு செக்ஸ் உறவு வைத்ததற்கான தடயங்கள் உள்ளன. ஆனால் அவர் பலாத்காரமாக கற்பழிக்கப்பட்டதற்கான தடயங்கள் எதுவும் உடலில் இல்லை.

அவரது கர்ப்ப பையும் ஆராயப்பட்டுள்ளது. விமானத்தில் பயணம் செய்யும் பெரும் பணக்காரர்கள் அவருக்கு அறிமுகமானவர்களாக இருக்கலாம். அந்த வகையில் யாருடனாவது நிதின்குமாரிக்கு தொடர்பு உள்ளதா? என்பது பற்றி அவரது தோழிகளிடம் விசாரிக்க உள்ளோம்.

நிதின்குமாரி புகைப்பிடிக்கும் பழக்கமுடையவர். அவ்வப்போது மதுவும் அருந்துவார் என்று சொல்லப்படுகிறது. தவறான பழக்கவழக்கங்களால் அவருக்கு தவறான நபர்களோடு தொடர்பு இருந்ததா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம். இன்னும் ஓரிரு நாளில் நிதின்குமாரி மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

நிதின்குமாரியின் தந்தை விஜயபிரசாத், தாயார் உஷா, தங்கை நிஸ்தா மற்றும் உறவினர்கள் சிலர் பீகாரிலிருந்து நேற்று சென்னை வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் நிதின்குமாரி, ராஜாத்சிங்கை காதலித்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

நிதின்குமாரியின் பிணத்தை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். நேற்று மாலையில் பிணம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் நிதின்குமாரியின் பிணம் தகனம் செய்யப்பட்டது.

எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நிதின்குமாரியின் பெற்றோர் தங்கியுள்ளனர். நிதின்குமாரியின் தந்தை சொந்த ஊரில் சிறிய கடை நடத்தி வருவதாகவும், பெரிய அளவில் வசதி படைத்தவர் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. நிதின்குமாரி பி.ஏ. பட்டப்படிப்பு படித்துள்ளார். அழகாக இருந்ததால் அவருக்கு ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணிப்பெண் வேலை கிடைத்துள்ளது. அந்த வேலை தற்காலிக வேலை என்றும் தெரிய வந்துள்ளது