பயங்கரவாதிகளிடமிருந்து தப்பிய பிரசாந்த்

Actor Prashanth - Click for bigger image
”சினிமாவில் மீண்டும் சாதிப்பேன்” - வழக்கில் மீண்ட பிரசாந்த் உற்சாகம்
மே 02,2009, தினமலர் - சென்னை:

"வரதட்சணை கொடுமை செய்தோமென்று சட்டத்தை தங்களுக்குச் சாதகமாகவும், தவறாகவும் பயன்படுத்திக்கொள்ள நினைத்த கிரகலட்சுமியின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு, இறுதியில் நீதி வென்றுள்ளது,'' என நடிகர் பிரசாந்த் கூறினார்.

(டோண்டுவின் கவனத்திற்கு: இவர்மேல் எய்யப்பட்ட சட்டப் பிரிவுகள் Sec 498A IPC மற்றும் Sec 3&4 of Dowry Prohibition Act. It is also learnt that Sec 406 IPC - Criminal Breach of trust - had been added)

அவர் கூறியதாவது:

நான்கு ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு, எங்களது திருமணம் செல்லாது என குடும்ப நல கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது நிம்மதி அளிக்கிறது.

திருமணம் ஆன பின், மூன்றே மாதத்தில் கிரகலட்சுமி என்னை விட்டுப் பிரிந்து சென்றார். பிறகு, வேணுபிரசாத் என்பவரை ஏற்கனவே திருமணம் செய்து, நான்கு ஆண்டு குடும்பம் நடத்தியவர் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். கிரகலட்சுமியைப் பொறுத்தவரை வாழ்க்கையை விட பணம் தான் நோக்கமாக இருந்தது.

வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட நிலைமை, யாருக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது. கிரகலட்சுமியின் குடும்பமே சூதாட்டக் கிளப்பில் பங்கு கொள்பவர்கள். வரதட்சணை கொடுமை செய்தோமென்று, சட்டத்தை அவர்கள் தங்களுக்குச் சாதகமாகவும், தவறாகவும் பயன்படுத்திக் கொள்ள முயற்சித்தனர். இறுதியில் நீதி வென்றுவிட்டது. எங்களுக்கு எந்த பழிவாங்கும் எண்ணமும் கிடையாது.

எங்களுக்குப் பிறந்த குழந்தை தற்போது சட்டரீதியாக தாயிடம் இருக்க வேண்டும் என்பதால், எதிர்காலங்களில் மீட்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

குடும்ப வாழ்க்கையில், பிடிக்கவில்லையென்றால் பிரிந்துவிடுவது தான் நல்லது என்பதை தெரிந்துகொண்டேன். கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்த காலங்களில், நான் படப்பிடிப்பில் கவனம் செலுத்த முடியாமல், மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தேன். அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க இருப்பதால், திருமணத்தைப் பற்றி யோசிக்கவில்லை. அது காதல் திருமணமாக இருக்குமா என்று தெரியவில்லை. இனி மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி சாதிப்பேன். இவ்வாறு பிரசாந்த் கூறினார். தந்தை தியாகராஜன் உடனிருந்தார்.

7 மறுமொழிகள்:

')) said...

திருவாளர் பிரசாந்த் வாழ்க்கையில் ஒரு உன்னதமான "ஆகஸ்ட் 15". இந்தியாவில் பல ஆண்களுக்கு அந்த நாள் என்று கிடைக்குமோ?????

ஒரு வருத்தமான செய்தி என்னவென்றhல் உண்மையான குற்றவாளி கிரகலட்சுமியை கோர்ட் எந்தவித தண்டனையும் கொடுக்காமல் வெளியே விட்டு விட்டது. என்ன நீதியோ சட்டமோ???

')) said...

----- விடுபட்டவரே வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு

//"வரதட்சணை கொடுமை செய்தோமென்று சட்டத்தை தங்களுக்குச் சாதகமாகவும், தவறாகவும் பயன்படுத்திக்கொள்ள நினைத்த கிரகலட்சுமியின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு, இறுதியில் நீதி வென்றுள்ளது,'' என நடிகர் பிரசாந்த் கூறினார்.//

ஆம் நீதி வென்றது (அதுவும் நம்நாட்டில்)

')) said...

உங்கள் வலைபதிவின் தலைப்புக்கு (பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்) பொருத்தமான பெண்ணாகத்தான் தெரிகிறார் கிரகலட்சுமி.

சிக்கலிலிருந்து மீண்ட பிரசாந்துக்கு வாழ்த்துக்கள்.

')) said...

பிரசாந்த்துகு வாழ்த்துக்கள். ஆனால் அவரை இந்த அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாக்கிய அந்த கெரக லட்சுமிக்கு ஒரு தண்டனையும் இல்லையா?

')) said...

//ஆனால் அவரை இந்த அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாக்கிய அந்த கெரக லட்சுமிக்கு ஒரு தண்டனையும் இல்லையா?//

இல்லை! கிடையவே கிடையாது!!

இதுதான் இந்த நாட்டு சட்டங்கள் மற்றும் நீதிமன்றங்களின் நிலைமை!

Anonymous said...

கிரக லட்சுமி தன் பெயரை மாற்றிக் கொள்ளலாம்-- வேறு பெயர் கிடைக்கவில்லையா....?

Anonymous said...

Congrts Prasanth, Eventhough Indian Law failed to punish Kiragalakshmi, Natural Justice definitely will give punishment... God Bless You and Your future family. Forget the past...