இதுபோன்ற நாடகங்கள் நிறைய நடக்கும்!

வரதட்சணையை ஒழிக்கிறேன் என்ற பெயரில் மேன்மேலும் சட்டங்களை இயற்றியதன் விளைவு, உரூருக்கு வழக்குகள் பதிவாகி பலவித நாடகங்கள் அரங்கேறுகின்றன. இந்தத் தீக்குளிப்பு நாடகத்தைப் பற்றிப் படியுங்கள்:

கணவர் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் நிலையம் முன்பு பெற்றோருடன் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்.
(”இளம்பெண்” பற்றியதாக இருந்தால்தான் அது நியூஸ்!)

ஆத்தூர், மே.6-2009 : செய்தி - தினத்தந்தி

கணவர் வீட்டார் மீது கொடுத்த வரதட்சணை புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, போலீஸ் நிலையம் முன்பு பெற்றோருடன் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்ணால் நேற்று ஆத்தூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

சேலம் மாவட்டம் காரிப்பட்டி அருகே உள்ள பெரியகவுண்டாபுரம் பகுதியில் வசித்து வருபவர் மாது. தொழிலாளி. இவரது மனைவி பெயரும் மாது. இவர்களுக்கு அலமேலு (வயது 19) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் அலமேலுவுக்கும், அதே பகுதியை சேர்ந்த சுருட்டையன் மகன் குமார் (24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் அது காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் ஆனதில் இருந்தே அலமேலுவிடம், அவரது கணவர் வீட்டார் வரதட்சணையாக நகை, பணம் கேட்டு கொடுமை படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அலமேலு கடந்த ஜனவரி மாதம் ஆத்தூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
(வேறென்ன, 498A தான்!)

இதன்பேரில் அலமேலுவின் மாமனார் சுருட்டையன், மாமியார் சித்தாயி, கணவர் குமார், கணவரின் அண்ணன், அவரது மனைவி ஆகிய 5 பேர் மீதும் அப்போதைய சப்-இன்ஸ்பெக்டர் வளர்மதி வழக்கு பதிவு செய்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக மாமனார் சுருட்டையன், மாமியார் சித்தாயி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அலமேலு, அவரது தாய் மற்றும் தந்தையுடன் நேற்று காலை ஆத்தூர் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது அவர்கள் கையில் ஒரு மண்எண்ணை கேனும் வைத்திருந்தனர். போலீஸ் நிலைய வாசலில் நின்று கொண்ட அவர்கள் நாங்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். ஆனால் மண்எண்ணை கேனை அவர்கள் திறந்ததும் அங்கு நின்றிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நித்யா, கோமதி ஆகியோர் பாய்ந்து சென்று அவர்கள் வைத்திருந்த மண்எண்ணை கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் நிலையம் முன்பு பெற்றோருடன் இளம்பெண் தீக்குளிக்க முயன்ற இந்த சம்பவம் நேற்று ஆத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-----------------

கணவனையும், அவனது பெற்றோரையும் கைது செய்தது போதாதாம், இன்னும் தூக்கில்தான் போட வேண்டியது பாக்கி!