இப்படித்தான் போடறாங்கய்யா 498A கேசு!

வந்தவாசியில் இளம்பெண்ணிடம் ரூ.5 லட்சம் கேட்டு வரதட்சணை கொடுமை கணவன் உள்பட 3 பேர் கைது வந்தவாசி, மே.21- 2007. செய்தி: தினத்தந்தி.

வந்தவாசியில் இளம் பெண்ணிடம் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக கணவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்துபோலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சீர்வரிசை பொருட்கள் திருவண்ணாமலை மாவட் டம் வந்தவாசி கே.எஸ்.கே. நகரைச் சேர்ந்தவர் ஜாபர்கனி (வயது 55). இவரது மகன் கமரூன்இஸ்லாம் (25). இவருக்கும் சென்னையைச் சேர்ந்த ரஷ்யாபேகம் (18) என்பவருக்கும் கடந்த 2003-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது ரஷ்யாபேகத்திற்கு 40 பவுன் நகையும், அவரது கணவருக்கு 8 பவுன் தங்க சங்கிலி, ரூ.5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களையும், ரஷ்யா பேகத்தின் தந்தை வழங்கி னார். திருமணம் முடிந்து 4 மாதங்கள் கணவன்- மனைவி இருவரும் சென்னையில் சந்தோஷமாக வாழ்ந்தனர்.

பின்னர் கணவன்- மனைவி வந்தவாசிக்கு வந்து குடும்பம் நடத்தினர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கமரூன்இஸ்லாம், ரஷ்யா பேகத்திடம் கூடுதல் வரதட் சணை வாங்கி வரும்படி கூறி துன்புறுத்தியதாக கூறப்படு கிறது. ரூ.5 லட்சம் கேட்டு... இந்நிலையில் பாய் தொழில் செய்ய வேண்டும் என்று கூறி கமரூன் இஸ்லாம், ரஷ்யா பேகத்திடம் தாய் வீட்டிற்கு சென்று ரூ.5 லட்சம் வாங்கி வரும்படி கூறி அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. கமரூனுடன் அவரது தந்தை ஜாபர்கனி, தாய் மஸ்தான் பீவி, தம்பி அக்பர் ஆகியோர்அதற்கு உடந்தை யாக இருந்ததாக கூறப்படு கிறது. இதுகுறித்து ரஷ்யாபேகம் வந்தவாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வந்த வாசி துணை போலீஸ் சூப்பி ரண்டு அசோக்குமார், இன்ஸ் பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுளா, ஏட்டு சாந்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதைத் தொடர்ந்து ரஷ்யா பேகத்தை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய தாக கமரூன்இஸ்லாம், ஜாபர் கனி, அக்பர் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய் தனர். பின்னர் அவர்களை வந்தவாசி கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் சங்கரன் உத்தரவிட்டார்.

1 மறுமொழி:

')) said...

மொதல்ல இந்த மாதிரி பெரிய லீஸ்ட்டு போட்டு எல்லார் பேரையும் எழுதி கொடுத்துட்டு அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சி சேந்ந்து வாழ பொண்ணு பிரியப்படுதுன்னு கொய்யால கட்டப்பஞ்சாயத்து கைகூலிகிள கூட்டிட்டு வந்து மிரட்டுறது என்னைக்கு இந்த எழுவு 498ஏ திருத்தி எழுது ப்போறாங்களோ? ஐயோ கொடுமையே இல்லாட்டி வயசானவங்க பெரியவங்க இவங்கள உடனே கைதி செய்யக்கூடாதுன்னாவது சட்டத திருத்தம் கொண்டு வரலாம்...