பலே ரம்யா!

இதுபோல் இனிமேல் தினமும் நடக்கும். ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கும். தவாறான அணுகுமுறையில் இயற்றப்பட்டு, துஷ்பிரயோகம் செய்வதற்கென்றே பிறப்பிக்கப்பட்ட முட்டாள்தனமான 498A, DV Act போன்ற ஆணழிப்புச் சட்டங்கள் திருத்தி யமைக்கப்படவில்லை யெனில், குடும்ப வாழ்க்கை என்பதே கேலிக்கூத்தாகி, அனைத்து ஆண்களும் அவர்களின் பெற்றோரும் கம்பி எண்ணிக் கொண்டிருக்க வேண்டியதுதான்!


இப்போது இந்த செய்தியை வாசியுங்கள்:-


பழநி அருகே உள்ள மானூரைச் சேர்ந்தவர் ரம்யா (26). திருமணமானவர். கணவனை விட்டு பிரிந்து பெற்றோருடன் இருந்த இவர் இதே ஊரை சேர்ந்த செந்தில்குமாரை காதலித்துள்ளார். தன்னை திருமணம் செய்ய செந்தில் மறுப்பதாக அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். கைதான செந்தில் ஜாமீனில் உள்ளார்.

ஏப்., 29ல் தன்னை காதலனுடன் சேர்த்து வைக்கக் கோரி ரம்யா மானூரில் ரோட்டில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். டி.எஸ்.பி., விஜய ரகுநாதனிடமும் முறையிட்டுள்ளார். டி.எஸ்.பி., கூறுகையில், "இந்து திருமண சட்டப்படி இப்பிரச்னை கையாளப்பட வேண்டியுள்ளது. முதல் கணவரிடம் இருந்து சட்டப்படி ரம்யா விவாகரத்து பெறவில்லை. எனவே, செந்தில்குமாருடன் நாங்கள் திருமணம் செய்து வைக்க இயலாது. அவருக்கு மனநல ஆலோசனை தர முடிவு செய்துள்ளோம். இரு தரப்பு வக்கீல்கள் முன்னிலையில் இப்பிரச்னை குறித்து இன்று பேச உள்ளோம்,' என்றார்.


சரி, பிறகு ஏன் அந்த செந்திலைக் கைது செய்தனர்?


இப்போது புரிகிறதா, இத்தகைய சட்டங்கள், சமுதாயம், காவல் துறை மற்றும் நீதிமன்றங்களின் அணுகுமுறைகள் இவற்றில் உள்ள குறைபாடுகள்!


இதுபோன்ற கொடுங்கோன்மை சட்டங்கள் டோண்டு, செல்வன் போன்றவர்களைத் தீண்டும் காலம் வரும்போது அவர்கள் உணர்வார்கள்!


செய்தி: தினமலர் மே 01,2009

6 மறுமொழிகள்:

')) said...

தகவல் முழுமையானதாக இருக்க வேண்டும். செந்திலை கைது செய்தது எந்த பிரிவின் கீழ்? 498A, DV Act?

498A ஒரு எக்ஸ்ட்ரீமுக்கு சென்றால் நீங்கள் எதிர் எக்ஸ்ட்ரீமுக்கு செல்கிறீர்கள். நடுவில் சம்பந்தப்பட்ட பெண் பார்ப்பனத்தியாக இருந்தால் மட்டும் அதையெல்லாம் போட்டு முழக்கினீர்கள். இப்போது அது குறைந்துள்ளது. மகிழ்ச்சி.

கேஸ் பை கேஸ் பார்த்து பதிவிட்டால் உங்கள் நோக்கம் நிறைவேறும். அவசரப்படாது நிதானமாக எல்லா தகவல்களையும் பெற முயற்சி செய்யவும்.

இல்லாவிட்டால் வெறுமனே தமாஷுக்குத்தான் நீங்கள் எழுதியவை பயன்படும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

')) said...

டோண்டு அவர்களுக்கு நன்றி.

உங்கள் கணிப்பில் எங்கள் நோக்கம் என்னவென்று கருதுகிறீர்கள்?

')) said...

உங்கள் நோக்கம் உயர்ந்தது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. 498ஏ பிரிவு துஷ்பிரயோகம் செய்யப்படுவதை நானும் கவலையுடனேயே நோக்குகிறேன். ஆக இந்த விஷயத்தில் நம் இருவருக்கும் ஒரே நோக்கம்தான்.

அதை எடுத்து கூறும் முறையில் நீங்கள் வெளிப்படையாக உங்கள் பயாசை காட்டி, சில பதிவுகள் எழுதும்போது சம்பந்தப்பட்ட வழக்குகளில் பூரண தகவல் இன்றி எழுதுவதாலும், ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு எதிரான உங்கள் மனோபாவம் பலமுறை மிகவும் மேலெழும்பி வருவதாலும் பதிவின் நோக்கங்கள் திசை மாறி போவதைத்தான் அவ்வப்போது சுட்டிக் காட்டி வருகிறேன். இப்பதிவில் கூட டோண்டு பெயர் வந்ததால்தான் டோண்டுவும் வந்தான். வந்த இடத்தில் நான் உங்கள் பதிவின் முழுக்க படித்தே பின்னூட்டமிட்டேன்.

நீங்கள் உருப்படியான பதிவுகள் எழுதுகிறீர்கள் என்னும் நம்பிக்கை இருப்பதால்தான் நான் அவ்வப்போது நீங்கள் இன்னும் மேன்மை தரும் முறையில் நடந்து கொள்ள ஆலோசனை தருகிறேன்.

498ஏ செக்‌ஷனின் துர் உபயோகம் சீரியசான விஷயம். அது சம்பந்தமான பதிவுகள் திசை திரும்பாமல் பார்த்து கொள்ளல் நலம்.

இப்போது கூறுங்கள். செந்தில் எந்தப் பைரிவின் கீழ் கைது செய்யப்பாட்டர் என.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

// தன்னை திருமணம் செய்ய செந்தில் மறுப்பதாக அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.//

காதலித்து விட்டு பின்னர் திருமணம் செய்ய மறுப்பது சட்டப்படி குற்றமல்ல.

//கேஸ் பை கேஸ் பார்த்து பதிவிட்டால் உங்கள் நோக்கம் நிறைவேறும்//
மொத்தம் 70000 வழக்குகள் வருடத்திற்கு பதிவாகின்றன . 98% நிரபராதி என்று தீர்பளிக்கப்படுகிறது . அனால் ஐந்து வருடங்களுக்கு பிறகு !!!

//இல்லாவிட்டால் வெறுமனே தமாஷுக்குத்தான் நீங்கள் எழுதியவை பயன்படும்.//
தான் பாதிக்க படாத வரையில் எல்லாமே தமாஷு தான்

எனக்கு பெண் தான் உள்ளாள். எனவே எனக்கு பதிப்பு இல்லை என்று நினைத்த பலர் காவல் நிலையத்திற்கு இழுக்கப்பட்ட பிறகு தான் உண்மை நிலையை உணர்கிறார்கள்.ஒரு உயர் நீதி மன்ற நீதிபதி உள்பட !

Anonymous said...

டோண்டு அவர்களே

// செந்திலை கைது செய்தது எந்த பிரிவின் கீழ்? 498A, DV Act?//

//செந்தில் எந்தப் பைரிவின் கீழ் கைது செய்யப்பாட்டர் என.//

தினமலர் செய்தியில் எந்த பிரிவு என்று குறிபிடவில்லை. ஆனால் 498a பிரிவில் தான் போலீசார் குடும்ப வழக்குகளில் கைது செய்கிறார்கள்

')) said...

கைது செய்யத்தான் கைவசம் “ரேப்” இருக்கிறதே!

இந்த ரேப் கேசுகள் எவ்வாறு கையாளப் படுகின்றன என்னும் அவலத்தைப் பற்றி தனியாக எழுத வேண்டும்.

இதுபோன்ற ஒருதலைப் பட்சமான சட்டங்களையும், ஐயோ பாவம் பெண் என்று உருகி ஓடும் patriachal பழைய பஞ்சாங்கங்களும் இணைந்து ஆணினத்திற்கு இழைக்கும் கொடுமைகள் கணக்கிலடங்கா.