கள்ளத் தொடர்பு குற்றத்திற்கு ஆண் - பெண் சமமான தண்டனை வேண்டும்

சென்னை, ஜுலை.31- 2009. செய்தி - தினத்தந்தி

ஆண் - பெண் இருவருக்கும் கள்ளத் தொடர்புக்கு சமமான தண்டனை வழங்க வேண்டும் என்று ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்க தலைவர் டி.அருள்துமிலன், பொதுச் செயலாளர் எஸ்.மதுசூதனன் ஆகியோர் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கள்ளத் தொடர்பும் அதனைத் தொடர்ந்த கொலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது தாங்கள் அறிந்ததே. பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான கடந்த ஆட்சியில் கள்ளத் தொடர்பு தொடர்பான குற்றங்களின் தண்டனையை அதிகரிக்கும் நோக்கில் இந்திய தண்டனை சட்டம் 497-ல் சில திருத்தங்களை கொண்டு வர விரும்பியது.

அதற்கான சுற்றறிக்கைகள் அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பப்பட்டன. ஆனால், இந்திய கலாச்சாரத்தை வேரோடு புதைக்க எண்ணுகின்ற சில பெண்கள் அமைப்புகளின் எதிர்பால் இந்த சட்டத் திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை.

மேலும், இந்திய தண்டனை சட்டம் 497-ல் தவறு செய்யும் பெண்களை பாதிக்கப்பட்டவர்களாக பாவித்து விடுவித்துவிடும் மென்மையான அணுகுமுறையால் இந்த சட்டத்தை மீறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதனால், ஏற்படும் கொலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும், இந்த கள்ளத் தொடர்பால் கணவனை கொல்வது சர்வ சாதாரண கதையாகி பல குடும்பங்கள் சீரழிந்து இந்திய கலாச்சாரத்திற்கே அச்சுறுத்தலாக மாறி வருவதை தங்களின் கனிவான பார்வைக்கு கொண்டு வருகிறேன்.

இந்த நிலையில், தான் பெற்ற 24 வயது மகனை, அவனை பெற்ற தாயே துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த கொடுமை நம் தமிழ் சங்கம் வளர்த்த மதுரையில் நடந்துள்ளது.

இந்த கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்திற்கு உரியது. எனவே, முதல்-அமைச்சர் கருணாநிதி, போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு மத்திய அரசை வற்புறுத்தி இந்த பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே இந்திய தண்டனை சட்டம் 497-ல் திருத்தம் செய்து கள்ளத் தொடர்பில் ஈடுபடும் ஆண்-பெண் இருவரும் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தும்படி சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

4 மறுமொழிகள்:

')) said...

இதொ அடுத்த கள்ளக் காதல் கொலை தற்பொழுது நிறுத்தப்பட்டுவிட்டது...

கள்ளக்காதலனிடமிருந்து மனைவி, குழந்தைகளை மீட்டுத்தாருங்கள்: கணவன் போலீசில் பரபரப்பு புகார்


தினமலர் நாளிதழில் வெளியான செய்தி

http://www.dinamalar.com/districtnews_main.asp?ncat=Chennai#208550

')) said...

இதொ குடும்பத்தகறாரில் சிறைக்கு சென்றதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட தொழிலாளியை பற்றி செய்தி தினத்தந்தியில்....

http://www.dailythanthi.com/article.asp?NewsID=504905&disdate=8/3/2009&advt=2

')) said...

பொன்மாலை என்ற இணைய இதழில் வெளியான "கள்ளக்காதல்" பற்றிய கட்டுரையை ஒய்விருந்தால் படித்துப்பார்கவும்...

http://www.ponmaalai.com/2009/08/blog-post_8205.html

Anonymous said...

http://tamil498a.blogspot.com/

பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்
இ.பி.கோ 498A என்னும் வரதட்சிணைக் கொடுமைச் சட்டத்தால் பாதிக்கப்படும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் பற்றிய விவரங்கள், பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள், அறிவுரைகள்