ஓடிப்போன மனைவியின் கைச்சிலவுக்காக கிட்னியை விற்கும் கணவன்!

சினிமாவைப் பார்த்து லவ் பண்ணி, கைக்காசெல்லாம் காதலிக்காக சிலவு செய்து ஒருபாடாக அவளைத் திருமணம் செய்துகொண்டு விடுகிறீர்கள். "ஆகா, என் மனத்தைக் கவர்ந்த காரிகையையே மணம் புரிந்து கொண்டேன், எனக்கு நிகர் இப்பாரில் யார் உளர்" என்று இறுமாந்து நிற்கிறீர்கள். ஆனால் அந்த மகிழ்ச்சியின் காலக்கெடு ஓரிரு மாதங்களே. காதல் மனைவியின் உள்ளக் கிடக்கை எது என்பது ஆண்களால் அறிய முடியாத புதிர். தன்னிஷ்டப்படி நடக்க கணவன் இடைஞ்சலாக இருந்தான் என்பதனால் சல்லி பெறாத விஷயத்திற்காக கோபித்துக் கொண்டு பிறந்த வீட்டிற்கு சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிடுகிறாள் அந்த வீராங்கனை. அங்கு சென்றவுடன் அவள் அறிவுரை கேட்பது சகுனி மாமாக்களிடமும் பெண்ணிய வாதம் பேசும் கிழக் கோட்டான்களிடமும்தான்.

"திரும்பியும் அவன் கிட்ட போய் நிக்க மாட்டேன்! அவனைப் பார்த்து விடணும் ஒரு கை!" என்பாள். உடனே அவர்கள், "சட்டங்கள் எல்லாமே உன் பக்கம்தான். எனக்குத் தெரிந்த வக்கீல் ஒருவர் இருக்கிறார். போலீசிடமும் மேலும் நீதி மன்றத்திலும் மிகுந்த செல்வாக்குள்ளவர். அவர் மூலம் ஒரு டஜன் கேசுகளை ஒண்ணு மேல ஒண்ணா போட்டு, ஜீவனாம்சம் (alimony), பராமரிப்புத்துகை (maintenance) என்று பல வகையில் தீட்டிப்பிடலாம் தீட்டி. அவனை ஓட்டாண்டியாக்கி நடுத்தெருவில் நிக்க வைத்து விடலாம். கவலைப் படாதே!" என்று கூறும் அறிவுரைகளினால் ஞானம் பெற்று, "ஆகா! பார்க்கிறேன் ஒரு கை!" என்று அடுக்கடுக்காக கேசுகளைப் போடத் தொடங்குகிறாள் அந்த புரட்சிப் பெண் திலகம்.

இப்படித்தான் முடிகின்றன 90%-க்கு மேற்பட்ட திருமணங்களும் (காதல் ரூட்டில் வந்தவை உட்பட).

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இந்தியாவின் திருமணம் சார்ந்த சட்டங்களின் அடிப்படையில் தன்னிச்சைப்படி கணவனை விட்டு ஓடிப்போன மனைவியின் லிப்ஸ்டிக் சிலவுக்கும், செல்ஃபோன் சிலவுக்கும், அவள் தன்னிஷ்டப்படி உல்லாச வாழ்வு வாழ்வதற்கான சிலவுக்கும் சேர்த்து அந்தக் கண்வன் மாதாமாதம் பணம் கொடுத்து அழவேண்டும். அது அவன் கடமை.

ஆனால் அவனுக்கு அந்த மனைவியிடம் ஏதேனும் உரிமை இருக்கிறதா? ஒன்றும் கிடையாது. "சரீய்யா, அதான் மாசாமாசம் பணம் கொடுக்கிறேனே, இன்னமும் சட்டப்படி அவள் மனைவிதானே, ஒரு இரவு படுக்கை சுகத்தையாவது நான் கொடுக்கிற காசுக்கு கூலியா கொடுக்கக்கூடாதா" என்று கேட்டால், உடனே உங்களை "மனைவியை ரேப் பண்ண முயற்சித்தான்" என்று சொல்லி உள்ளே போட்டுவிடுவார்கள். நான் சும்மா சொல்லவில்லை. சட்டங்களும் அவற்றின் அடிப்படையில் அமைந்த தீர்ப்புக்களும் இப்படித்தான் சொல்கின்றன.

திருமணம் சம்பந்தப்பட்ட சட்டங்களில் இதுபோன்று ஓடிப்போன மனைவிகள் பல சட்டப் பிரிவுகளின் அடிப்படையில் மையிண்டெனன்ஸ் கேட்கலாம். அதாவது:

  1. குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் (Protection of Women against Domestic Violence Act) - இது போன்ற முட்டாள்தனமான சட்டம் உலகத்திலேயே கிடையாது. இதுதான் "பெண்குலம் வன்முறையே செய்யாது. ஆண்கள் மட்டும்தான் வன்முறையில் ஈடுபடுவார்கள்" என்று இருபாலரிடையே பிளவு செய்து வரையறுக்கிறது. இந்த சட்டத்தின்படி வீட்டை விட்டு ஓடிப்போன மனைவி புகார் கொடுத்தால் அவளுடைய கணவனும் அவனுடைய பெற்றோரும் தங்களுக்குச் சொந்தமான வீட்டைவிட்டே ஓடிவிடவேண்டும். கேசு போட்ட ராணியம்மா தன் மனத்துக்குகந்தவர்களுடன் அங்கு குடியேறி "உல்லாசமாக" வாழ்ந்து கொண்டிருக்கலாம்!

  2. Sec 125 of CrPC (இது மிகக் கொடுமை. பணம் கொடுக்காவிட்டால் உடனே கைதுதான்)

  3. Sec 24 of Hindu Marriage Act (உங்கள்மேல் கேசு போட அவளுக்கு நீங்களே பணம் கொடுக்கவேண்டும்!)

  4. Under Hindu Adoptions and Maintenance Act

இப்படிப் போட்டுப் பிரட்டிப் பிரட்டி செத்த பாம்பு அடிப்பதுபோல் அடித்து விடுவார்கள். "ஐயா எசமான்களே, இப்போ பொருளாதார நிலை சரியில்லை. மூணு மாசமா எனக்கு சம்பளமே வரல்ல. அப்படி இனிமே வந்தாலும் பாதி சம்பளம்தான் கிடைக்கும் போல இருக்கு. மெயிண்டனென்சை ரத்து செய்ங்க, அல்லது குறைச்சுப் போடுங்க" என்று அந்தப் புருஷன் கதறினால்கூட நீதிபதிகள் செவி சாய்க்கமட்டார்கள். "எப்படியாவது அந்தப் பெண் கேட்கிற பணத்தைக் கொடுத்துப்போடு. இல்லாவிட்டால் ஜெயிலுக்குப் போ" என்று ஆணையிட்டு விடுவார்கள். பிறகென்ன, அந்த முட்டாள் கணவன் தன் கிட்னியைத்தான் விற்க வேண்டும்!

ஆகையினால் மகா ஜனங்களே, நீங்களோ உங்கள் பையன்களோ திருமணத்தைப் பற்றி யோசிப்பதற்கு முன்னால் இந்தச் சட்டங்களைப் பற்றிய அறிவைப் பெறுங்கள். சீக்கிறமே எங்கள் அமைப்பு (Save Indian Family Foundation) ஒரு சட்ட விழிப்புணர்வுப் பட்டறையை நடத்தவிருக்கிறது. அது பற்றிய அறிவிப்பு விரைவிலேயே இங்கு வெளிவரும்.

இனி மேலே இடது பக்கத்தில் இருக்கும் செய்தியைப் படித்துவிட்டு இரண்டு சொட்டு கண்ணீர் விடுங்கள். வேறு என்ன செய்ய முடியும் நம்மால்!

3 மறுமொழிகள்:

')) said...

இந்த புன்னியவான்கள் கிட்னியை வித்து காசுகொடுக்கசொன்னாலூம் சொல்வார்கள்...

')) said...

பணத்திற்காக ரத்தத்தையும் உறிஞ்சிக் குடிக்கத் தயங்காத காட்டேரிகளும் அதற்கு துணை போகும் சைத்தான்களும் உள்ள கேடுகெட்ட மயானம்.

Anonymous said...

so much affected by a woman.
Why you are not analysing the root causes for this, than portraiting women as villis.
"Why blood....Same blood?"