பள்ளி, கல்லூரி மாணவிகள் உட்பட 5 பெண்கள் மாயம் - செய்தி: தினமலர் 13-10-2008.
சென்னை : வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி, கல்லூரி மாணவிகள் உட்பட ஐந்து பெண்கள் மாயமாகினர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
1. இளம்பெண் மாயம்:
கிழக்கு தாம்பரம், சுத்தானந்த பாரதி தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவர் திரைப் பட நிறுவனம் ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் உறவினர் பெண்ணான ரம்யா (21) என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது.
இந்நிலையில் கடந்த 7ம் தேதி ரம்யா கடிதம் எழுதி வைத்துவிட்டு திடீரென மாயமானார். அதில், "பெற்றோர் நிச்சயித்த திருமணம் எனக்குப் பிடிக்கவில்லை" என்று எழுதி இருந்தது. இது குறித்து சேலையூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப் பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. கல்லூரி மாணவி மாயம்:
குரோம்பேட்டை, சி.எல்.சி., லேன் எட்டாவது தெருவை சேர்ந்த அப்துல்காதர் என்பவரின் மகள் சைனஸ்பானு (18). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரி சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகள் உள்ளிட்ட பல இடங் களில் தேடியும் சைனஸ்பானு கிடைக் காததால், மகளைக் காணவில்லை என அவரின் தாய் அசினாபானு போலீசில் புகார் செய்தார். இது குறித்து சிட்லபாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
3. பள்ளி மாணவிகள் மாயம்:
பள்ளிக் கரணை, ஆதிசாரணி நகரை சேர்ந்தவர்கள் ராகா (16) வனிதா (15). (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.) இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் முறையே பிளஸ் 1 மற்றும் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் பள்ளி சென்ற இவர்கள் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும், இருவரும் கிடைக்காததால் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. தாய் வீட்டிற்கு சென்ற பெண் மாயம்:
கோவிலம்பாக்கம், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் மோகன். கட்டட வேலை பார்த்து வரும் இவரின் மனைவி குமாரி (31). இவர்களுக்கு ராஜா (10), கார்த்தி (8) என இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் குமாரி ஆதம்பாக்கம், பிருந்தாவன் நகரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றவர், மாயமானார். உறவினர் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் குமாரி கிடைக்காததால், மனைவியை காணவில்லை என மோகன் போலீசில் புகார் செய்தார். இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-----------------
இதற்கெல்லாம் காரணம் ஆண்கள் செய்யும் வரதட்சிணைக் கொடுமையா? ஆண்களையும் அவர்களைப் பெற்றவர்களையும் கைது செய்து கொடுமைப் படுத்த ஏராளமான கொடுங்கோல் சட்டங்களை இயற்றிவிட்டு, அவற்றை இன்னும் கடுமையாக்கத் துடிக்கும் ரேணுகா சவுத்திரி, கிரிஜா வியாஸ் மற்றும் NCW, AIDWA போன்ற அமைப்புகள், பெண்களின் உண்மையான பிரச்னைகளைத் தீர்க்கிறார்களா?
சிந்திப்பீர்!
பெண்கள் மாயம்!
குறிச்சொற்கள் 498a, divorce, harassment, husbands, law, ஆண்பாவம், கொடுமை, சமூகம், பொய் வழக்கு
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
உங்கள் கருத்தைத் தெரிவிக்க