ஏழு வருட பந்தம்!

நம் நாட்டு சட்டப்படி ஒரு பெண் மணமான ஏழு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டால் உடனே ஆர்.டி.ஓ விசாரணை செய்யப்படவேண்டும், இயற்கை மரணமானாலும்கூட. ஆனால் அந்தப் பெண்ணின் பெற்றோரோ அல்லது யாரேனும் உறவினரோ, அது இயற்கை மரணம் அல்ல, கொலை என்றோ, அல்லது தற்கொலை என்றோ புகாரளித்தால் உடனே கணவனும் அவனுடைய பெற்றோரும் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு கைது செய்யப்படுவார்கள்.

ஆகையால் கணவன்மார்களே, உங்கள் மனைவிமாரை ஏழு வருடங்கள் ஒன்றும் ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஆனால் பெண்கள் இப்போதெல்லாம் அவ்வளவுநாள் இடைவெளி விடுவதில்லை! மணமான ஓரிரு மாதங்களிலேயே வரதட்சணைக் கொடுமை, குடும்ப வன்முறை இப்படி ஏதேனும் வழக்கு போட்டுவிடுகிறார்கள்.

இப்போது கீழ்க்கண்ட செய்திகளை வாசியுங்கள்:-

சோழவரம் அருகே பெண் தீயில் கருகி சாவுகணவர் கொலை செய்ததாக தந்தை புகார் : பொன்னேரி, செப்.18-

சோழவரம் அருகே பெண் தீயில் கருகி செத்தார். அவரது கணவர் கொலை செய்ததாக பெண்ணின் தந்தை போலீசில் புகார் செய்தார்.

சோழவரம் அருகே உ ள்ள மாபுஸ்கான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் நாகபூஷணம். கட்டிட தொழிலாளி. கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் வீங்குன்றம் அருகேஉள்ள பழுதுகுளம் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதியின் மகள் தேவியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சூர்யா (வயது 5) என்ற மகனும், ஜீவிதா என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தேவி உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில் அலறினார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று தீயை அணைத்தனர். பின்னர் தேவியின் உயிரை காப்பாற்ற சென்னை கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தேவிக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி பரிதாபமாக செத்தார்.
இந்த நிலையில் தேவியின் தந்தை பார்த்தசாரதி சோழவரம் போலீசில் புகார் அளித்தார். அதில் தன்னுடைய மகளை வரதட்சணை கேட்டு நாகபூஷணமும் அவரது சகோதரர் முனுசாமியும் அடித்து துன்புறுத்தி தீயிட்டு கொளுத்தி கொன்று விட்டதாக புகார் மனுவில் கூறியுள்ளார்.
நாகபூஷணம், தேவியின் திருமணம் முடிந்து 5 வருடமே ஆன நிலையில் இந்த வழக்கை பொன்னேரி ஆர்.டி.ஓ. சண்முகசுந்தரம் விசாரணை நடத்தி வருகிறார்.

--------------------------------------------------

புது மணப்பெண் தற்கொலை : செப்டம்பர் 18,2008,00:00 IST

தூத்துக்குடி : தூத்துக்குடி டி.சவேரியார்புரம் எம்.ஜி.ஆர்., நகர் மாரிமுத்து மகள் முத்துலட்சுமி(18). அவருக்கும், பாலமுருகனுக்கும் செப்.,11ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில் திருமணமான ஆறாவது நாளில் (நேற்று முன்தினம்) வீட்டில் விஷம் குடித்த முத்துலட்சுமி, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் இறந்தார். இந்த தற்கொலை காதல் தோல்வியால் நடந்தது என போலீசார் தொரிவித்தனர்.

----------------------------

பல்லாவரம்: மருமகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.

பம்மல் நாகல்கேணி, அஜிஸ் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். டெய்லர். இவரது மனைவி அமுதா (37). இவர்களுக்கு மகாலட்சுமி (19), பவித்ரா (6) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். அமுதாவின் மாமியார் சுசீலா(67) அந்த பகுதியில், ஏல சீட்டு நடத்தி வருகிறார்.

மாமியார், மருமகள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். நேற்று முன்தினம் குடும்ப செலவிற்காக அமுதா, மாமியார் சுசீலாவிடம் பணம் கேட்டுள்ளார். இதில், ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த அமுதா உடலில் மண்ணெண் ணெய் ஊற்றி, தீ வைத்துக் கொண்டார். பலத்த தீக்காயமடைந்த அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். மருமகளை தற்கொலைக்குத் தூண்டியதாக சங்கர்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சுசீலாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

3 மறுமொழிகள்:

Anonymous said...

Future india will be with more brothel homes than married families!
Pros are best relationship than wife. No false cases, no maintanenace, no worries, no problem to family members. She will be loyal for the money. Whereas wife extort all the money and put the man and his family members in jail.

')) said...

வெறும் விபத்தாக இருந்தாலும் கூட, பெண்ணை பெற்றவர்கள் காழ்ப்புணர்ச்சியால் புகார் செய்தால், அதை பொய் என்று நிறூபணம் செய்வதற்குள் குற்றம்சாட்டப்பட்டவருடைய வாழ்க்கையையே அழித்துவிடுவார்கள் போலிருக்கிறதே !!!

')) said...

நன்றி, ரவி.

இதுபோன்ற கடுமையான ஒருதலைச் சார்புடைய சட்டங்களைப் போட்டுவிட்டால் ஏதோ பெண்குலத்திற்கே பெருமை செய்துள்ளதாக சில அரசியல்வாதிகள் தம்பட்டம் அடித்துக்கொண்டு ஓட்டு வாங்குகிறார்கள். இதற்கு முக்கிய தூண்டுகோல்களாக இருப்பவர்கள் AIDWA போன்ற அமைப்புகள். இவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்கள் ரேணுகா சவுத்திரி, கிரிஜா வியாஸ் போன்ற அரசியல்வாதிகள். அதுவும் ரேணுகா சவுத்திரியின் விஷம் கக்கும் ஆண்கள் வெறுப்பு அறிக்கைகளைப் படித்தீர்களானால் அவர்களுடைய மனப்பாங்கு தெரியவரும். அவற்றைத் தொகுத்து தரவுகளுடன் ஒரு பதிவு இடுகிறேன்.

உங்களைப் போன்ற பிரபலமான வலைப் பதிவர்கள் இந்தக் கொடுமையான சட்டங்களின் கையில் சிக்கி சீரழியும் வயதான பெற்றோர், கணவனின் சகோதரிகள், மற்றும் கணவன்மார்கள் ஆகியோரின் வாழ்க்கை பற்றி எழுத வேண்டும் என்று கோருகிறேன்.

இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சியில்கூட இந்த சட்டத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவரைப் பற்றி பேட்டி எடுத்தார்கள்.

நன்றி.