திருமணம் ஆன 9-வது நாளில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த புதுப்பெண்

திருமணம் ஆன 9-வது நாளில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டு லாரியை ஏற்றி கொடூரமாகக் கணவரை கொலை செய்த புதுப்பெண் காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

பொன்னேரி அருகே உள்ள பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவர் வாழை இலை வியாபாரம் செய்து வருகிறார். இவரது இளைய மகன் கணேஷ் (வயது30). கணேசுக்கும் வெள்ளிவாயல் சாவடியை சேர்ந்த குப்புசாமி என்பவரது மகள் கோமதி (29)க்கும் கடந்த மாதம் 15-ந்தேதி திருமணம் நடந்தது.

திருமணம் ஆன 9-வது நாளில் கிருஷ்ணாபுரம் பகுதியில் சைக்கிளில் சென்ற கணேஷ் மீது பின்னால் வந்த லாரி மோதி அதே இடத்தில் பரிதாபமாக செத்தார். இந்த லாரி பொன்னேரியை சேர்ந்த நாகபூஷணம் என்பவருக்கு சொந்தமானதாகும். அவர் லாரியை காணவில்லை என்று போலீசில் புகார் செய்துள்ளார்.

இந்த நிலையில் இந்த விபத்து குறித்து விசாரித்த போலீசாருக்கு ஒரு `மர்ம' போன் வந்தது. அதில் பேசியவர் `கோமதியின் நடவடிக்கை சரி இல்லை, கணேஷ் விபத்தில் இறந்தது பற்றி தீர விசாரிக்க வேண்டும்' என்று கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார். இந்த வழக்கில் துப்பு துலக்க துணை போலீஸ் சூப்பிரண்டு ரங்கராஜன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தயாளன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

கோமதியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-

திருநிலையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தபோது கார் டிரைவர் பாலாஜி என்பவருக்கும் எனக்கும் காதல் ஏற்பட்டது. இந்த நிலையில் எனக்கும், கணேஷுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. என்னை கட்டாயப்படுத்தி கணேஷுக்கு திருமணம் செய்து வைத்தனர். பாலாஜி எனக்கு அன்பளிப்பாக கொடுத்த செல்போனில் `ஏதாவது செய்' என்று கூறினேன்.
ஆனால் அவர் லாரியை ஏற்றி கணேஷை கொல்வார் என்று நினைக்கவில்லை என்று கூறினார். உடனே போலீசார் பாலாஜியை பிடித்து வந்து விசாரணை நடத்தினர். அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

``நான் கோமதியை உயிருக்கு உயிராக காதலித்தேன். திருமணமான பின்னும் அவள் அடிக்கடி எனக்கு போன் செய்து எப்படியாவது என்னை காப்பாற்று என்று கெஞ்சினாள். என்னாலும் அவளை மறக்க முடியவில்லை. அதனால் கடந்த 23-ந்தேதி இருவரும் போனிலேயே பேசி கணேஷை கொலை செய்ய திட்டம் தீட்டினோம். அதன்படி அதிகாலையில் திருநிலையில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு பொன்னேரி வந்தேன்.

அங்கு ஆளில்லாமல் நின்ற லாரியை திருடிச்சென்று வாழைத்தோட்டத்துக்கு சென்ற கணேஷின் மீது ஏற்றி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டேன்'' என்று கூறினார்.

கணேஷ் விபத்தில் இறந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து கோமதியையும், அவரது கள்ளக்காதலன் பாலாஜியையும் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தீவிரமாக விசாரித்து திறமையாக துப்பு துலக்கிய தனிப்படை போலீசாரை துணை போலீஸ் சூப்பிரண்டு ரங்கராஜன் பாராட்டி ரொக்கப்பரிசு வழங்கினார்.

------------

இளைஞர்களே, உங்கள் தாயாரைப் போன்றோ, தமக்கைகளைப் போன்றோ இக்காலத்துப் பெண்கள் இருப்பார்கள் என்று கனவு காணாதீர்கள். இன்றைய நிலையில் திருமணம் என்பது பாம்புப் புற்று! ஜாக்கிறதை!!

3 மறுமொழிகள்:

')) said...

///இளைஞர்களே, உங்கள் தாயாரைப் போன்றோ, தமக்கைகளைப் போன்றோ இக்காலத்துப் பெண்கள் இருப்பார்கள் என்று கனவு காணாதீர்கள். இன்றைய நிலையில் திருமணம் என்பது பாம்புப் புற்று! ஜாக்கிறதை!!///

ம்ம்ம்ம்ம்ம் என்ன கொடுமை இது

')) said...

ஐயோ கொடுமையே பாவம் பலியானது அப்பாவி உயிர்... அந்த தே____ அவனோடி ஒடிப்போயிறுக்க வேண்டியதுதானே? செலவு மிச்சமாயிருக்கும் ஒரு உயிரும் தப்பிச்சிருக்கும்...
இன்னும் கொஞ்ச நாள்ள திருமணம் என்பது ஆபுர்வமாகிவிடும்....


தமிழ். சரவண்ன
http://tamizhsaran-antidowry.blogspot.com

')) said...

இன்னும் கொஞ்ச நாளில் தமிழ்நாட்டில் "கொலை மட்டுமே செய்யும்" பத்தினிகளின் எண்ணிக்கை அதிகமாகவிடும் போலிருக்கிறதே! புரட்சிக்கவி பாரதி கனவில் கூட காணாத புதுமைப்பெண்கள். வாழ்க இந்திய சமுதாயம்!!!