உங்கள் திருமணத்தன்றும் இதுபோல் நிகழலாம்!

மங்களூரில் திருமண மேடையில் திடீர் பரபரப்பு - திருமணத்தை புகைப்படம் எடுக்க வந்த காதலனை மணந்த மணப்பெண்.

பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை உதறிவிட்டு திருமணத்துக்கு புகைப்படம் எடுக்க வந்த காதலனுக்கே மாலையை சூட்டி கணவனாக்கிக்கொண்ட மணப் பெண்ணின் துணிச்சலான சம்பவம் மங்களூரில் நடந்துள்ளது.

மங்களூர் பண்ட்வால் பகுதியில் உள்ள மடியத்தார் என்ற இடத்தை சேர்ந்தவர் நோனையா முல்யா. இவருடைய மகள் பவ்யா (வயது 21). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் (வயது 27) என்ற வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்களது திருமணம் மங்களூர் பி.ஜி.ரோடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த திருமணத்தை படம் பிடிக்கும் பொறுப்பு பிரீத்தம் குமார் என்ற போட்டோகிராபரிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது.

நேற்று காலை திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த நண்பர்களும், உறவினர்களும் ஏராளமானவர்கள் வந்து இருந்தார்கள்.

மணமேடையில் மணப்பெண் பவ்யா, மணக்கோலத்தில் அமர்ந்து இருந்தார். திருமணத்தை படம் பிடிக்க பிரீத்தம் குமார், கேமரா கோணங்களை சரிபார்த்துக் கொண்டு இருந்தார். சிறிது நேரத்தில் மாப்பிள்ளை மிடுக்குடன், வெங்கடேஷ் வந்து மணமேடையில் அமர்ந்தார்.

திருமணத்தை நடத்த வந்த புரோகிதர், மணமக்களிடம் மாலை மாற்றிக் கொள்ளும்படி தெரிவித்தார். இந்த காட்சியை படம் பிடிக்க பிரீத்தம் குமார், தயார் நிலையில் இருந்தார்.

அப்போது யாரும் எதிர்பார்க்காத சம்பவம் ஒன்று நடந்தது. மாப்பிள்ளை கழுத்தில் மாலை சூட வேண்டிய பவ்யா, அந்த மாலையை அப்படியே போட்டோகிராபர் பிரீத்தம் குமார் கழுத்தில் போட்டு விட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரீத்தம் குமார், அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
அவருக்கு ஏன் மணப்பெண் மாலை அணிவித்தார், போட்டோகிராபர் ஏன் தலைதெறிக்க ஓட்டம் பிடிக்கிறார் என்பது புரியாத புதிராக இருந்தது.
இதற்கிடையே சிலர் ஓட்டமாக ஓடி, பிரீத்தம் குமாரை பிடித்து வந்தனர். பின்னர் மணமகளிடம் இதுகுறித்து விசாரித்தனர்.

அப்போது, ஓட்டம் பிடித்த பிரீத்தம் குமாருக்கும், பவ்யாவுக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்தது என்பதும், இருவரும் காதலர்கள் என்ற தகவலும் தெரியவந்தது.

பவ்யா வீட்டில் 8 மாதங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை படம் பிடிக்க பிரித்தம் குமார் வந்து இருந்தார். அப்போது அவருக்கும், பவ்யாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பிரீத்தம் குமாரிடம் பவ்யா தெரிவித்தார். அதற்கு பிரீத்தம் குமாரும் ஒப்புக் கொண்டார். ஆனால் , ``இதோ...அதோ'' என்று காலம் கடத்தி வந்தார். பவ்யா கேட்கும்போதெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி பிரீத்தம் குமார் தட்டி கழித்து வந்தார்.

காதலன் தன்னை ஏமாற்ற முயற்சிக்கிறார் என்பதை அறிந்த பவ்யா, எப்படியாவது அவரை திருமணம் செய்தே தீருவேன் என்று உறுதி எடுத்துக் கொண்டார். அதன்படி காதும் காதும் வைத்தது போல தனது திட்டத்தை தனக்குள்ளேயே ரகசியமாக வைத்துக் கொண்டார்.

இந்த சூழ்நிலையில் தான் அவருக்கும், வெங்கடேசுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நேற்று காலையில் திருமணம் நடைபெற இருந்த நேரத்தில் கிடுக்கிப் பிடி போட்டு பிரீத்தம் குமாருக்கு, பவ்யா அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். மணந்தால் இவரைத்தான் மணப்பேன் என்று பவ்யா கூறினார்.

இதுகுறித்து பிரீத்தம் குமாரிடம், பவ்யாவின் உறவினர்கள் விசாரித்தார்கள். பவ்யாவை காதலிக்கவில்லை என்றும், பவ்யாவை திருமணம் செய்ய முடியாது என்றும் பிரீத்தம் குமார் மறுத்தார்.

இதுபற்றி பண்ட்வால் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் இந்து சங்கம் மற்றும் பா.ஜனதா கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. ஒருவழியாக பிரீத்தம் குமார் திருமணத்துக்கு சம்மதித்தார். அதன்பின், ஏற்கனவே திருமண ஏற்பாடுகள் நடந்த ஓட்டல் அருகே உள்ள சண்டிகா பரமேஸ்வரா கோவிலில் இருவருக்கும் திருமணம் நடந்தது.
-----------

அதெல்லாம் சரிதன் ஐயா, அந்த அப்பாவி மணமகன் வெங்கடேஷ் பட்ட அவமானத்திற்கு யார் பதில் சொல்வது? ஆண்மகன் வாழ்க்கை என்ன ஒரு விளையாட்டுப் பொருளா? என்னடாஅநியாயம்! இதைப் பற்றி கவலைப் படுவோர் யாருமில்லையே!

6 மறுமொழிகள்:

')) said...

என்ன கொடுமை வெங்கடேஷ் !!!!

குஜலகுமாரி said...

அந்த சிறுக்கிமவ செஞ்சது தப்புத்தான்.ஆனா அவளை செய்ய தூணடினது ஒரு எடுப்பட்டபயதானப்பா? பிரீத்தம் குமார் மட்டும் ஒழுங்கான பயலா என்ன?

')) said...

பெற்றேhரின் கட்டாயத்தால் நடந்த திருமணம். இதில் பலியாக்கப்பட்டிருப்பது இரண்டு ஆண்கள். இரண்டாவது ஆளின் கதை உண்மையா என்று தெரியவில்லை அல்லது அந்த ஆளும் பலிகடாவாக்கப்பட்டிருக்கலாம். பெண்ணைப் பெற்றவர்கள் தங்களது சுயநலத்திற்காக பெண்ணின் வாழ்க்கையை கெடுக்கிறhர்கள். இதுபோன்ற பெற்றேhர்களுக்குப் பிறந்த பெண்கள் தங்கள் சுயநலத்திற்காக அப்பாவி ஆண்களை பலிகடாவாக்கி பொய் வரதட்சணை கேசுகளில் சிக்கவைக்கிறhர்கள். கடைசியில் பாதிக்கப்படுவது அப்பாவி இளைஞர்களும் அவர்களது பெற்றேhரகளும் தான்.

கடைசியில் அந்த வெங்கடேசனுக்கு கிடைப்பது அவமானம் மட்டுமே. நீதியெல்லாம் கிடைக்காது இங்கே. நீதிமன்றத்தில் நீதி தேவதையே தன் உயிரையும், மானத்தையும் காப்பாற்றிக்கொள்ள பாதுகாப்பான இடம் தேடி அலைந்து கொண்டிருக்கிறhள் அப்படியிருக்கும்போது அதுவும் ஒரு ஆணுக்கு நீதி கிடைத்து விடுமா இந்த நாட்டில்?

')) said...

ஐயோ கொடுமையே நல்ல வேள கல்யாணத்துக்கு முன்னாடியே அவமானப்பட்டாலும் இவரு தப்பிச்சாரு இல்லாட்டி ஒன்னு இது போல கேசுங்க ஒன்னு பொய்கேசு போடும் இல்லாடி ஆளையே போட்டும்

http://tamizhsaran-antidowry.blogspot.com

')) said...

கடைசியில் அந்த வெங்கடேசனுக்கு கிடைப்பது அவமானம் மட்டுமே. நீதியெல்லாம் கிடைக்காது இங்கே. நீதிமன்றத்தில் நீதி தேவதையே தன் உயிரையும், மானத்தையும் காப்பாற்றிக்கொள்ள பாதுகாப்பான இடம் தேடி அலைந்து கொண்டிருக்கிறhள் அப்படியிருக்கும்போது அதுவும் ஒரு ஆணுக்கு நீதி கிடைத்து விடுமா இந்த நாட்டில்?

Right said Fred!

')) said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்