இதுவல்லவோ உண்மைக் காதல்!

கள்ளத்தொடர்பை கணவன் கண்டித்ததால் இளம் பெண் விஷம் குடித்து சாவு கள்ளக்காதலன் உயிர் ஊசல்!
-------------------------

ஆகா, இதுவல்லவோ தெய்வீகக் காதல்! இத்தகைய காதலைத்தானே அனைத்து சினிமாக்களும், ஊடகங்களும், “பப் பரொ” பெண்ணியவாதிகளும் பரப்பிவருகின்றனர்!

இப்போது செய்தியைப் படியுங்கள்:-
--------------------------

விழுப்புரம், மார்ச்.12 - 2009 (தினத்தந்தி). கள்ளத்தொடர்பை கணவன் கண்டித்ததால் இளம்பெண் விஷம் குடித்து இறந்தார். அவருடைய கள்ளக் காதலன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார்.

விழுப்புரம் அருகே உள்ள தென்குச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வடமலை. கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி பிரேமா (வயது 26). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. 2 வயதில் இந்து என்ற பெண் குழந்தை உள்ளது. வடமலையின் எதிர் வீட்டில் ராஜவேலு என்பவர் தங்கியுள்ளார். ராஜவேலு விற்கும் பிரேமாவிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. வடமலைக்கு தெரியாமல் இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜவேலு, பிரேமா ஆகியோர் தங்களது வீட்டை விட்டு சென்னைக்கு சென்று குடும்பம் நடத்தி வந்தனர்.

பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்குச்சி பாளையம் கிராமத்திற்கு இருவரும் வந்துள்ளனர். அப்போது அவர்கள் இருவரையும் அழைத்து வடமலை கண்டித்துள்ளார். இதனால் அவமானம் அடைந்த ராஜவேலு, பிரேமா ஆகிய இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து திருப்பாச்சனூர் கோழிப்பண்ணை அருகே இருவரும் பூச்சி மருந்தை குடித்தனர். இதில் பிரேமா சம்பவ இடத்திலேயே இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ராஜ வேலுவை அக்கம் பக்கத்தினர் உடனடியாக விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் உயிருக்கு போராடிய அவரை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.