வரதட்சணை கொடுத்ததாக பெண்ணின் தந்தை மீது வழக்கு

மானாமதுரை அருகே மணமகனின் குடும்பத்திற்கு வரதட்சணை கொடுத்ததாக பெண்ணின் தந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை அருகே இடைய மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் கனிமொழி (வயது 25). இவருக்கும் மானாமதுரை சோமசுந்தரம் காலனியை சேர்ந்த ஆறுமுகம் மகன் அருளாழி என்பவருக்கும் கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது மணமகனுக்கு ஒரு லட்சம் ரொக்க பணம், 45 பவுன் நகைகள் மற்றும் ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இதற்கிடையில் 2008ம் ஆண்டு கூடுதலாக ரூ.1 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்துவதாக மானாமதுரை போலீஸ் நிலையத்தில் கனி மொழி புகார் செய்தார். அதன் பேரில் அருளாழி உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கோர்ட் டில் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருமணத்தின் போது வரதட்சணை கொடுத்ததாக சுப்பிரமணியன் தனது வாக்கு மூலத்தில் தெரிவித்தார்.

வரதட்சணை கொடுப்பது குற்றம் என்பதால் அதன் அடிப்படையில் சுப்பிர மணியன் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று மானாமதுரை கோர்ட்டில் ஆறுமுகம் மனு செய்தார். நீதிபதி ரவி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கலாவதி விசாரணை நடத்தி வரதட்சணைகொடுத்ததாக சுப்பிரம ணியன் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

============

இதுபோல் நிறைய வழக்குகள் பதியப்பட வேண்டும். அப்போதுதான் பொய் டெம்பிளேட் 498A கேசுகள் பதிவது நிற்கும்!

3 மறுமொழிகள்:

')) said...

சபாஷ். இப்போதாவது நீதிதேவதையின் கண்கள் திறக்கப்பட்டு அனைவருக்கும் நீதி கிடைக்கும் என நம்பலாம்!

இரண்டு திருடர்கள் கதை:

ஒரு திருடன் வரதட்சணை கொடுத்தவன், இன்னொரு திருடன் வரதட்சனை வாங்கியவன். இருவரும் சேர்ந்து திருமணம் என்ற பெயரில் சமுதாயத்தை கொள்ளையடிக்கிறhர்கள். பிறகு சில நாட்கள் கழித்து திருடிய பொருளை பங்கிடும்போது கொடுத்த திருடன் வாங்கியவன் மீது புகார் செய்கிறhன். இந்த இருவரில் எவன் உத்தமன்?

போலீசுக்கும், நீதிபதிகளுக்கும் இந்த சின்ன விஷயத்தை புரிந்து கொள்ளும் அளவிற்கு அறிவில்லையா?

இது போதாதென்று பொய் கேசுகள் வேறு பதிவு செய்யப்படுகின்றன. நல்ல நாடு, நல்ல சட்டம். அடத்தூ!!!

')) said...

மாப்பு வச்சிட்டான்டா ஆப்பு... இனிமே ஒரு ______ நான் அவ்வளவு கொடுத்தேன் இவ்வளவு கொடுத்தேன்னு கதவுட்டுட்டு திரிஞ்ச புடிச்ச உள்ள போடனும்...

')) said...

பயந்து ஓடுவது கொலைகளின் கொள்கை DVA ,498a வை தன் புத்தி சாமர்த்தியத்தால் வென்ற முதல்வன் ஒரு தமிழன் படியுங்கள் அவனது தீரச் செயலை.
http://misuse498adva.blogspot.in
பாதகம் செய்பவரை கண்டால் பயம்கொள்ளல் ஆகாது பாப்பா மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா.