498A சட்டம் பெருமளவில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்கிறார் இந்தியாவின் தலைமை நீதிபதி

இதையே முன்பு இந்திய குடியரசுத் தலைவரும் கூறியுள்ளது உங்களுக்கு நினைவிருக்கும்.


சிங்கத்தின் குகையிலேயே உண்மையைப் போட்டு உடைத்துள்ள தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் அவர்களைப் பாரட்டுகிறோம்!

நம் அரசும் நிதிபதிகளும் இதுபோன்ற கொடுங்கோன்மை சட்டங்களைத் திருத்த முயல்வதை எதிர்த்துக்கொண்டு, இந்தியாவின் குடும்ப வாழ்க்கை முறையை முழுதுமாக ஒழித்துக்கட்ட கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படும் "தேசிய பெண்கள் ஆணையம்" (National Council for Women - NCW) 31-01-2009 அன்று நிகழ்த்திய “திருமணச் சட்டங்கள் - பிரச்னைகளும் சவால்களும்” என்பது பற்றிய கருத்தரங்கில் பேசிய இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு கே.ஜி.பாலகிருஷ்ணன் அவர்கள் இந்திய சமூகத்திற்கே எதிரான Sec 498A IPC பற்றி ஆணித்தரமாக “இந்தச் சட்டம் முழுதுமாக துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது” ("It is being grossly misused") என்று கூறி, தான் உண்மையான நீதியரசர் என்பதை நிரூபித்திருக்கிறார்!

மேலும் அவர், ”கணவன், மனைவியிடையே நிகழும் கருத்து வேற்றுமைகளுக்கும் பிரச்னைகளுக்கும் சிறிதும் தொடர்பில்லாத நபர்களைக் கூட அநியாயமாக புகார்களில் சேர்த்து அவர்களைத் துன்பப்படுத்துகிறார்கள் ("relatives not involved with a matrimonial dispute were unfairly implicated") என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஆனால் இந்த கொடுங்கோன்மை சட்டத்தினால் பெருமளவு பண ஆதாயம் பெற்றுவரும் இந்த ஆணையத்தின் தலவராக இருக்கும் கிரிஜா வியாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில் “இந்தச் சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்பதை ஒத்துக்கொள்ள முடியாது. மக்களுக்கு போதிய அறிவு இல்லாததனால் பொய் கேசு போடுகிறார்கள். இதனால் வக்கீல்களும் போலீஸ்காரர்களும் தவறான ஆதாயம் பெறுகிறார்கள். ஆனால் இந்தச் சட்டத்தைத் திருத்த அவசியமில்லை” என்று கூறியிருக்கிறார்.

இந்த ஆணையம் நம்முடைய வரிப்பணத்தைக் கொண்டு நடத்தப்படும் ஆணையம். நம் பணத்தைக் கொண்டு நம் ரத்தத்தையே உறிஞ்சுகின்றது இந்த நச்சுப்பாம்பு!!

தலைமை நீதிபதி மேலும் பேசுகையில் “இதுபோன்ற சட்ட துஷ்பிரயோகத்தை அறிந்துதான் சமீபத்தில் குற்றவியல் செயல்பாட்டு நெறிமுறை (CrPC) திருத்தப்பட்டிருக்கிறது. இது ஒரு நல்ல சட்டத் திருத்தம். காவல் துறையினர் தகுந்த காரணமில்லாமல் கைது நடவடிக்கை எடுப்பதை இது நிறுத்திவிடும். பொய் கேசுகளில் கைது செய்வதையும் இது தடுக்கும். இது சமூகத்திற்கு நல்லது.” என்று அடித்துச் சொல்லியிருக்கிறார்.

இந்த சட்டத் திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலையும் பெற்று அமுலுக்கு வந்துவிட்டது. ஆனால் இதையும் அந்த கிரிஜா வியாஸ் எதிர்த்திருக்கிறார்.
ஏன்?

சிம்பிள்! இவர்கள் அடித்து வரும் பகல் கொள்ளை நின்றுவிடுமே என்கிற கிலி அய்யா! மக்களின் நல்வாழ்வைப்பற்றி இவர்களுக்கு என்ன கவலை. பல கனவுகளுடன் குடும்ப வாழ்வில் அடியெடுத்து வைக்கும் பெண்களின் மனத்தில் விஷ வித்தை விதைத்து இதுபோன்ற பொய் கேசுகளைப் போட வைத்து கணவன் மற்றும் அவர்களுடைய குடுமபத்தினர் மட்டுமின்றி, புகார் கொடுத்த பெண்களின் மணவாழ்க்கையையும் சீரழித்து இந்நாட்டை அந்நிய சக்திகளுக்கு அடிமைப் படுத்தும் கேடுகெட்ட முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள் இக்கெடுமதியினர்.

பெண்களைப் பற்றி இவர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் கீழ்மட்ட சமுதாயத்தினருக்கு ஏதேனும் செய்யட்டுமே.

4 மறுமொழிகள்:

')) said...

நேற்றைய “தமிழ் முரசு” இதழில் வந்துள்ல செய்தி:

வரதட்சணை கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வேதனை

புதுடெல்லி, பிப்.1-
வரதட்சணை கொடுமை சட்டத்தின் சில பிரிவுகள், தவறாக பயன்படுத்தப்படுகிறது என தேசிய பெண்கள் கமிஷன் கருத்தரங்கில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

வரதட்சணை கொடுமை சட்டம் பெண்களால் தவறாக பயன்படுவதாக பரவலாக புகார் எழுந்துள்ளது. பெண்கள் கொடுக்கும் புகாரின் அடிப்படையில், கணவரின் குடும்பத்தினரை உடனடியாக கைது செய்ய இந்த சட்டபிரிவுகளில் இடம் உள்ளது. இதற்கு எதிராக பாதிக்கப்பட்ட ஆண்கள் சங்கத்தினர் பலர் போராட்டங்கள் நடத்தியுள்ளனர். சுயநலத்துக்காகவும், பழிவாங்கவும் இச்சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்து கின்றனர் என அவர்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில் வரதட்சணை கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியே ஒப்புக் கொண்டுள்ளார்.

திருமணச் சட்டம் - பிரச்னைகளும் - சவால்களும் என்ற தலைப்பிலான கருத்தரங்கை தேசிய பெண்கள் கமிஷன் டெல்லியில் நேற்று நடத்தியது. இதில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். அப்போது அவர் பேசியதாவது:

சில வழக்குகளில் வரதட்சணை கொடுமை சட்டத்தின் 498ஏ பிரிவு தவறாக பயன்படுத்தப் படுகிறது. இதனால் குற்றவியல் நடைமுறை சட்டத்தில் சில மாற்றங்கள் பார்லிமென்ட் மூலமாக செய்யப்பட்டுள்ளன. இந்த சீர்த்திருத்தங்கள் நன்றாக உள்ளது. பொய் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இது ஆறுதல் அளிக்கும்.
இவ்வாறு தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் கூறினார்.

ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்த தேசிய பெண்கள் கமிஷன் தலைவர் கிரிஜா வியாஸ், லீலீமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால் 498ஏ பிரிவின் கீழ் பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. போலீசாரும், வக்கீல்களும்தான் இதற்கு காரணம். ஆனால் இந்த சட்டப்பிரிவு தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று கூறமாட்டேன். இச்சட்டத்தை மறுபரிசீலனை செய்ய தேவை இல்லை. ஆனால், சில என்.ஜி.ஓ அமைப்புகள், இச்சட்டத்தை மறுபரிசீலணின் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. இதுபற்றி பெண்கள் கமிஷன் ஆராய்ந்து கொண்டிருக்கிறது என்றார்.

')) said...

இதுபோல் செய்திகளால் உள்ளம் குளிர்கின்றது....
மற்றும் தினமலரில் வெளியிட்டுள்ள மற்றோரு இனிப்பான செய்தி

http://www.dinamalar.com/kutramnewsdetail.asp?News_id=2432&cls=row4&ncat=IN

')) said...

IPC 498A சட்டம் என்னும் ஆயுதத்தை சில கயவர்கள் தவறhக பயன்படுத்தி அப்பாவிகளை துன்புறுத்துகிறhர்கள். அதை ஜனாதிபதியும், தலைமை நீதிபதியும் வேடிக்கைப் பார்த்துவிட்டு துயரப்படுவர்களுக்கு கண்ணீரை துடைப்பற்கு கைக்குட்டை கொடுத்திருப்பது போல் தான் இந்த அறிக்கைகள் உள்ளன. கயவர்களை தண்டிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, பாதிக்கப்பட்டவருக்கு என்ன நிவாரணம் என்று சொல்லவுமில்லை. எவ்வளவு வேதனைக்குறிய விஷயம் இது. சுதந்திர நாட்டில் அப்பாவிகளுக்கு வாழ வழியே இல்லையா?

Anonymous said...

oru oonamutra pennai thirumanam seitha mathia arasu oozhiyan nan migavum yematrapattu en panam ellam urinjapattu naan ritire aan piragu ennai kadan kaarannakki en manaivi aval annangal thangai pechai kettu enakku saval vidugiral. indha sattapadi yennai pazhi vaanga povadhaaga mirattu gindranar ippodhu endha sattam ennai kaakkum please sombody help me .. ramalingamgk@yahoo.com