‘தேவதையை கண்டேன்’ சினிமா பாணியில்

"வேறொருவரை மணப்பதாக கூறும் காதலி மீது நடவடிக்கை எடுங்கள்"

- புறநகர் கமிஷனரிடம் வாலிபர் புகார்

ஆலந்தூர், ஜன. 28: ‘தேவதையை கண்டேன்’ என்ற படத்தில் வருவது போன்ற சம்பவம், சென்னையில் நடந்துள்ளது.

தன்னை 4 ஆண்டுகளாக காதலித்துவிட்டு, இப்போது வேறு நபரை திருமணம் செய்யப்போவதாக கூறும் காதலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் காதலன் புகார் கொடுத்துள்ளார்.

அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியைச் சேர்ந்தவர் ஐசக் சுஜின் (25), இன்ஜினியர். இவர், சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

நந்தம்பாக்கம் கணபதி காலனியைச் சேர்ந்த ஷாலினி (23) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒரு நண்பர் மூலம் எனக்கு பழக்கமானார். இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். சென்னையில் உள்ள ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் ஷாலினி படித்தார். அவருக்கு கல்லூரிக் கட்டணம் செலுத்துவது, நகை வாங்கிக் கொடுப்பது என தாராளமாக செலவு செய்தேன். எனது வீட்டுக்கும் ஷாலினியை அழைத்துச் செல்வேன். அப்போது மருமகள் போலவே அவரை எனது பெற்றோர் நடத்தினர்.

இந்நிலையில், கடந்த மாதம் வேறு நபருடன் தனக்கு திருமணம் நடக்கப்போகிறது. இனி என்னுடன் பேசாதீர்கள் என்று ஷாலினி கூறிவிட்டார். என்னால் ஷாலினியை மறக்க முடியவில்லை. அதனால் அவரது வீட்டுக்கு போய் பார்த்தேன். அப்போது ஷாலினியின் தந்தை, என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். 4 ஆண்டுகளாக என்னைக் காதலித்துவிட்டு வேறு நபரை மணக்கப் போதவதாகக் கூறும் ஷாலினி மீதும் கொலை மிரட்டல் விடுத்த அவரது தந்தை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஜசக் சுஜின் மனுவில் கூறியுள்ளார். இதுகுறித்து விசாரிக்க பரங்கிமலை இன்ஸ்பெக்டருக்கு, கமிஷனர் ஜாங்கிட் உத்தரவிட்டுள்ளார்.

------------'

இது வித்தியாசமான புகார். ஆனால் தினமும் நாம் பார்க்கும் செய்தி, பல பெண்கள் தன் காதலனுடன் வருடக்கணக்கில் சுற்றி விட்டு, ”என்னை மணப்பதாக வாக்களித்து ஜாலியாக இருந்துவிட்டு (என்னவோ இவளுடைய ஒத்துழைப்பு இல்லாமல் அவன் மட்டும் தனக்குத்தானே ஜாலியாக இருந்தான் போல!) என்னை கைவிட்டுவிட்டான்” என்று பெண்கள் புகார் கொடுப்பதும் உடனே அந்த ஆண்களை கற்பழிப்பு கேசில் புக் செய்து கைது செய்வதும்தான் நடைமுறை.