மனைவி இறந்தால் கணவன்தான் குற்றவாளி!

பொங்கல் சீர் வரிசையை குறை கூறியதால் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் தற்கொலை - திருவொற்றியூர், ஜன.17- 2009

திருவொற்றினிர் கிராமத்தெரு சோமசுந்தரம் நகரை சேர்ந்தவர் கலிய மூர்த்தி. இவருடைய மகள் அருள் செல்வி (வயது 29). எம்.காம். பட்டதாரி. இவர் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர்.

இவருக்கும் எர்ணாவூர் பூம்புகார் நகரை சேர்ந்த பாண்டியனுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பாண்டியன் தனியார் கூரியர் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். திருமணத்தின்போது பெண்ணுக்கு 10 பவுன் நகை, மணமகனுக்கு 10 பவுன் நகை மோட்டார் சைக்கிள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.

தற்போது கர்ப்பமாக உள்ள அருள் செல்வி, தலைப்பொங்கல் கொண்டாட தாய் வீட்டு வந்தார். வீட்டுக்கு வந்தது முதல் சோகமாக இருந்த அருள் செல்வி, வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அருள் செல்வியின் தாயார் கிருஷ்ணவேணி திருவொற்றியூர் போலீசில் கொடுத்த புகார் மனுவில், ``நாங்கள் கொடுத்த பொங்கல் சீர் வரிசை குறைவாக உள்ளது என்று கூறி என் மகளை அவருடைய கணவர் பாண்டியனும், அவருடைய தாயாரும் திட்டியுள்ளனர். சம்பள பணத்தை குறைவாக கொடுத்ததாக கூறி என் மகளை பாண்டியன் கன்னத்தில் அறைந்துள்ளார். என் மகள் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

உடனே கணவர் பாண்டியனை போலீசார் கைது செய்துவிட்டனர். அவர்மீது மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். முதலில் வரதட்சணைக் கொடுமை என்று பதிவு செய்து, பிறகு தற்கொலைக்குத் தூண்டினார் என்று மாற்றிவிட்டனர் (ஏனெனில் இது இன்னும் கடுமையானது).

ஒரு மனைவி திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் இறந்தால் ரெவின்யூ அதிகாரி விசாரணை நடத்தவேண்டும். போலீஸ் அதன் பிறகு தான் கைது நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால் மனைவியின் பெற்றோர் சொன்னால் போதும் என்று முடிவெடுத்து விசாரணை அறிக்கை வருமுன்னே கைது செய்ய அவசரம் ஏன்?

இப்படி சட்டமும் நடைமுறையும் முழுதும் ஆண்களுக்கு எதிராக இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள். கைது செய்யப்படும் அனைவரும் குற்றவாளிகளல்ல. ஒரு மணமான பெண் இறந்து விட்டால் உடனே அவளுடைய கணவனும் மாமியார் மாமனாரும் ஆட்டோமாடிகாக குற்றவாளிகளா? இந்தப் பதிவை வாசிக்கும் அன்பர்கள் சிந்தித்துப் பாருங்கள். நடுநிலையாகச் சிந்திக்கும் அனைவருக்கும் நான் சொல்லும் நியாயம் புரியும். டோண்டு போன்ற மனநல மருத்துவரை உடனே அணுகவேண்டிய நிலையிலிருக்கும் நபர்களுக்கு வேணுமானால் புரியாமல் இருக்கும்.