குடித்துக்கொண்டே ஆபாசப்படம் பார்க்கிறாள் மனைவி

"குடித்துக்கொண்டே ஆபாசப்படம் பார்க்கிறாள். தட்டிக்கேட்டால் அடித்து உதைக்கிறாள்" என்று 4 குழந்தைகளின் தந்தை புறநகர் போலீஸ் கமிஷனரிடம் மனைவி மீது புகார் செய்தார்.

ஆண்கள் குடித்து விட்டு வந்து அடிப்பதாகவும், ஆபாசப்படத்தை போட்டுப்பார்த்து அதேபோல நடக்க வற்புறுத்துவதாகவும் இதுவரை பெண்கள்தான் புகார் செய்து வந்தனர். இதற்கு மாறாக சென்னை புறநகர் கமிஷனர் அலுவலகத்துக்கு 4 குழந்தைகளுடன் வந்த அப்பாவி ஒருவர் புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

"எனது பெயர் கந்தவேல் (வயது38). எனது மனைவியின் பெயர் சகாயம் (வயது30). எங்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

ஆபாசப்படம் பார்க்கும் மனைவி

எனது மனைவி சகாயம் அவரது சகோதரர் அந்தோணி என்பவருடன் சேர்ந்து மது குடிக்கிறாள். குடிபோதையில் வீட்டிலேயே டி.வி.யில் ஆபாசப்படத்தை போட்டுப்பார்த்து ரசிக்கிறாள். இதை தட்டிக்கேட்டால் என்னை அடித்து உதைக்கிறாள்.

சம்பவத்தன்றும் இதேபோல ஆபாசப்படம் பார்த்துக்கொண்டிருந்தாள். இதனை கண்டித்த என்னையும், எனது குழந்தைகளையும் அடித்து, உதைத்து வீட்டை விட்டே துரத்திவிட்டாள்.

மிரட்டல்

நானும் வேறு வழி இல்லாமல் அதே பகுதியில் வேறு வீடு பார்த்து எனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறேன். ஏற்கனவே ஒரு முறை இதேபோல எனது மனைவி நடந்ததால் இதுபற்றி பல்லாவரம் போலீசில் புகார் செய்தேன். போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இருந்தாலும் நாளுக்கு நாள் அவளது தொல்லை அதிகரித்து வருகிறது. என்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுகிறாள். எனவே அவள் மீதும் அவளுக்கு உடந்தையாக இருக்கும் உறவினர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் இதுபற்றி விசாரணை நடத்த மீனம்பாக்கம் உதவி கமிஷனர் குப்புசாமிக்கு உத்தரவிட்டுள்ளார்.

~ செய்தி - தினத்தந்தி ஜன.4 - 2008.

====================

இதே பொண்ற புகாரை ஒரு மனைவி கொடுத்திருந்தால் உடனே நம் போலீஸ் சிங்கங்கள் பாய்ந்து வந்து கணவனையும அவனது பெற்றோரையும் கைது செய்திருப்பார்கள். அல்லது என்கவுண்டரில் போட்டுத் தள்ளியிருப்பார்கள். பெண்ணியவாதிகளும் ”அது சரிதான் இவர்களை இப்படித்தான் கொல்லவேண்டும்” என்று கூச்சலிட்டிருப்பார்கள்.

ஆனால் இப்போது தவறிழைத்திருப்பது மனைவிதானே, “அய்யோ, பாவம், பேதைப் பெண் என்று” பேசாமலிருந்து விடுவார்கள்.

10 மறுமொழிகள்:

Anonymous said...

your posts are the traits of a person suffering from psychological disorder.

')) said...

//எனது மனைவி சகாயம் அவரது சகோதரர் அந்தோணி என்பவருடன் சேர்ந்து மது குடிக்கிறாள்.//

இது தப்பா ??

// குடிபோதையில் வீட்டிலேயே டி.வி.யில் ஆபாசப்படத்தை போட்டுப்பார்த்து ரசிக்கிறாள்//

இது தப்பா ???

. இதை தட்டிக்கேட்டால் என்னை அடித்து உதைக்கிறாள்.

இவரு ஏன் தட்டி கேக்கிறார். இவர் ஆணாதலால் இவர் இவரோட சகோதரரோட தண்ணி அடிக்கலாம் , ஆபாச படம் ( அடங்கொய்யால.. இதுக்கு பேரு ஆபாச படமா !!!) பாக்கலாம். ஆனா அத ஒரு பொண்ணு செஞ்ச அதெப்படின்னு தட்டி கேப்பாராமா ??

கொடுமைடா சாமி ...

')) said...

அய்யா அனானிமசு,

இப்ப வருடத்துக்கு ஆயிரக்கணக்கிலதான் 498A கேசு வந்துகிட்டிருக்கு. இன்னும் ஒண்ணு ரெண்டு வருடத்தில லட்சக்கணக்கில வந்துடும். உங்க மனைவியும் கேசு போட்டு உங்களை உள்ள தள்ளிடுவாங்க. அப்பறம் தெரியும் யாரு சைகலாஜிகல் டிசாடர் அப்படின்னு.

களப்பிரர்,

தப்பேயில்லை. அப்ப இரண்டுபேரும் சமம்தானே. பிறகு ஏன் ஒரு பெண் சொன்னால் போதும், வேறு சாட்சியமே தேவையில்லை. ஆண்கள்மேல் குற்றம் நிரூபிக்கப்பட்டது என்று சட்டம் இயற்றுகிறார்கள்?

கணவன்தான் மனைவிக்கு ஜீவனாம்சம், மெயிண்டனன்ஸ் கொடுக்கவேண்டும் என்று தீர்ப்பு சொல்கிறார்கள்?

குழந்தைகளை ஏன் மனைவியிடம் மட்டும் ஒப்படைக்கிறார்கள்?

பதில் சொல்லுங்கள்!

')) said...

//அப்ப இரண்டுபேரும் சமம்தானே. பிறகு ஏன் ஒரு பெண் சொன்னால் போதும், வேறு சாட்சியமே தேவையில்லை. ஆண்கள்மேல் குற்றம் நிரூபிக்கப்பட்டது என்று சட்டம் இயற்றுகிறார்கள்?

கணவன்தான் மனைவிக்கு ஜீவனாம்சம், மெயிண்டனன்ஸ் கொடுக்கவேண்டும் என்று தீர்ப்பு சொல்கிறார்கள்?

குழந்தைகளை ஏன் மனைவியிடம் மட்டும் ஒப்படைக்கிறார்கள்?

பதில் சொல்லுங்கள்!//

அவ்வளவு கொடூரமான சட்டமா ?? கடாச வேண்டிய சட்டமே. மனச்சாட்சி இல்லாமல் உருவாக்க பட்ட சட்டங்கள்.

')) said...

இது நல்லதுக்கு காலமில்லை. நல்ல விஷயங்களைச் சொல்லி அப்பாவிகளை காட்டுமிராண்டி சட்டங்களிலிருந்து காப்பாற்றினால் சைக்கோ என்று சிலர் தவறhக தங்களது பெயரையே மறுமொழியாக்கியிருக்கிறhர்கள்.

போற்றுவார் போற்றட்டும் துhற்றுவார் துhற்றட்டும். உங்களது நற்பணி தொடரட்டும்.

முடிந்தால் இது போன்று விஷயம் தெரியாமல் பிதற்றும் சில "புத்திசாலிகளை" IPC498a, DP கேசுகளில் மாட்டிவிடுங்கள். இதுவும் ஒரு வகையில் சமுதாயத்திற்கு செய்யும் மிக உன்னதமான நற்பணியே. பொய் கேசுகளுக்கெதிராக போரடுவதை விட அதிக பொய் கேசுகளை நாட்டில் அதிகரிக்கச் செய்து அனைத்து "புத்திசாலிகளையும்" சீரழித்தால் தான் இந்த கொடுமை நாட்டை விட்டு ஒழியும், சில அரைவேக்காடுகளும் முழுவதும் வெந்து பதப்படும்.

')) said...

498a என்னும் சட்டத்தை பயன்படுத்தி ஒரு பெண் (அடிபடை தகுதி அப்பெண்ணுக்கு திருமணம் ஆகியிருக்க வேண்டும்) கணவருடைய நண்பர் என்று சொல்லி உங்களையும் சிறையில் அடைக்க முடியும் மற்றும் கோர்ட்டு கேஸ்னு உங்களையும் சும்ம நாலு அஞ்சி வருசம் அலையவைக்க முடியும்

இதுபோல் பெண்களால் ஏற்படும் கொடுமைகள் நாட்டில் லட்சக்கணக்கில் நடந்து கொண்டிருக்கின்றது....

')) said...

நல்ல வேல நம்ம ஹூரோ முந்திகிட்டாரு இல்லாட்டி அந்த காமப்பிசாசு இவருமேல 498A கேஸ போட்டு இவரு இவருடைய வயதான தாய்தந்தையர், சகோதரிகள் அப்புறம் இவரரோட நண்பர்கள் பக்கத்துவிட்டுக்காரன் எதிர்விட்டுக்காரன் எல்லாரையும் புடிச்சி புழல் சிறையில போட்டுறுக்கும்

Anonymous said...

பேதை பெண்ணல்ல.... போதை பெண்

')) said...

இதெல்லாம் நிசம் தானுங்களா?

')) said...

www.498a.org என்னும் வலைதலத்துக்கு சென்று பாருங்கள் நண்பரே உண்மை புரியும் உள்ளம் எரியும்...