கள்ளக்காதல் கலாசாரம் பெருகுகிறது

கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக கணவனை தீர்த்து கட்ட அவசரப்படுத்திய வக்கீல் மனைவி - அரிவாள் வெட்டு வழக்கில் பரபரப்பு தகவல்கள்

(ஆண்கள் அனைவரும் கிரிமினல்கள், பெண்கள் அனைவரும் ‘வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்கள்’ என்ற பொய்ப் பிரசாரத்தைப் பரப்பிக்கொண்டு பகல் கொள்ளையடிக்கும் பெண்ணியவாதிகள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், என்.ஜி.ஓக்கள் ஆகியோருக்கும், “அய்யோ பாவம், அபலைப் பெண்கள்” என்று உருகி, ஆணழிப்புச் சட்டங்களை ஆதரிப்போருக்கும், இந்த செய்தியை சமர்ப்பிக்கிறேன்!)

திருச்சி,ஜன.14- 2009 - செய்தி - தினத்தந்தி

கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக கணவனை தீர்த்து கட்டுவதற்கு வக்கீல் மனைவி வித்யா அவசரப்பட்டது பரபரப்பு தகவலாக வெளிவந்து உள்ளது.

திருச்சி சோமரசம் பேட்டை அருகில் உள்ள வாசன் சிட்டி நகரை சேர்ந்தவர் வக்கீல் வெங்கேடஷ் (வயது39). இவரது மனைவி வித்யா (30). இவர்களுக்கு உதயா என்ற ஒரு வயது பெண்குழந்தை உள்ளது. கடந்த 11-ந்தேதி இரவு வக்கீல் வெங்கேடஷ் வீட்டில் இருந்த போது ஒரு கும்பல் அவரை அரிவாளால் வெட்டியது. அவரை வெட்டி விட்டு தப்பி ஓட முயன்றவர்களில் ஒருவனை பொதுமக்களும் போலீசாரும் விரட்டி சென்று பிடித்தனர். பிடிபட்ட தணிகாசலம் என்பவனிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள்.

அப்போது வெங்கேடசை அரிவாளால் வெட்ட சொன்னது திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த இன்னொரு வக்கீலான ராஜேஷ் கண்ணா (37) என்பது தெரியவந்தது. வெங்கடேசின் மனைவி வித்யாவுடன் ராஜேஷ் கண்ணாவுக்கு இருந்த கள்ளத்தொடர்பின் காரணமாக தான் இந்த அரிவாள் வெட்டு சம்பவம் கூலிப்படை மூலம் நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையொட்டி வக்கீல் ராஜேஷ் கண்ணா, கூலிப்படையை சேர்ந்த தணிகாசலம், ரவி, செல்வம், வித்யா ஆகிய 5 பேரை சோமரசம் பேட்டை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். வித்யா கைக்குழந்தையுடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தெரிந்த விவரங்கள் வருமாறு:-

வெங்கடேஷ், ராஜேஷ் கண்ணாவின் எதிர் வீட்டில் ஒரே அப்பார்ட்மெண்டில் சில வருடங்களுக்கு முன்பு குடியிருந்திருக்கிறார். அப்போது தான் ராஜேஷ் கண்ணாவுடன் வித்யாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாம். இது அவரது கணவர் வெங்டேசுக்கு தெரிந்ததும் அவர் வீட்டை சோமரசம் பேட்டைக்கு மாற்றி இருக்கிறார். ஆனால் அதன் பின்னரும் ராஜேஷ் கண்ணா- வித்யா கள்ளத்தொடர்பு நீடித்திருக்கிறது. இதை வெங்கடேஷ் பல முறை கண்டித்து இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த வித்யா தனது கள்ளக்காதலுக்கு கணவர் தடையாக இருக்கிறாரே என நினைத்து ராஜேஷ் கண்ணாவுடன் இதுபற்றி பேசி இருக்கிறார். அப்போது தான் அவர்கள் வெங்கடேசை தீர்த்து கட்டிவிட்டு ஒன்றாக சேர்ந்து வாழலாம் என முடிவு செய்திருக்கிறார்கள்.

இதற்காக ராஜேஷ் கண்ணா தன்னிடம் வழக்கு சம்பந்தமாக வந்து சென்ற அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்த ரவி என்பவரை தேர்வு செய்து உள்ளனர். ரவி ஏற்கனவே ஒரு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டவர். அவருக்கு கூலியாக ஒரு லட்சம் ரூபாய் பேசி முதல் கட்டமாக 20 ஆயிரத்தை வித்யாவே கொடுத்து இருக்கிறார். பணம் கொடுத்த பின்னரும் வேலையை விரைவாக முடிக்காதது ஏன் என்று கேட்டு வித்யா அவசரப்படுத்தினாராம். இதைத்தொடர்ந்தே ராஜேஷ் கண்ணா ஆட்கள் வெங்கடேசை அரிவாளால் வெட்டி இருக்கிறார்கள்.

மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையின்போது வெளியாகி உள்ளது.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கூலிப்படையை சேர்ந்த ராதாகிருஷ்ணன், குமார் ஆகிய இருவரும் இன்னும் சிக்கவில்லை. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜேஷ் கண்ணா சொத்துக்காக தனது தந்தையையே பிராந்தியில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்து இருக்கிறார். கள்ளக்காதலியை அடைவதற்காக, அவரது கணவனை கொலை செய்ய கூலிப்படையை ஏவி அரிவாளால் வெட்டி உள்ளார்.கூலிப்படையாக செயல்பட்ட ரவி, தணிகாசலம், செல்வம் ஆகிய 3 பேர் மீதும் ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. எனவே இவர்கள் அனைவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான நடவடிக்கையை போலீசார் எடுத்து வருகிறார்கள்.

2 மறுமொழிகள்:

')) said...

அடத்தே_________,

ஐயோ தமிழ்நாட்ல யாரும் கல்யாணம் பண்ணிக்காதிங்கப்பா.... நம்ம வாழ்க்கையை வேட்டு வுட்டுட்டு நம்ப குடும்பத்த நடுத்தெருவுக்கு கொண்டு வந்துவிடும்.
10நிமிட சுகத்துக்கு அசைப்படும் சில காமப்பிசாசுகள்

Anonymous said...

நல்ல கைதேர்ந்த "கிரிமினல்" வழக்கறிஞர் என நிருபித்திருக்கிறhர். Universal 498A template வைத்துக்கொண்டு எத்தனை பேரின் குடி கெடுத்தார்களோ.